north-east corner Esaniyam vastu

north-east corner Esaniyam vastu

வடகிழக்கு மூலைக்கு ஈசானியம், சனிமூலை, இப்படி ஓரிரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திரங்களில் இந்த மூலைக்கு அதிபதியாக ஈசன் இருக்கின்றார். இவர் வெண்ணிற நிறத்தில் இருப்பவர். ஒரு முகமும், நான்கு கைகளும் இவருக்கு உண்டு. வலது கையில் அபய ஹஷ்தமும், மற்றொரு கையில் அட்சரமாலையும், இடது கையில் சூலாயுதமும், மற்ற ஒரு கையில் வரத முத்திரையும் அமைந்திருக்கிற கடவுளாக இருக்கின்றார். இவருக்கு ரிஷப வாகனம். கௌரி என்னும் மனைவியை உடையவர்  இவர் பிற உயிரினங்களுக்கு சுகத்தை கொடுப்பவர். மனதில் நினைத்ததை அளிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு சம்போ என்கிற பெயரும் உண்டு. இப்படி இந்து ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கின்றது. இவருக்கு ஐஸ்வர்யம் உடையவர் என்கிற பெயரும் இருக்கின்றது. அதற்கு தமிழ் விளக்கம் வேண்டும் என்றால் செல்வம் உடையவர் என்று பொருள் ஆகும்.இவர பெயரை சொன்னால மரணத்தை அழிப்பவர் என்ற பொருளும் இவர் பெயரில் இருக்கிறது. இவரை பாலா என்றும் குறிப்பிடுகின்றார்கள். பாலா என்றால் சந்ததியை விருத்தி செய்கிற கடவுளாக இருக்கிறார். இவருக்கு கங்காதரன் என்கிற பெயரும் உண்டு. ஆக தண்ணீர் வேண்டுமென்றால் கிணறு தோண்ட வேண்டும் என்பதும்,இவர் பெயரும் பூதேஸ்வரன் என்பதால் இந்த இடம் குறைந்தால் பூத பயம் ஏற்படும் என்றும், சந்தான பலன் இல்லாமல் போகும் என்றும்,ஆக ஈசானிய திசையை வைத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாஸ்துவின் படி ஈசான்ய திசை மிகவும் முக்கியம்.வடக்கு கிழக்கு சாலைகள் இருக்கும் இடத்தில் வடக்கு கதவை திறந்து வைக்கும் பழக்கம் வாஸ்து வகையில் மிகவும் முக்கியம். ஒரு வீட்டில்  தெற்கு வாயில் அமைத்தால் கண்டிப்பாக வடக்கு வாயில் வேண்டும். அதேபோல் ஒரு வீட்டில் மேற்கு வாயில் வைத்தால் கண்டிப்பாக கிழக்கு வாயில் வேண்டும். அதேசமயம் வடக்கு வாயில் கூட அமைத்து கொண்டால் வாஸ்து ரீதியாக மிகவும் நன்மைகள் கொடுக்கும் வீடாக இருக்கும். ஒரு இல்லத்தில் தெற்கு வாயில் அமைத்து கொண்டு, வடக்கு வாயில் அமைக்காது,கிழக்கு மட்டுமே அமைப்பார்கள். அதுவும் பெரிய நன்மைகள் கொடுக்கும் வாயிலாக வாஸ்து சாஸ்திர வகையில் இருக்காது.

வடக்கு பார்த்த வீட்டை வாடகைக்கு கொடுக்கிற மக்கள் உச்சபாகமாக இருக்கக்கூடிய இடத்தை தனது உபயோகத்திற்காக வைத்துக்கொண்டு, எதிர்மறை பாகத்தை வாடகைக்கு கொடுப்பது நல்லது. அப்படி இருக்கின்ற பொழுது எதிர்மறை பாகம் என்பது குபேர திசை என்று சொல்லுவார்கள். அதனை கைகளில் வைத்திருந்தால் நல்லது என்கிற கருத்து நிலவுகிறது. இந்த இடத்தில் அந்த கருத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது . அதே சமயம் வாடகைக்கு இருக்கிற மக்கள் வேறு இடங்களுக்கோ அல்லது, சொந்த வீடுகளுக்கோ சென்று விட்டால் உடனடியாக அந்த இடத்தில் வேறொருவரை அமர்த்த வேண்டும். இல்லை என்றால் தானே உபயோகப்படுத்துகிற நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் உச்ச பாகம் எடை என்கிற விஷயத்திற்கு வந்துவிடும். நீச்சபாகம் எடையில் இல்லாமல் போய்விடும். அப்பொழுது எதிர்மறை பலன்களை கொடுக்கும் இடமாக மாறிவிடும். இதை வாஸ்துவின் படி சரியாக கவனித்து செயல்படுத்தினால் தான், வாஸ்து இருக்கிறது என்கிற ஒரு உண்மை புரியும்.ஈசானிய இடம் என்பது சாலைகளோ, தெருக்களோ, சிறிய சந்துகளோ, கிழக்கு பகுதிகளும், வடக்கு பகுதிகளும் இருக்கின்ற இடமே, வடகிழக்கு இடம் என்று சொல்லுவோம். வடகிழக்கு ஈசானிய இடம் வடக்கு பிரதான வாசல் வைத்த வீடாக இருந்தாலும் சரி, கிழக்கு பிரதான வாசல் வைத்து விடாக இருந்தாலும் சரி, கிழக்கு மற்றும் வடக்கு அதிக அளவில் காலியிடம் இருக்க வேண்டும். வடகிழக்கு ஈசானியம் கிழக்கு வடக்கு குறைந்து இல்லாமல் அதிக அளவில் இருக்க வேண்டும். குறைந்த இடமாக அங்கு இருக்கும் பொழுது, குறைந்த இடமாக நீங்கள் விடும் பொழுது, அந்த இடம், அந்த திசை உயர்ந்த அமைப்பில் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் . ஆக வடகிழக்கு என்பது இல்லத்தில் பிரதானமாக காலியிடம் என்பது வாஸ்து ரீதியாக வேண்டும். வடகிழக்கு என்பது கிழக்கு வடக்கும் சேர்ந்ததுதான்.

The north-east corner is called Esaniyam, Sanimula, among others. Isaan is the ruler of this corner in Hindu scriptures. He is white in color. He has one face and four arms. He is the God who has Abhaya Hashtam in his right hand, Atsaramala in the other hand, mace in his left hand and Varada mudra in the other hand. Taurus is his vehicle. He has a wife named Gauri who gives comfort to other living beings. He has the power to give what he thinks in his mind. He also has the name Sambo. This is stated in the Hindu scriptures. He is also known as the rich man. If you want a Tamil explanation for it, it means rich. If you say his name, it also means destroyer of death. He is also referred to as Bala. Bala means the God who procreates the progeny. He also has the name Gangatharan. So if you want water, you have to dig a well, and since his name is Bhudeswaran, if this place decreases, then there will be fear of Buddha, and the fruit will be lost, so we have to take the East direction. According to Vastu, the North direction is very important. Open the North door where there are North East roads. The practice of placement is very important in Vastu. If south gate is installed in a house then definitely north gate. Likewise, if a house has a west gate, it must have an east gate. On the other hand, if the north gate is also constructed, it will be a very beneficial house in terms of Vastu. In a house, they set up the south gate and do not set up the north gate, only the east one. That too will not be in Vastu Shastra style as a gateway to give great benefits.

People who rent out a north-facing house are better off keeping the upper part for their own use and renting out the negative part. When that is the case, the negative part is said to be the negative direction. There is an opinion that it is better if you keep it in your hands. That opinion should not be taken at this point. At the same time, if the people who are renting go to other places or to their own houses, they should hire someone else immediately. If not, it should be taken as a self-serving event. If you say no, the top part comes down to weight. Body weight is lost. Then it becomes a place of negative results. If this is observed and implemented properly according to Vastu, the fact that there is Vastu will be understood. Isaaniya place is the place where roads, streets, small alleys, eastern parts and northern parts are, let’s say North-Eastern place. North-East Esaniya Place Whether it is a house with north main door or east main door, east and north should have a lot of vacancy. North-East Esanium should be greater than East-North without diminishing. When a low point is there, when you leave it as a low point, that point, that direction is considered to be in the higher order. So North-East is the main vacancy in the house and should be Vastu wise. Northeast means east and north.

Loading