Vastu of houses facing east

Vastu of houses facing east

தொடர்ந்து கிழக்குப் பார்த்த வீடுகளின் வாஸ்து பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் மேலும் தொடர்ந்து பார்ப்போம். கிழக்கு பார்த்த வீட்டிற்கு செப்டிக் டேங்க் வைக்கும் பொழுது வடக்கு பாகத்தின் கீழ் மேல் அளவில் பாதிக்கு மேல் புறம் மட்டுமே இருக்க வேண்டும். கிழக்குப் புற வீட்டிற்கு தெற்கு பாகத்தில் இருக்கும் சுற்றுச்சுவரை விட வடக்கு பாகத்தில் இருக்கும் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருக்க வேண்டும். கிழக்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பாகத்தில், இல்லத்திற்கும் சுற்றுச்சுவருகக்கும் மத்தியில் வீட்டைவிட உயரம் அதிகமாக திட்டுகள் கட்டி செடிகள் வைக்கக்கூடாது. கிழக்கு புற வீட்டுக்கு தென்கிழக்கில் அப்படி செடிகளை வைப்பதாக இருந்தால் வைக்கலாம்.

கிழக்கு பார்த்த வீட்டில் படுக்கையறை தென்மேற்கு மூலையில் மட்டுமே அமைக்க வேண்டும். கிழக்கு பகுதியில் குப்பை கொட்டுவது,செடி செத்தைகள் வைப்பது, மற்றும் கொட்டுவது, கல் மண், மணல் போன்ற பொருட்களை, பழைய பொருட்களை போட்டு வைப்பது, கிழக்கு மத்திய பாகத்தில் வரும்போது தன நஷ்டம், சந்தான நஷ்டம், இரண்டாவது குழந்தைக்கு பாதிப்பு போன்ற பிரச்சனைகளை கொடுத்து விடும். கிழக்கு பார்த்த வீட்டிற்கு வாசற்படி  கட்டும்போது,  அதாவது ஒரு வீட்டை இரண்டாக பிரித்தால் முன்னாள் வீடும் பின்னால் வீடும் பிரித்து கட்டினால் பின்னால் வீட்டிற்கு வழி வடக்கில் அமைத்தாலும் கூட வாஸ்துபடி பின் வீடு தவறுதான்.இரண்டு அண்ணன் தம்பி பிரிக்கும் போது அதாவது, பாகப்பிரிவினையின் போது ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

We are constantly looking at the Vastu of East-facing houses. Let’s see more in that regard. When placing a septic tank in an east-facing house, it should be less than half of the upper level of the north side. For east facing house, the perimeter wall on the north side should be lower than the perimeter wall on the south side. For an east-facing house, on the east side, between the house and the surrounding wall, plants should not be built higher than the house. If you want to place such plants in the southeast of the east side of the house, you can put them.In an east-facing house, the bedroom should be placed in the south-west corner only. Garbage in the eastern part, putting plant remains, and dumping, stone soil, sand, old things, in the east central part will give problems like loss of son, loss of children, damage to the second child. When building a door to an east-facing house, i.e. if a house is divided into two, the former house and the rear house are built separately, even if the road to the rear house is placed in the north, the rear house is wrong according to Vastu.

chennai vastu

Loading