East facing direction Vastu

East facing direction Vastu

vastu in chennai

இதுவரை வாஸ்து வகையில் கிழக்கு பார்த்த திசையில் பலன்களை பார்த்து வந்தோம். இன்று தென்கிழக்கு சார்ந்த அக்னி மூலையில் பலன்கள் மற்றும், அங்கு என்ன விஷயத்தை வைத்து இருக்கிறது என்று என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். தென்கிழக்கு மூலைக்கு அக்னி மூலை அல்லது ஆக்னேயம் என்ற பெயர். இது கிழக்கிற்கும் தெற்கு இடையில் உள்ள ஒரு மூலை . இந்த மூலைக்கு நமது இந்து மத சாஸ்திரங்கள் அக்னி தேவனுக்கு ஒரு உருவத்தை கொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அக்னி தேவனுக்கு இரண்டு தலை, மூன்று கால், நான்கு காது , இரண்டு கண்கள், ஏழு கைகள் மற்றும் வலது பக்கத்தில் ஸ்வாகா என்கிற தேவியை மனைவியாகவும், இடது பக்கத்தில் சுபதா என்னும் தேவியை மனைவியாகவும் கொண்டவர். இவரது கையில் ஹோமம் வளர்க்கும் நெய்யுற்றும் சுருக் என்கிற கரண்டி இருக்கின்றது. இன்னொரு கையில் சுரூபம் என்னும் கரண்டி. ஒரு கையில் அன்னம். மற்றொரு கையில் கத்தி. இடது பக்கம் முதல் கையில் ஈட்டி. மற்றொரு கையில் விசிறி. மற்ற கையில் நெய் பாத்திரம் இருக்கின்றது. இவருக்கு வாகனம் செம்மறி ஆட்டுக்கடா . எனவே இவரின் ஆதிக்க மிக்க இந்த மூலையில் சமையல் அறை மட்டுமே வைக்க வேண்டும் என்று சொன்னால் இந்த இடத்தில் இந்த இடத்தில் சுவாகா என்கிற விஷயம் மட்டும் நடக்கும்.

அந்த வகையில் இந்த மூலையை மற்ற வேலைகளுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. அதே சமயம் மாடியில் அரை இருக்கின்றது என்று சொன்னால் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். இவருக்கு மூன்று கால்கள் இருக்கின்ற காரணத்தால் இவரை குடிலாங்கம் என்று சொல்வார்கள். குடி லாங்கம் என்று சொன்னால் கோணலாக நடப்பவர் என்ற பொருள். ஆக இந்த மூலை கிழக்கிலிருந்து தெற்கு பாகத்திற்கும் அல்லது,  தெற்கிலிருந்து கிழக்கு பாகத்திற்கும் நீண்டிருந்தால் இந்த இடத்தில் இருக்கின்ற மக்கள், கோணல் மனதுடையவர்களாக இருப்பார்கள். கடன் காரர்களாக இருப்பார்கள். சோகத்தில் இருக்கிற மனிதர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு சோகத்தை உண்டாக்கக்கூடிய மனிதராகவும் இருப்பார்கள். இந்த திசை மிகச் சரியாக, குறைவாக இருந்தால், நல்ல மனதோடு தன தானியங்களோடு செழிப்பான வாழ்க்கை வாழ்கின்ற மக்களாக இருப்பார்கள்.

Loading