space in North-East vastu

வடகிழக்கு பாகத்தில் காலி இடத்தை எப்பொழுதுமே காலியாக வைக்க வேண்டும். அங்கு எந்த விதத்திலும் கட்டிடங்களாக தாழ்வார அமைப்பாகவும் , பந்தல் கொட்டகை போன்றவை  கட்டக்கூடாது . ஒருவேளை அப்படி கட்டினால் அதிக அளவில் கஷ்ட நஷ்டங்களும், வம்சத்தில் பிரச்சனையும், தனத்தில் பிரச்சனையும் ஏற்படும். கிழக்கு மற்றும் வடக்கு பாகம் தெருக்குத்து உள்ள இடம் வடகிழக்கு என்று சொல்கின்றோம். இந்த இடம் எல்லா இடங்களையும் விட சிறப்பானது என்று பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இந்த இடத்தை வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குபேரனின் நகரம் அழகாபுரியோடு ஒப்பிட்டு கூறுகின்றனர். கிழக்குக்கு இந்திரன் அதிபதியும், வடக்கு குபேரன் அதிபதியும் ஆகின்ற காரணத்தால், இந்த இரண்டும் சேர்ந்த ஒரு நிகழ்வாக குபேரனின் இடமாக வாஸ்து சாஸ்திர அமைப்பின் படி பார்க்கப்படுகின்றது.வடக்கு கிழக்கு தெரு வளர்ந்து இருக்கிற இடத்தில் வசிக்கிற மக்கள் இந்த பூலோகத்தில் ஒரு தேவேந்திரனை போல, ஒரு குபேரனை போல தோற்றத்திலும் வாழ்க்கையில் இருப்பார்கள். அதே சமயம் மேதாவிகள் ஆகவும், தியாக சிந்தனை உள்ளவர்களாகவும், உதவி செய்யும் மனப்பான்மை உள்ள மக்களாகவும் இருப்பார்கள். இந்த வடகிழக்கு இடத்திற்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் திசையை கவனித்து வாசல் என்பது அமைக்க வேண்டும். கிழக்கு சரியாக திசைகாட்டி இருந்தால் கிழக்காகவும் அல்லது, கிழக்கு இல்லாமல் இருந்தால் வடக்காகவும் திசைகாட்டிக்கு பொருத்தி வைக்க வேண்டும். இந்த இடத்தில் வாசல் வைப்பது என்பது சரியான முறையில் வைக்கும் போது நல்ல யோகத்தை செய்கிற வீடாக நிச்சயம் இருக்கும். இல்லாத இருந்தால் வடகிழக்கு இடம் இப்படி புகழ்கிறார்களே வாஸ்து நிபுணர்கள் எனக்கு யோகத்தை செய்யவில்லை என்கிற நிலைக்கு ஒரு சில மக்கள் தள்ளப்படக்கூடிய சூழ்நிலைக்கு ஒரு சில வடகிழக்கு இடங்களும் கொண்டு சென்று விடும். ஆக வாஸ்துவை வாசலை கவனித்து அமைக்க வேண்டும்.

Always leave vacant space in North-East. There should not be any buildings like corridors, sheds etc. built there. Perhaps, if you build it like that, there will be a lot of hardships and losses, problems in the dynasty, and problems in yourself. We say that the place where the east and north side of the street is north-east. Elders say that this place is better than all other places. Vastu Shastra experts compare this place with Kubera’s city Alagapuri. Due to the fact that Indra is the lord of the East and Kubera is the lord of the North, Kuberan’s place is seen as a combination of these two according to the Vastu Shastra system. The people living in the place where the North East Street is growing will be like a Devendran and a Kuberan in life in this world. At the same time, they tend to be nerdy, self-sacrificing, and helpful people. The most important thing to note about this North-East place is to set the threshold by observing the direction. East should be fixed to the compass if the compass is correct or north if there is no east. Placing a door in this place is sure to be a house that does good yoga when properly placed. If it is not there, a few people will be pushed to a situation where Vastu experts are praising North-Eastern places like this, and some North-Eastern places will also be taken to the situation. So Vastu should be set up after taking care of the door.

Loading