Chennai Vastu manayadi sasthiram

Home  Vastu  மனையடி சாஸ்திர  நீளம், அகலம் பலன்கள்.
Manayadi Shastra

வரவேற்பு அறை,  படுக்கை அறை, சமையலறை, உணவு அருந்தும் அறை, கழிவறை, சிட் அவுட் என்று சொல்லக்கூடிய வரண்டா, சார்ந்த இடங்களுக்கான நல்ல மனையடி அளவுகள் கீழே கொடுத்துள்ளேன். அதன்படி வீட்டின் உள் அளவுகளை பொருத்தி வைத்துக் கொள்ளவும். வீட்டின் வெளி அளவுகள் என்பது ஆயாதி குழி கணக்கு ஆகும். அதனை மனையடியோடு இணைத்து பார்க்க வேண்டாம். நமது மக்கள் அதிகம் பேர் மனையடி உள் அளவா? வெளிஅளவா? என்று குழப்பிக் கொள்கின்றனர். அதனை எக்காரணம் மட்டும் செய்ய வேண்டாம் . அதே சமயம் மனையடி அளவுகளும் குழி கணக்கு அளவுகளும் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம். இதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 74, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119.

இந்த அளவுகள் நன்மையையும், நல்ல யோகத்தை தரும் அளவுகள்
இதில் குறிபிடாத மற்ற அளவுகள் தீய பலன்களை தரும்.

இப்போது அறைகள், , கூடங்கள் அலுவலக அறைகள் ஆகியவற்றிற்கான அளவு முறைகளின் பலன்களை விரிவாகக் காண்போம்.

6 அடி:

இறைஅருள் கூடும்.. குல தெய்வ அருள் கிடைக்கும். பொன், பொருள், யோகநிலை உண்டாகும்.

7 அடி:

வறுமை தாண்டவமாடும். நோய் வரும்.

8 அடி:

செல்வ நிலை பெருகும்.. தெய்வ அனுகூலம் கிட்டும். இன்பநிலை வந்து சேரும். உயர்பதவி கிடைக்கும். அரசு அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

9 அடி:

தோல்விகள்தொடரும். பீடை ஆகும். துன்பம் வரும்.

10 அடி:

அறுசுவை  உணவோடு ஆடம்பரமான வாழ்க்கை. எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.பட்டி பால் பாக்கியம் பெருகும்.

11 அடி:
வாழ்வில் வெற்றி கிடைக்கும்  . செழிப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்

12 அடி:
துர்மரணங்கள் உண்டாகும். எந்த காரியமுமே வெற்றி பெறாது. தகுதி இருந்தாலும் வேலை தட்டிபோகும். ஏழ்மையின் எல்லையைக் காண நேரும். புத்திர சோகம் இழப்பு உண்டாகும்.

13 அடி:

தோல்விமற்றும் விதம் விதமாக துயரங்கள் வந்து தாக்கும். நோய் மற்றும். வருவாய் இழப்பு ஏற்படும்.

14 அடி:

கவலை தொடர்ந்து  தொடரும். அன்னியரால் இடைஞ்சல் ஏற்படும். .

15 அடி

எதிரிகளினால் தொல்லை, துயரம் ஏற்படும்.மனைவி உறவு குறையும்..

16 அடி:

மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். பொருள் பெருகும். புகழ் செல்வம் சேரும்.

17 அடி:

வெற்றி  மீது வெற்றி கிடைக்கும். போட்டி மனிதர்கள் பணிவர், எடுக்கும் காரியம் தானாக ஜெயம் ஆகும். தொழில் சிறப்பாக வெற்றி நடக்கும்.

18 அடி:

திருடர்களாலும், மற்றவர்களாலும் பொன், பொருளுக்கு ஆபத்து நேரிடும். செலவு கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை இருக்கும்.

19 அடி:

வருமை இருந்து கொண்டே இருக்கும். மக்களால் கவலை உண்டாகும்.  கவலையும், சோகமும் குடியேறும்.

20 அடி:

தொழில் தடையின்றி நடக்கும் இலாபம்  கிடைக்கும். வருமானம் பெருகி மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்.

21 அடி:

எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். தொட்டது பொன்னாகும். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

22 அடி:

யாரும் குறை சொல்லாத வாழ்க்கை கிடைக்கும் எதிரிகள் அஞ்சுவார்கள். சுய திறமை வெளிப்படும். யாரிடமும் பணிந்து இருக்க மாட்டார்கள். எல்லோரையும் அடக்கி வைத்திருப்பார்கள். எதிரியும் அஞ்சுவார்கள்.

23 அடி:
உயர்ந்த வாழ்வு கிடைக்காது  . துன்பம் துயரம் தொடரும்

24 அடி:

சேமிப்பு காலியாகும். கவலை தரும். நோய் தரும். எந்த காரியமும் பாதியிலேயே நிற்கும்.

25 அடி:

இல்லறம் நல்லறம் ஆகாது. துணைவரால் துன்பம் நேரிடும்.

26 அடி:
மகாலட்சுமி தேடி வருவார்கள். பொருள் செழிக்கும்.

27 அடி:

பதவி உயர்வு கிடைக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பும், உதவியும் கிடைக்கும்.

28 அடி:

எவரும் நட்பு கொண்டாடுவர். தெய்வ கடாட்சம் கிடைக்கும்.

29 அடி:

கால்நடை, விவசாயம் விருத்தியாகும். பால் பாக்கியம் உண்டாகும்.

30 அடி:

சந்தானம் பெருகும். பூர்விகச் சொத்து கிடைக்கும். யோகம் நிரந்தரம்.

31 அடி:

நல்லவர்களே நண்பர்கள் ஆவர். உயர்வான நிலை அடையலாம். மிகுந்த புகழ் உண்டாகும்.

32 அடி:

அரசு மற்றும் பொது நலச்சேவையில் புகழ் கிடைக்கும். இதுவரை இழந்தவை தேடி வரும்.

33 அடி:

வருவாய் அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு பெருகும்.

34 அடி:

. ஊரை விட்டு ஓட நேரிடும். முன்னோர் சேர்த்து வைத்த பெயரும், செல்வமும் காலியாகி விடும்.

35 அடி:

செல்வ செழிப்பு உண்டாகும். தொழில் மேன்மை உண்டாகும். எல்லோரிடமும் பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்திறன் உண்டாகும்.

36 அடி:

உயர்வான பதவி கிடைக்கும். வீரத்தீரச் வெற்றி கிடைக்கும்.

37 அடி:

எந்த செயலும் வெற்றி கிடைக்கும். கால்நடை விருத்தி ஆகும். பண்ணைத் தொழில் மேன்மை பெறும்.

38 அடி:

ஏழ்மை நிலை கொள்ளும். எந்த காரியமும் செய்ய இயலாது. எதிலும் தடங்கல், இழுபறி நிலைதான் ஏற்படும்.

39 அடி:

பொருள் நிலைக்கும். பொது இடத்தில் மரியாதை கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பர்.கடின உழைப்பு வெற்றி பெரியது.

40 அடி:

எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் போகும். எல்லா வேலையும் பாதியிலேயே தொடரும்.

41 அடி:

பொருள் மிகும். கொடுக்கல், வாங்கல் நன்றாக நடக்கும்.

42 அடி:

  வாழ்வில் சகலமும் கிடைக்கும் இடமாக இருக்கும்.

43 அடி:

எதிலும் ஏமாற்றம் கிடைக்கும். ஒரு அடி உயர்ந்தால் பல அடி சறுக்கும்.

44 அடி:

நோய் கண்பாதிப்பு நேரிடும். ஏக்கம் தான் மிஞ்சும். துன்பமும், துயரமும் போட்டி போடும்.

45 அடி:

மிகுந்த பொருள் கிடைக்கும். புகழ் பெருகும். நன்மைகள் கிடைக்கும்.பல குழந்தைகள் இருக்கும்.

46 அடி:

வறுமை குடிபுகும். எந்த பெரிய காரியமும் செய்ய முடியாது. விரக்தி வாழ்க்கை அமையும்.

47 அடி:

வரவு செலவு நின்று போகும். கடன் சுமை இருக்கும்.

48 அடி:

பகைவர்கள் துன்பத்தை உண்டாக்குவார்கள். விபத்து தரும். வறுமை மிகும்.

49 அடி:

திருட்டு கொடுப்பது நடக்கும். அவமானங்களை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்க  தண்டனை கிடைக்கும்.

50 அடி:
உறவினர் நண்பர்கள் பகை ஏற்படும்.

51 அடி:

   வம்பு வழக்கு அடிதடி சண்டை நடக்கும். ரத்தக்காயம் ஏற்படும்.

52 அடி:

விவசாயிகளுக்கு ஏற்ற அளவு. விவசாய வருமானம் பெருகும்.

53 அடி:

இல்லத்தில் இருக்கும் ஆண்கள் வேறு பெண்களோடு தொடர்பில் இருப்பார்கள்.

54 அடி:

அரசாங்க தண்டனை கோர்ட் தண்டனை கிடைக்கும்.

55 அடி:

உறவினர் நண்பர்கள் பகையை கொடுக்கும்.

56 அடி:

பல தலைமுறைகளுக்கு சொத்து சேரும் பல தலைமுறை மக்கள் சிறப்பாக வாழ்வார்கள்.

57 அடி:

குழந்தை பிறப்பில் தடையை கொடுக்கும்.

58 அடி:

துன்பங்கள் துயரங்கள் தொடரும்.

59 அடி:

போன தலைமுறை கஷ்டப்பட்டு  சொத்து சேர்த்து அதனை, இந்த தலைமுறை அழிக்கும்.

60 அடி:

தொழில் சிறப்பாக நடக்கும் திரவியங்கள் சேரும்.

61 அடி:

மனதில் அமைதி இருக்காது. பிறரிடம் அடிமையாக நேரிடும்.

62 அடி:

வறுமை,  வருத்தம்  குடியிருக்கும்.

63 அடி:

பொன், பொருள் போற்றத்தக்க வாழ்வு அமையும். துறவிகள் அருளாசி கிடைக்கும்.

64 அடி:

அரசு உதவி, அரசாங்க ஆதரவு உண்டாகும். பரிசு கிடைக்கும். பட்டங்கள், பதவிகள் தேடி வரும்.

65 அடி:

வாழ்க்கைத் துணையிடம் பரிவு, பாசம் இருக்காது. பிரச்சனைகளை உண்டாக்கி மனைவி பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்.

66 அடி:

மன அமைதி, மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் விருத்தி ஆகும்.புகழ் பெருகும்.

67 அடி:

திருடர்களால் தொந்தரவு ஏற்படும். தீய சக்திகள் குடியேறும். பேய், பிசாசு தாண்டவமாடும்.

68 அடி:

எதிர்பாராமல் பொருள் வரவு நடக்கும். துறவிகள் தொடர்பு, ஆன்மிகவாதிகள் ஆதரவு

69 அடி:

புகழ் சேதமாகும், தீயால் சேதம் உண்டாகும். தீயோரால் துன்பம்

70 அடி:

சொந்த ஊரில் செல்லும் இடமெல்லாம் சிறப்பும், மரியாதையும் உண்டாகும். செல்வம் தாராளாமாக வந்து சேரும்.

71 அடி:

நல்லவர்கள் ஆதரவு கிடைக்கும். அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

72 அடி:

அனைத்து செல்வங்களும் வந்து சேரும். ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.

73 அடி:

சுற்றத்தார்க்கு செலவழித்தே ஏழையாக நேரிடும். புகழ், பொருள் விரயம் ஆகும்.

74 அடி:

பதவி கிடைக்கும். பலரும் பாராட்டுவார்கள். பொன், பொருள் சேர்க்கை நடக்கும்.

75 அடி:

சேமிப்பு காலியாகும். அருங்குணம் மாறும். அன்பு மனதிலிருந்து வெளியேறும்.

76 அடி;

நண்பர்களால் தீமை விளையும். எவர் உதவியும் கிடைக்காது. கொடியவர்கள் பயமுறுத்தல் இருக்கும்.

77 அடி:

பெரிய பிரச்சனை, துன்பம் ஆனாலும் சமாளிக்க முடியும். தேவையான பொருள்கள் கிடைக்கும்.

78 அடி:

எதிர்காலம் சூன்யம் ஆகும். அவமானங்கள் நேரும்.

79 அடி:

பால் தொழில் நன்மை தரும். பண்ணைத் தொழில் சிறப்பாக இருக்கும்.

80 அடி:

சுகபோக வாழ்வு கிடைக்கும். மங்கையர் உறவு, நன்மை உண்டாக்கும். சொகுசு வாழ்வு கிடைக்கும்.

81 அடி:

விபத்து,  உண்டாகும். செல்வம் குறையும்.

82 அடி:

தீயால் விபத்து.

83 அடி:

வீடு பாழடையும். ஏழ்மை மட்டும் தான் குடியேறும். இன்னல்கள் சூழ்ந்து இருக்கும்.

84 அடி:

எதிர்பாராமல் உதவியும், நன்மையும் உண்டாகும். வருவாய் பெருகும் பதவி உயரும்.

85 அடி:

அரசாங்க ஆளும் கட்சி உறவும் நன்மை தரும். சொந்த தொழில் மேன்மை தரும்.

86 அடி:

பிறர் இகழ்வாக பேச நேரிடும். தொல்லை, துயரங்கள், அல்லல்கல் மிகும்.

87 அடி:

பிரயாணங்கள் பெருமை தரும். எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும்.

88 அடி:

இறை அருள் கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

89 அடி:

நல்வாய்ப்புகள் தேடி வரும் முன்னேற்றத்திற்க்கு  அடிக்கல் நாட்டலாம்.

90 அடி:

அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும்.

91 அடி:

கல்வியில்  பலன்கள் உண்டாகும். நல்லவர்களின் நேசமும் ஆதரவும் உண்டாகும். தெய்வ அருள் கிட்டும்,

92 அடி:

அரசு பட்டயம் கிடைக்கும். அரசாங்க மற்றும் ஆளும் கட்சியால் நன்மை

93 அடி:

ஆட்சி செய்து வரும் மக்கள் மூலம் தொந்தரவு, தண்டனை ஏற்படும். அரசாங்க ஆணைகளுக்கு அடி பணிய நேரிடும்.

94 அடி:

செல்வ செழிப்பு காணாமல் போகும். நிம்மதி நிலை குலைந்து போகும்.

95 அடி:

பொருள் விருத்தி அடையும். புகழ் சேரும். பெரிய மனிதர்கள், செல்வம் படைத்தவர்கள் தொடர்பு நன்மை

96 அடி:

சேமிப்பு செலவழியும். ஆபரணங்கள், பொன் சேதம் ஆகும். திருடர்களால் தீமை ஏற்படும்.

97 அடி:

கடல் வியாபாரம் செழித்து பொருள் விருத்தி அடையும்.

98 அடி:

எல்லோரிடமும் நல்ல உறவு உண்டாகும். நன்மைகள் புரிய நேரிடும்.

99 அடி:

செல்வந்தவர்கள் நட்பு, தொடர்பு, உதவி கிடைக்கும். அரசாங்க ஆளும் கட்சியினால் நன்மை.

100 அடி:

பொன், பொருள் விருத்தி அடையும். எல்லா நலன்களும் விளையும்.

101 அடி:

புகழ் கிடைக்கும். மன மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும்.

102 அடி:

பல நன்மைகள் தேடி வரும். பிறறை கவரும் வசீகர சக்தி உண்டாகும்.

103 அடி:

தீய  உறவு ஏற்பட்டு துன்பங்கள் மிகும். திருடர் பயம் ஏற்படும். நேர்மை குணம் இருக்காது.

104 அடி:

வருவாய் இழப்பு துணை கிடைக்கும். இலாபம் தரும். உறவினர்களால் செலவு ஏற்படும்.

105 அடி:

நல்லறம் ஆகாத வாழ்க்கை. மனைவியால் துன்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு.

106 அடி:

பண ஆற்றல் பெருகும். அறிவு வளரும். அன்புள்ளம் கொண்டவர் நட்பு ஏற்படும்.

107 அடி:

சம்பாதித்தது இழக்க வேண்டி வரும். ஈன குணமுள்ள மனிதர்களின் தொடர்பு ஏற்படும். வறுமை தாண்டவமாடும்.

108 அடி:

ஆன்மிக சமய தலைவர் அன்பும், தொடர்பும் ஏற்படும். மன அமைதி உண்டாகும். எதிபாராத நன்மைகள் கிடைக்கும்.

109 அடி:

மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

110 அடி:

உடல் நிலத்தில் உற்சாகம் பிறக்கும். பொருள் தேடி வரும்.

111 அடி:

சுப நிகழ்வுகளே அதிகமாக நடக்கும்.

112 அடி:

தடங்கல்கள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை சிறப்பாக இருக்கும்.

113 அடி:

வரவுகள் மிகுதியாக இருக்கும். யோகம் நிறைவாக இருக்கும்.

114 அடி:

தொழில்  பயணங்கள்  இருக்கும். பெரிய நகரங்களில் வாழும் நிலை ஏற்படும். உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்வார்.கப்பல் வியாபாரம் நடக்கும்.

115 அடி:

பணக்கார வாழ்க்கை  தரும். குதூகலமான குடும்ப வாழ்க்கை உண்டாகும். அமைதியான சூழ்நிலை நிலவும்.

116 அடி;

பெரும் செல்வமும், குறைபடாத வாழ்வும் கிடைக்கும். வாழ்வில் துன்பங்களே இல்லை.

117 அடி:

வணிகம் நன்றாக இருக்கும். பண்ணைத் தொழில் சிறப்பு தரும். கால்நடைபால் பாக்கியம் இருக்கும்.

118 அடி:

தீயபலனே நடக்கும் இடமாக. செல்வம், சொத்து அழியும். மன நிலை பாதிப்பு தரும்.

119 அடி:

புகழ் உண்டாகும். புகழ் வரும்.

120 அடி

நல்ல அளவு ஆகும். இதற்கு மேல் எந்த அளவாக இருந்தாலும் நன்மைகள் கிடைக்கும்.

Loading