chennai Vastu wise 8 direction

chennai Vastu wise 8 direction

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் வசிப்பதற்கு இல்லம், புசிப்பதற்கு உணவு முக்கியம். அடுத்ததாக உடை. இந்த வீட்டிலிருந்துதான் அனைத்து விதமான நிகழ்வுகள் நடக்கும். அதாவது மனிதர்களுக்கு லாப நஷ்டங்கள், நல்லது கெட்டது, சுகம் துக்கங்கள், புகழ் தாழ்ச்சிகள், சம்பத்துக்கள் உற்பத்தி இல்லா நிலைகள், குழந்தைகளின் நிலைகள், ஆகிய அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுகின்றன. கிரகம் என்று சொன்னாலே வீடு. நவகிரகங்களையும் கிரகம் என்று தான் சொல்லுவோம். மகான்களாக இருக்கக்கூடிய விஸ்வகர்மா, மயன் சனத்குமாரர் அவர்கள் சார்ந்த மக்கள், அநேக சாஸ்திரங்களை எழுதி இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட கிரந்தங்களில் எழுதப்பட்டது பழக்கத்தின் மூலமாக கையாளப்பட்டது. ஆனால் முழுமையாக பின்பற்றவில்லை. அதே சமயம் விஸ்வகர்மா மயன் போன்றவர்கள் எழுதி அதன் ரகசியத்தை பலரோடு கலந்ததன் காரணமாக இது பிரம்ம வித்தை என்று அழைக்கப்பட்டது. அந்த வகையில் வாசல்களுக்கு சாஸ்திரம் உண்டு. அந்த வகையில் வீட்டின் வாசல் நிலை என்பது கிழக்குப்புற தென்கிழக்கும், மேற்கு புற வடமேற்கு நடை இருந்து கொண்டு இருந்தால் அந்த வீட்டில் வசிக்கிற மக்கள் கெட்ட குணம் உள்ளவர்களாக,குடிகாரர்கள் ஆக, சோம்பேறிகளாக இருப்பார்கள். அதேபோல கிழக்கு வடகிழக்கு மூலையாக இருக்கக்கூடிய ஈசானியம் குறைந்தால், சொந்தங்கள் இருக்க மாட்டார்கள். அதேபோல ஐஸ்வர்யங்களை கொடுக்கிற திசையாக அஷ்டத்திக்குகள் விளங்குகிறது. அது அஷ்ட ஐஸ்வரியத்தோடு இருக்கிறதா?. அல்லது அஷ்ட அமங்கலமாக இருக்கிறதா? என்பது அந்த வீட்டில் இருக்கும் திசையும் வாயிலும் வைத்திருக்கிறது. அதை சரியாக அமைக்கும் பொழுது நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாழ்க்கையில். ஆக வாஸ்து ரீதியாக 8 திசைகளும் சரியாக இருக்க வேண்டும்.

Every human being born on this earth needs a house to live in and food to eat. Next is the dress. All kinds of events take place from this house. That is, human beings have all the development of profit and loss, good and bad, pleasures and sorrows, declines in fame, unproductive states of wealth, states of children. A planet is a house. Let’s just call Navagraha as planet. People related to Vishwakarma, Mayan Sanatkumar, who may be saints, have written many Shastras.What was written in such grants was handled through practice. But not fully followed. At the same time, it was called Brahma Vidhi because of its secret being written by others like Vishwakarma Mayan. In that way the doors have a shastra. In that way, if the door position of the house is east-southeast and west-northwest, the people living in that house will be bad-tempered, drunkards and lazy. Similarly, if Esanium, which is the East North-East corner, decreases, there will be no natives. Similarly, Ashtatikkas are considered to be the direction that gives wealth. Is it with Ashta Aishwarya? Or is Ashta Amangalam? It holds the direction and door of that house. When it is set properly, there will be good progress in life. So Vastu wise all the 8 directions should be correct.

Loading