பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து|school caleges vastu

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் கல்வி அறிவை பொருத்தே கணக்கிடப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் கல்வியைப் புகட்டும் கல்வி அறிவைக் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வாஸ்து முறையுடன் இருக்கும் பொழுது நாட்டின் வருங்காலத் தூண்களாக மாணவச் செல்வங்கள் விளங்குவார்கள். கல்விதான் ஒரு மனிதனை சமூக ஒழுக்கம் என்கிற விஷயத்தை கற்றுக் கொடுக்கிற ஒரு கோயிலாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், இந்த நூற்றாண்டில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வேறுபாடுகளின்றி கல்வி அறிவு என்பது அனைத்து மக்களுக்கும் சென்றடைந்து விட்டது . ஆனால் நல்ல ஒரு வேலை வாய்ப்பை கொடுத்த நல்ல அறிவை கொடுக்கிற நல்ல மதிப்பெண்களை கொடுக்கிற பள்ளி கல்லூரிகள் பல்கலைக் கழகம் என்பது எது என்பதனை தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினம். அந்த வகையில் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் வாஸ்து முறையை பின்பற்றினால் நிறுவனம் மட்டுமல்ல அங்கு வருகின்ற மாணவச் செல்வங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். வாஸ்து முறையில் கல்விக் கூடங்களை அமைத்து, கிழக்கு வடக்கு திசை நோக்கி மாணவர்களை அமரவைத்து, வடக்கு கிழக்கு அதிக இடங்களை கொடுத்து ஒரு கல்வி நிறுவனத்தை அமைக்கும் பொழுது மிகப்பெரிய முன்னேற்றம் அந்த கல்வி நிறுவனம் வழியாக அனைவருக்கும் கிடைக்கும். கல்வி நிறுவனங்களுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது இன்றைக்கு மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய கல்வித் துறையில் வளர்ச்சி என்பது, நல்ல ஆசிரியர்கள், நல்ல நிர்வாகம், மிகப்பெரிய அளவில் ஒரு கட்டிட மற்றும் இட வடிவமைப்பு என்கிற விஷயத்தில் முழுமையாக இருந்தாலும், வாஸ்து சாஸ்திரம் என்கிற வகையில் ஒரு சில கட்டடங்கள் விதிமுறைகளுக்கு இல்லாது போகும் பொழுது, பெரிய  அளவில் இருக்கிற கல்வி நிறுவனங்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு வலிமை இழந்த நிறுவனமாக மாறிவிடும். இந்த இடத்தில் மிகச் சரியான வடிவமைப்பு ஒவ்வொரு அறைகளும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு பிளாட் என்று சொல்லக்கூடிய, ஒவ்வொரு தனிப்பட்ட முறையில் இருக்கக்கூடிய கட்டிடங்களும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படும் பொழுது அதிஅற்புதமான கல்வி நிறுவனமாக அதாவது, கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளிகள் சார்ந்த நிகழ்வில் மிகப் பெரிய புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும். எப்படி இன்றைக்கு நாளந்தா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றிருந்தது என்று சொல்கிறோமோ அதை போல ஒரு சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகங்கள் ஆக விளங்கும் என்பது திண்ணம்.

கேம்பஸ் மூலம் நல்ல ஒரு வேலை வாய்ப்பை வாங்கி தருகிற  , நல்ல அறிவை கொடுக்கிற, நல்ல மதிப்பெண்களை கொடுக்கிற பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகம் என்பது எது என்பதனை தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினம். அந்த வகையில் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் வாஸ்து முறையை பின்பற்றினால் அவர்கள் மட்டுமல்ல , அங்கு வருகின்ற மாணவச் செல்வங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். வாஸ்து முறையில் கல்வி கூடங்களை அமைத்து, கிழக்கு, வடக்கு திசை நோக்கி மாணவர்களை அமரவைத்து வடக்கு கிழக்கு அதிக இடங்களை கொடுத்து, ஒரு கல்வி நிறுவனத்தை அமைக்கும் பொழுது மிகப்பெரிய முன்னேற்றம் அந்த கல்வி நிறுவனம் வழியாக அனைவருக்கும் கிடைக்கும்.   நிறுவனத்தின் மொத்த  இடத்தில் தெற்கு  பகுதியில் முழுவதுமாக கட்டிடங்கள் என்பது இருக்க வேண்டும். அதற்கு பிறகு படிப்படியாக மேற்புறத்திலும், அதற்கு இணையாக அதன்பிறகு  கிழக்கு புறத்திலும் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டே வரவேண்டும். முழுவதுமாக வடக்குப் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக்கழக விளையாட்டு மைதானங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் . அப்போது மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற கல்வி நிறுவனமாக இருக்கும். கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு வகுப்பறையும், உச்ச பகுதியில் வாசல் அமையவேண்டும். எக்காரணம் கொண்டும் கல்வி நிலையத்தின் தென்மேற்கு, தெற்கு, மேற்கு சார்ந்த எதிர்மறை பகுதிகளை திறக்காது மூடப்பட்ட அமைப்பாக இருக்கவேண்டும். ஒரு பள்ளியில் வகுப்பறையில் தெற்கிலிருந்து மாணவச் செல்வங்களை வரிசையில் அமர வைத்து, தெற்கு சார்ந்த பகுதியில், மேற்கு சார்ந்த பகுதியில் காலி இடம் விடாது அமர வைக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு வகுப்பறையிலும் வாஸ்து முறையை உட்படுத்தவேண்டும்.கல்வி நிறுவனங்கள் சார்ந்த அலுவலகத்தின் நிர்வாக அறை என்பது, கிழக்கு பார்த்த சாலையாக இருக்கின்ற பட்சத்தில் வடகிழக்கு பாகத்தில் இருந்து மைதானத்தில் வழியாக உள் நுழைந்து வடக்குப்பார்த்த அமைப்பில் அலுவலகத்தை அமைக்க வேண்டும். இதே  வடக்குப்பார்த்த சாலை இருக்கக்கூடிய கட்டிடத்திற்கும் இது பொருந்தும். தெற்கு பார்த்து சாலை இருக்கும்பொழுது தென்கிழக்கு பகுதியில் வழிகளை அமைத்து மொத்த கட்டிடத்திற்கு வடமேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து அலுவலகத்தை அமைக்க வேண்டும். இதே மேற்கு பார்த்த கல்லூரி பல்கலைக்கழக பள்ளி இடமாக இருக்கின்ற பட்சத்தில் வடமேற்குப் பகுதியில் பாதை அமைத்து வடமேற்கில் மேற்கில் ஒரு வழி வைத்து உட்புறமாக கிழக்கு பார்த்து அலுவலகத்தை அமைக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பு படிக்கும் பொழுது முதல் தரமான வேலைவாய்ப்பும் முதல்தரமான பெயரையும் வழங்கக்கூடிய நிறுவனமாக இருக்கும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *