Vastu in chennai calendar 27.3.2023

Vastu in chennai calendar

தினசரி நாள்காட்டி 27.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 13ந் தேதி  திங்கட்கிழமை. மாலை 5.30 வரை சஷ்டி திதி . பிறகு வ.சப்தமி திதி . மதியம் 3.13 வரை ரோகிணி நட்சத்திரம். பிறகு மிருஹசிரிஷம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பக்தி
ரிஷபம்- சுகம்
மிதுனம்- பகை
கடகம்- வரவு
சிம்மம்- வெற்றி
கன்னி- நட்பு
துலாம் – பயம்
விருச்சிகம்- நற்செயல்
தனசு- மேன்மை
மகரம்- உயர்வு
கும்பம்- ஆதாயம்
மீனம் – அனுகூலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

கடந்த ஒரிரு நாட்களாக வாஸ்துவில் மேற்கு திசை, மேற்கு பார்த்த, மேற்குப் பகுதியில் இருக்கிற கட்டங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம்.  மேற்கு பார்த்த வீட்டிற்கு வராண்டா அமைக்கும் போதும், தாழ்வாரம் அமைக்கும் போதும், போர்டிகோ அமைக்கும் பொழுதும், ஒரு வாகனம் நிறுத்துவதற்காக அந்த வடமேற்கு மூலையை மேற்கு சார்ந்த பகுதியில் வெட்டப்பட்டு அமைப்பார்கள். தாராளமாக அமைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது வீட்டோடு இணைந்த பகுதியாக கிரில் அமைப்பை ஏற்படுத்தி மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அந்த வடமேற்கு மேற்கு பகுதியை பள்ளமாக வைக்கக் கூடாது. வீட்டின் உயரத்திற்கு பொருந்துவது போல அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக நன்மையை கொடுக்கிற விஷயமாக இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading