வாஸ்து நிபுணர் பற்றி:

           அருக்காணி A ஜெகநாதன் ஆகிய நான் அன்றைய கோவை மாவட்டம், ஈரோடு தாலூக்கா, பெருந்துறை அருகில் உள்ள சடயகவுண்டன்வலசு என்ற சிற்றூரில் அப்பாச்சி கவுண்டர் அருக்காணி அம்மாள் தம்பதிக்கு 1973 ஆம் ஆண்டு பிறந்தேன். 1991 ஆம் ஆண்டு வரை எங்கள் பூர்வீக ஊரில் வசித்துவிட்டு எனது சிறிய தந்தையார் அவர்களின் உணவு எண்ணெய் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அவரிடமே 2014 வரை சுமார் 23 வருடங்களாக பணியில் இருந்து வந்தேன். 1991-1997 வரை திங்களூர் என்ற இடத்திலும், பிறகு 2007 வரை கோபிசெட்டிபாளையத்திலும் வசித்து, 2008 முதல் பெருந்துறையில் வசித்து வருகிறேன்.

எனது பூர்வீக தவறான வீடு விற்றுவிட்டு வாடகை வீட்டில் சுமார் 20 வருடங்களாக வசித்துவிட்டு, இடையில் 2005 ஆம் ஆண்டு நான் எனக்கு தெரிந்த வாஸ்து, மேஸ்திரி சொன்ன வாஸ்து, நண்பர்கள் சொன்ன வாஸ்து மூலம் வீடுகட்டி அங்கு குடியமர்ந்து 6 மாதங்களில் எனது அம்மாவை இழந்து, இந்த மரணம் எதனால் நிகழ்ந்தது என்று அறியாது, வாஸ்து என்ற விசயத்தை அன்று முதல் கையில் எடுத்து அந்த இல்லத்தை உடனடியாக விற்றுவிட்டு, மீண்டும் வாடகை வீடு வாசம் 2007-ல் வாடகை வீடு வாசம் அங்கும் சில குறைபாடுகளுடன் குடியிருந்து எனது அப்பா மரணம் அங்கு நிகழ்ந்தது, ஆக இந்த இடத்தில் மரணத்தை குறிப்பிடக் காரணம் ஒரு மனிதனின் மரணம் என்பது ஆழ்ந்து அனுபவித்த வாழந்து முடிந்த மரணமாக இருக்க வேண்டும். ஆக இனி நான் வாழ்ந்தால் நல்ல வாஸ்து உள்ள இல்லத்தில் தான் வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன், வாஸ்துவை பற்றி ஆராய்ந்து கொண்டு இருந்தபோது எனக்குள் இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கண்டு ஓரு நல்ல வாஸ்து அமைப்பு உள்ள இல்லம் அமைத்து அதன் மூலம் அதன் பலாபலன்கள் என்ன என்று தெரிந்து, மேலும் அதற்கு பிறகு எனது அனுபவ அறிவு மூலம் தெளிவுபடுத்தி வாஸ்து குறித்த அனைத்து விவரங்களும் தெரிந்த ஓரு மிக சிறந்த வாஸ்து நிபுணராக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இந்த இடத்தில் நான் என்னுடைய வளர்ச்சிக்கு துணையாக உள்ள ஆண்டாளுக்கும், சுந்தரர் பெருமானுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இந்த இடத்தில் ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது பாட்டனார் திரு.அங்கப்பகவுண்டர் அவர்கள் சென்னிமலை முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவராக விளங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் சில தீர்வுகளுக்காக அருகிலிருக்கும் மக்கள் அவரிடம் அருள்வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த வகையில் அவர் இரவு முருகப் பெருமானை நினைத்து உறங்கினால், இரவு கனவுகள் மூலம் முருகப்பெருமானின் அருள்வாக்கு மூலம் அதற்கு தீர்வுகள் சொல்வார். ஆக பாட்டனார் சொத்து பேரனுக்கு என்பதுபோல், எனது பாட்டனாரின் அருட்சக்திகள் எனக்கும் உண்டு என்று, ஓரிரு விசயங்களில் நானும் உணர்ந்துள்ளேன். அதன்படிதான் இந்த வாஸ்து என்ற விசயத்திலும் நான் உள் நுழைய கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். நான் வாஸ்து என்கிற விசயத்தை 2007-ல் எடுத்தாலும், 2011-ல் கூட வாஸ்து தொழில் முறையாக செய்யலாம் என்று முடிவ செய்தேன். ஆனால் நாம் வாஸ்துப்படி உள்ள ஒரு இல்லம் சென்று வாஸ்துவை நான் உணர்ந்து வாஸ்துவில் தொழில்முறை நிபுணராக மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்பிறகு 2012-ல் புதிய இல்லம் அமைத்து அதை நான் உணர்ந்து, பிறகுதான் தொழில்முறை வாஸ்து நிபுணராக மாறினேன்.

ஆக வாஸ்து படி இல்லம் வந்த பிறகு எனது வாழ்வில் ஒரு மிக சிறந்த மாற்றம் உண்டாகி எனது அடுத்த கட்ட பயணத்திற்கு எனது இல்லம் வழி வகுத்துள்ளது. ஆக வாஸ்துபடி இல்லம் இருந்தால், கண்டிப்பாக மனிதன் மாறவேண்டியது இல்லை. அந்த வீடே மனிதனை மாற்றிவிடும் என்பது நான் கண்டறிந்த உண்மை.

வாஸ்து எப்படி தொழில் முறையாக பார்க்கின்றேன் என்பதன் விளக்கம்

இந்த இடத்தில் நான் ஒரு சில விசயம் குறிப்பிட்டு ஆகவேண்டும். வாஸ்து சார்ந்த விசயங்களில் சமஸ்கிருதத்தில் மட்டும் 100க்கனக்கான புத்தகங்கள் இருந்தன என்று வடஇந்தியாவில் வாஸ்து குறித்த எனது அதிக பட்ச தகவலுக்காக நான் செல்லும்பொழுது இது தெரிந்தது. அதேபோல் ஆந்திராவில் பிரபலமான வாஸ்து நிபுணர், தமிழ்நாட்டில் மிக பிரபலமான வாஸ்து நிபுணர்கள் என பலரிடம் எனக்கு வாஸ்து குறித்த அறிவினை விரிவாக்கம் செய்வதற்காக செல்லும்போது மிக அதிக வாஸ்து சார்ந்த தகவல்கள் கிடைத்தன. இந்த இடத்தில் தமிழ்நாட்டிலிருந்து வாஸ்து குறித்த செய்திகளை தெரிந்து கொள்ள வடமாநிலங்களுக்கு சென்ற ஒரே நபர் நான் என்பதை இந்த இடத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அப்படி வடமாநிலங்களில் ஆராய்ச்சி செய்யும்பொழுது மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா ஒரிஸா தாண்டி அவர்கள் கட்டிட கலைஅமைப்பில் வங்காளம் நீங்களாக வசிக்கும் மக்களின் அகம் சார்ந்த புறம் சார்ந்த விசயங்களில் பெரிய மாறுபாடு இல்லை. அவர்கள் எந்த இடத்திலும் புறம் சார்ந்த விசயங்களுக்கு ஈடுபாடு அதிகம் கொடுக்கின்றனர்.

ஆக இவ்விரண்டையும் இணைத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆராய்ச்சி செய்து இரண்டும் கலந்த அமைப்பாக நான் சொல்லக்கூடிய வாஸ்து விசயங்கள் ஒரு மனிதன் நிறைவான வாழ்வு என்பது உறவுகள் மற்றும் பொருளாதாரம் ஆக இந்த இரண்டும் முக்கியம். வட இந்தியாவில் பணக்கார மாநிலமாக இருக்கக்கூடிய குஜராத்தில் அதேபோல மகாராஷ்ட்ராவின் மும்பை நகரத்தில் மேற்கு முழுவதும் நீரால் சூழப்;பட்ட அரபிக்கடல் ஆனால், மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகராகவும் உலகின் 10 வர்த்தக நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. அதேபோல இந்தியாவின் அதிக பணக்காரர்கள் வசிக்கக்கூடிய மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இதன் வாஸ்து அமைப்பு என்பது வாஸ்து விதிகளுக்கு மாறுபட்டுத் தான் உள்ளது. ஆக இந்த விசயங்களை தெரிந்து கொள்ள குஜராத்திலும், மகாராஷ்ட்ராவிலும் ஓரிரு மாதங்கள் இருந்துள்ளேன். அதன் அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த வாஸ்து தீர்வு நம் மக்களுக்கு என்னால் கொடுக்க முடியும். அதேபோல குஜராத் மக்களிடம் கற்ற பணம் பெருக்க அது சார்ந்த அறிவுகளை எனது வாஸ்து நண்பர்களுக்கு வழங்கி வருகிறேன்

புதிதாக வாஸ்து பார்த்து, வீடு, இடம், மனை, பிளாட்ஸ், அலுவலகம், தொழிற்சாலை போன்றவை வாங்கவும், ஏற்கனவே உள்ள இடத்தில வாஸ்து சரியாக உள்ளதா என பார்க்கவும், குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யவும் சிறப்பான முறையில் வாஸ்து ஆலோசனை / தீர்வுகள் வழங்கப்படும்.