vastu in chennai
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 6.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 20ந் தேதி . திங்கட்கிழமை நாளை(செவ்) காலை 5.52 மணி வரை நவமி திதி. பிறகு தே.தசமி திதி. இன்று மதியம் 1.07 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm
இன்று மதியம் 1.07 வரை நல்ல யோகநாள் . பிறகு யோகம் குறைவு .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் -சாந்தம்
ரிஷபம்- புகழ்
மிதுனம்- சுகம்
கடகம்- நலம்
சிம்மம்- பயம்
கன்னி- சிந்தனை
துலாம் – நிறைவு
விருச்சிகம் – அமைதி
தனசு- வருத்தம்
மகரம்- நன்மை
கும்பம்- தனம்
மீனம் – மகிழ்ச்சி
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
_________________________
சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :
பணத்தை ஈர்க்கும் வகையில் வாஸ்து சார்ந்த ஒரு சில விஷயங்கள் ஒரு தொழிற்சாலையில் இருக்க வேண்டும். அது ஆண்கள் வேலை செய்கிற தொழிற்சாலையா? அல்லது, பெண்கள் வேலை செய்கிற தொழிற்சாலையா? என்பதில் ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒரு தொழிற்சாலை கிழக்குப் பகுதி காற்று வருவதற்கு கூட இடமில்லாமல் இருந்தால், மேற்கு பக்கத்து நிறுவனத்தின் காலியிடம் என்பது மேற்கு புறத்தில் அதாவது சுற்றுச்சுவரை நீங்கள் மறந்து விடுங்கள். மொத்தமாக அவர்கள் 10 அடிகள் விட்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய கிழக்குப்புறத்தில் பக்கத்து நிறுவனத்தில் ஒரு இரண்டு மூன்று அடிகள் விட்டு இருப்பார்கள். நீங்கள் உங்கள் எல்லை வரை உங்களுடைய கட்டிடம் இருந்தால் மிகவும் தவறு. அந்த இடத்தில் உயிர் கொடுக்கும் விதமாக வடக்கு பகுதியில் என்ன இடம் விட்டு இருக்கிறீர்களோ? அதற்கு இணையாகவோ அல்லது, அதைவிட குறைந்தோ ஒரு காலியிடம் என்பது வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அது பெண்கள் மட்டும் வேலை செய்கிற தொழிற்சாலையாக இருந்தால் அதனுடைய செயல் திறன், உற்பத்தி திறன் அதனுடைய உயர்வு திறன் நன்றாக இருக்கும். ஆனால் ஆண்கள் மட்டும் வேலை செய்கிற, ஆண்கள் அதிக மெஜாரிட்டியாக வேலை செய்கிற தொழிற்சாலையாக இருந்தால் நிச்சயமாக அந்த தொழிற்சாலை பெரிய அளவில் இயங்காது. இதனை கருத்துக் கொண்டு வாஸ்து ரீதியாக அணுகும் பொழுது அந்த தொழிற்சாலை நல்ல நிலையில் இயங்கும்.
மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .
