East Gate Vastu

East Gate Vastu

இரண்டு மூன்று நாட்களாக வாஸ்து சார்ந்த விஷயத்தில் கிழக்கு திசை சார்ந்த விஷயங்களை பற்றி பேசி வருகிறோம். அந்த வகையில் தொடர்ந்து கிழக்கு சார்ந்த பதிவை மேலும் பார்ப்போம். கிழக்கில் வராண்டா இறக்கி வீடு கட்டி இருந்தால் ஆண்களுக்கு ஆரோக்கியமும் தன லாபமும் ஏற்படும். ஆனால் அதே சமயம் வடக்கு பகுதியில் அதற்கு இணையாக இறக்க வேண்டும். வீட்டு கிழக்கு பாகம் எந்த அளவுக்கு உயரம் குறைவாக இருக்கின்றதோ அந்த அளவு வீட்டின் எஜமானருக்கு நன்மை ஏற்படும். அதற்கு இணையாக வடக்கு பகுதியிலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னுடைய வீட்டில் கிழக்கு புறம் உள்ள காலி இடத்தை தன் வீட்டுக்கு சேர்த்துக் கொண்டால் அந்த எஜமானனுக்கு ஆயுள் விருத்தி, கீர்த்தி சிறப்புக்கள் உண்டாக்கும். ஆனால் கிழக்கில் காலியிடம் வேண்டும்.

கிழக்கு வாசல் படி இல்லத்தை இரண்டு பாகமாக பிரித்து முன்னும் பின்னும் வீடு கட்டும் போது பின்னால் இருக்கு வீட்டிற்கு வாஸ்து குற்றம் ஏற்பட்டு விடும் அதனை செய்யக்கூடாது. கிழக்கு பார்த்த வீட்டிற்கு தெற்கு பாகத்தில் சின்ன தெரு இருந்தால் தெற்கு திசையில் வாசல் படிகளை வைக்கக் கூடாது . கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடக்கு புறம் சின்ன தெரு இருந்தால் வடக்கு புற வாசல் படி வைக்க கூடாது. மீண்டும் கிழக்கு சார்ந்த பதிவை நாளை பார்ப்போம்.

Loading