When good things happen to one Vastu wise

வாஸ்து வகையில் ஒருவருக்கு எப்போது நல்லது நடக்கும் அல்லது, கெட்டது நடக்கும் என்கிற விஷயம் ஒருவர் உணர வேண்டும் என்று சொன்னால், ஒரு சில வேலைகளை செய்யும் போது உணர முடியும். உதாரணத்திற்கு  ஒவ்வொரு குடும்பமும் வீடுகளை மாற்றும் பொழுதும் அல்லது, வசிக்கும் இல்லத்தின் கதவுகளை மாற்றி வைக்கும் பொழுதும், ஜன்னல்கள் அலமாரிகள் தூண்கள் புதிய சுவர்கள் பழைய சுவர்களை எடுக்கும் பொழுதும், ஒரு இல்லத்தில் புதிதாக கொட்டகை, குடிசைகள், புதிய வீடுகள், பழைய காலியிடத்தை இணைத்து கட்டும் பொழுதும் உணர முடியும். பக்கத்தில் ஒரு இடம் வருகிறது அது கிழக்கில் வருகிறதா? அல்லது மேற்கில் வருகிறதா? தெற்கில் வருகிறதா? அல்லது வடக்கு வருகிறதா? அப்படி வருகின்ற பொழுது வாங்கி கட்டும் பொழுதும் வாஸ்துவை உணர முடியும்.

இந்த வாஸ்து சாஸ்திரத்தை படிக்கிற மக்களாக இருக்கட்டும், உணர்கிற மக்களாக இருக்கட்டும், 10 அல்லது15 வருடங்கள் அந்த துறையில் அலைந்து திரிந்து தனக்கு ஏற்பட்ட பலன்களை வைத்து தான் அவர்கள் அனுபவப்பட முடியும். அப்பொழுது மட்டுமே உண்மை தெரியும். ஆக ஒரு இடத்தில் மேடு பள்ளங்களை சரி செய்வது, கிணறு வெட்டுதல், காலியிடத்தில் குப்பை போடுதல், கற்கள் போடுதல், மண் திட்டுகளை ஏற்படுத்துதல், இந்த இடத்தில் வாஸ்து பற்றி தெரியாத மக்களே செய்யும்போது அதன் பலனை உணர முடியும். அப்பொழுதுதான் வாஸ்து உண்மை என்கிற நிகழ்வை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும்.அதுவரைக்கும் பொய்யாக தான் தெரியும்.

Loading