southeast corner vastu

தென்கிழக்கு மூலை சார்ந்த பதிவுகளை நேற்றிலிருந்து சொல்லி வருகிறேன். அந்த வகையில் தொடர்ந்து அது சார்ந்த பதிவை பார்ப்போம். தென்கிழக்கு மூலை மனையில் வசிக்கிற மக்கள் மற்ற இடத்தில் வசிப்பவர்கள் விட ஆரோக்கியம் குறைவாக இருக்கும். தென்கிழக்கு மூலை அருகில் வடக்கு பாகத்தில் இருக்கிற வீட்டின் வடக்கிலும், கிழக்கிலும் சாலை இருந்து தென்கிழக்கு மூலை குறைவாக இருந்தால் தென்கிழக்கு மூலையில் வசிக்கிற மக்கள் நல்ல பலனை பெறுவார்கள். இல்லத்திற்கு வடக்கில் இருக்கும் காலி இடத்தை விட தெற்கில் குறைந்திருந்தால், கிழக்கு புறத்தை மேற்கில் காலி இடம் குறைவாக இருந்தால் நல்ல அமைப்பு.நன்றாக வாழ்கிற வாழ்க்கையை கொடுக்கும்.
வடகிழக்கு தவிர மற்ற மூன்று மூலைகளும் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மூலைகள் வளராமல் இருந்தால், வடகிழக்கு மட்டும் நின்றிருந்தால் வடகிழக்கு பள்ளமாக இருந்தால், தென்கிழக்கு மனை இந்த அமைப்பில் இருக்கும் பொழுது நல்ல பலனை கொடுக்கும்.தென்கிழக்கு மூலை என்பது கிழக்கிலும் மேற்கிலும் சாலைகள் இருந்து, அந்த மூலையில் இருக்கும் இல்லத்திற்கு தென்கிழக்கு மூலை என்று பெயர். இந்த தென்கிழக்கு மூலையில் வசிக்கிற மக்கள் மனையில் வடக்கு பக்கம் அதிக இடங்களை கொடுத்தால் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.அதுவும் வாஸ்து வகையில் மிகவும் நல்லது.
94 total views, 1 views today