Restaurant hotel vastu |உணவு விடுதிகளுக்கு வாஸ்து

உணவு விடுதிகளுக்கு வாஸ்து உணவு விடுதிகளுக்கு வாஸ்து எனும் பொழுது தலைவாசல் என்பது மிக மிக முக்கியம் . தலை வாசலை பொருத்தளவில் வடக்கு பார்த்து இருக்கும் பொழுது கிழக்கு பாதிக்கு உள்ளாக வரவேண்டும். கிழக்கு பார்த்த பார்த்து இருக்கும் பொழுது வடக்கு பாதிப்புக்குள்ளாக வரவேண்டும். மேற்கு பார்த்து இருக்கும் பொழுது மேற்கு பாதி வடக்கில் வரவேண்டும். தெற்கு பார்த்து இருக்கும் போது கிழக்கு ஒட்டி வரவேண்டும். உணவு விடுதிகளை பொறுத்தளவில் கல்லாப்பெட்டி என்பது எக்காரணம் கொண்டும் தென்மேற்குப் பகுதியில் வைக்க வேண்டாம். தென்மேற்கு பகுதியில் பொருட்களை வைக்கக் கூடிய ஸ்டோர் ரூம் என்று சொல்லக் கூடிய அமைப்பாக மாற்றி விடுங்கள் . வடக்குதிசை பார்த்த உணவு விடுதிகளுக்கு வாசல் வடகிழக்கில் இருக்கும்பொழுது. பணம் வாங்கும் கல்லாப்பெட்டி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். கிழக்கு பார்த்து இருக்கும்பொழுது தென்கிழக்கு வடக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு பார்த்து இருக்கும் பொழுது வடக்கு பார்த்து மேற்கு மத்திய பாகத்தில் இருப்பது நலம். தெற்கு பார்த்த இடங்களில் தென்கிழக்கு கிழக்கு பார்த்து வழிக்கு மேற்காக இருப்பது நல்லது. அதேபோல காலியிடம் என்பது தெற்கு பார்த்த கடைக்கு வடக்கு பகுதியிலும் மேற்கு பார்த்த கடைகளுக்கு வடக்கு பகுதியிலும் கிழக்கு பார்த்த கடைக்கு வடக்கு பகுதியிலும் வடக்கு பார்த்த கடைகளுக்கு கிழக்கு பகுதியிலும் அமைத்துக் கொள்ளுங்கள். கழிவறைகளை பொருத்த அளவில் எந்த திசையாக இருந்தாலும் ரெஸ்டாரன்ட் என்று சொல்லக்கூடிய உணவு விடுதியின் உட்பகுதிகளில் அமைக்காமல் வெளிப்புறப் பகுதிகளில் அமைப்பது சாலச் சிறந்தது. அதனை விடுத்து ஒரு சில இடங்களில் வடகிழக்குப் பகுதியிலும், தென் கிழக்குப் பகுதியிலும் அமைத்து இருப்பார்கள். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம்.

உணவு விடுதிகளை பொறுத்தளவில் வெளியில் காலியிடம் விடுவது என்பது மேற்கும் தெற்கும் குறைத்து விடுவது நல்லது. இதே மேற்கு பார்த்து இருக்கிற உணவு விடுதிகளில் சாலைக்கு முன்பாக மேற்கில் அதிக காலி இடங்களை விட்டு கிழக்கில் எல்லைவரை கட்டிடம் கட்டும்போது அல்லது சாலையை விட உயரத்தில் ஒரு கட்டிடத்தை கட்டப்படும் போதும், அந்த உணவு விடுதி ஒரு ஓடாத உணவு விடுதி ஆக மாறிவிடும். ஆக இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. இதே விதி தெற்கு பார்த்த கடைகளுக்கும் பொருந்தும். தெற்கு பார்த்த உணவுவிடுதிகளில் சாலைகளில் அதிக இடங்களை விட்டபிறகு வடக்கு பகுதியில் இடமே இல்லாத அமைக்கும் பொழுது பெரிய தவறுகளை கொடுத்துவிடும்.ஆனால்  கிழக்கு பார்த்த சாலைகளில் பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்காது இருந்தாலும் கிழக்கில் நாம் என்ன இடம் விடுகிறோமோ அதற்கு இணையாக வடக்குப் பகுதியில் இடங்களை விடும்பொழுது நிச்சயமாக அந்த உணவு விடுதி நல்ல ஒரு பலனை கொடுக்கிற உணவுவிடுதி ஆக இருக்கும்.

இந்த விதிகள் ஸ்டார் ஓட்டல் என்று சொல்லக்கூடிய அந்த உணவு விடுதிகளுக்கும் பொருந்தும். தங்கும் விடுதி களுக்கும் பொருந்தும். தங்கும் விடுதிகள் என்று சொல்லக்கூடிய  லாட்ஜ்  சார்ந்த இடத்தில் மேற்கு பார்த்த , தெற்கு பார்த்து, அமைக்கும் பொழுது அந்த லாட்ஜ் சார்ந்த கார் நிறுத்தக்கூடிய பார்கிங் என்பது வடக்கு பகுதியில் அல்லது, கிழக்கு பகுதியில் நிறுத்துவதற்கு இடத்தை  உருவாக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக அது தவறாக முடிந்துவிடும். எந்த ரெஸ்டாரண்ட், எந்த லாட்ஜ் வாடகைக்கு விடுகிற எந்த அறைகளாக இருந்தாலும் வடகிழக்கு அறையை காலியாக வைத்திருங்கள். இது வாஸ்து ரீதியாக நன்மையை கொடுக்கும். இந்த விதி  ஓய்வு குடில்களாக இருந்தாலும் இடம் என்பது வடக்கும் கிழக்கும் அதிகம் வேண்டும். வடகிழக்கு பகுதியை எப்பொழுதும் காலியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அப்போது உணவு விடுதிகள் நன்மையை கொடுத்து லாபத்தில் இயங்கும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *