What is east facing in Vastu?

What is east facing in Vastu?,

கிழக்கு திசை சார்ந்த வாஸ்து கருத்துக்களை நேற்று கூறினேன். அது சார்ந்த தொடர்ச்சியான பதிவை இன்றைய பதிவிலும் தெரிந்து கொள்வோம். அந்த வகையில் கிழக்கு புறத்தில் பிரதான வாயில் கிழக்கு பாதிக்கு வடக்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு தெற்கு பகுதியில் போகக்கூடாது. அப்படி போனால் ஒரு இல்லத்தில் தரித்திர நிலை, கோர்ட் விவகாரம், திருட்டு, நெருப்பு பயம் இருக்கும். அதே சமயம் கிழக்குப் புறம் உள்ள மெயின் கதவு அல்லது, மற்ற கதவுகளாக இருந்தாலும் கிழக்கை பார்த்து தான் இருக்க வேண்டும். அந்த இடத்தில் டிகிரி மாற்றம் இருக்கக் கூடாது.

வீட்டின் அருகில் உள்ளறைகளாக இருந்தாலும், கிழக்கு வாசல் வைக்கும் பொழுது, அறைக்கு பாதி வடக்கு பகுதியில் மட்டும் வைக்க வேண்டும். கிழக்கு சுற்றுச்சுவர்  எப்பொழுதும் மற்ற திசைகளை விட உயரமாக இருக்கக் கூடாது. கிழக்கு புறத்தில் தன்னுடைய இல்லத்திற்கு உள்ளாகவும் அல்லது சுற்றுச்சுவர் ஒட்டியும் எந்தவித கட்டிடமும் இருக்கக் கூடாது. கிழக்கு புற சுற்றுச்சுவர் மேற்கு சுற்றுச்சுவரை விட உயரமாக இருக்கக் கூடாது. கிழக்கில் இடம் இல்லாது ஒரு வீடு கட்டும் பொழுது, கண் வியாதி, தீரா வியாதி, பக்கவாதம் போன்ற நிகழ்வு ஏற்படும். கிழக்கு தெரு வரை வீடு கட்டி , மேற்கில் வெட்டவெளி இருந்து அல்லது பள்ளமாக இருந்தால், ஆண்களின் நிலை பாதிப்படையும். மீண்டும் நாளை கிழக்கு சார்ந்த பதிவுகளோடே சந்திப்போம்.What is east facing in Vastu?,

Yesterday I told about Eastern Vastu concepts. Let’s know the related continuous post in today’s post as well. In that way, the main gate on the eastern side should be only on the northern side of the eastern half. Do not go to the southern part. If that happens, there will be poverty, court issues, theft and fear of fire in a house. At the same time, the main door on the east side or any other door should face the east. There should be no degree change at that point.Even if the rooms are close to the house, when placing the east door, half of the room should be placed in the north side only. The eastern perimeter wall should never be higher than the other directions. There should not be any building inside his house or adjacent to the perimeter wall on the eastern side. The eastern perimeter wall should not be higher than the western perimeter wall. When a house is built in the east without a place, there will be eye disease, thera disease, stroke etc. If the house is built up to the east street, and in the west there is a clearing or a ditch, the position of men will be affected. See you again tomorrow with Eastern posts.

Loading