
தினசரி நாள்காட்டி 1.12.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.15ந் தேதி . வியாழக்கிழமை காலை 7.23 வரை வ.அஸ்டமி திதி பிறகு நவமி திதி. காலை 5.31 வரை பூரட்டாதி நட்சத்திரம் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
வாஸ்து தவறு உள்ள இடங்களுக்கு ஒரு வாஸ்து ஆலோசகர் செல்லும் பொழுது அங்கிருக்க கூடிய தவறுகளை திருத்தம் செயலை செய்யும் போது அந்த வாஸ்து நிபுணரை கர்மா சார்ந்த பதிவு தொடருமா? என்று கேட்கும் பொழுது நிச்சயமாக தொடரும் என்று தான் சொல்வேன். பொதுவாக வாஸ்து குற்றம் இருக்கக் கூடிய ஒரு வீட்டில் ஒரு மனிதன் வாழும் போது அங்கு வாழும் மனிதர்களை வாஸ்துவின் தவறுகள் இன்னல்களை கொடுக்கும். இதுபோல வாஸ்து குறை இருக்கிற வீட்டில் ஒரு வாஸ்து ஆலோசகர் வாஸ்து ஆலோசனை கூறுவதற்கு நேரில் செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய தீய அதிர்வுகள் கண்டிப்பாக வாஸ்து நிபுணர்களை பாதிக்கும். எப்படி என்று சொன்னால் ஒரு விதமான வாழ்க்கை வாழக்கூடிய நிகழ்வுகளை அவர்களுடைய கர்மா உருவாக்கி வைத்திருக்கும். அந்த கர்மாவை மாற்றும் செயலாக ஒரு வாஸ்து நிபுணர் செயல்படும் பொழுது , ஒவ்வொரு வினைக்கும் எதிர்மறை உண்டு என்கிற வகையில் அவர்களை பாதிக்கும். அதே சமயம் ஒரு வாஸ்து ஆலோசகர் குடியிருக்கும் இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம் வாஸ்து விதிமுறைக்கு அமைந்திருந்தால் நிச்சயமாக பாதிப்பில் இருந்து அவர் தப்பித்துக் கொள்ள முடியும். ஒத்ததை ஒத்தது இருக்கும் என்கிற வகையில் அவருடைய இல்லம் எந்த அமைப்பில் இருக்கிறதோ அது சார்ந்த நிகழ்வை ஒரு மாற்றி கொடுக்கும் செயலை போகிற இடங்களில் அவர் செய்வார். அதே சமயம் அந்த நிகழ்வு சார்ந்த விஷயத்தில் இருந்து ஒருவர் தப்பித்துக் கொள்ள அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கை கால் முகம் நன்றாக அலம்பி சுத்தம் செய்து விட்டு வரும் பொழுது அந்த குறைகள் தாக்கம் அவருக்கு மட்டுப்படுத்தப்படும். கூடவே அவர்களுக்கு உயிர் சக்தி கொடுக்கும் பொருளை கலந்து அந்த தண்ணீரில் கலந்து சுத்தம் செய்து வெளியேறும் போது அவர்களை அது பாதிக்காது. அதே சமயம் வாஸ்து பார்க்க போகிற இடம் தண்ணீர் குடிப்பதும் ,உணவு எடுத்துக் கொள்வதும், உறவுமுறை வைத்துக் கொள்வதும் உணவு எடுத்து கொள்வதும் தவறு.ஆனால் இந்த நிகழ்வுக்கு செல்லாது வேறொரு முறை நண்பராக செல்லும் பொழுது உறவினராக செல்லும்போது உணவு எடுத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. ஆனால் வாஸ்து சீர்திருத்தத்திற்காக செல்லும் பொழுது உணவு தண்ணீர் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது உறவு வைத்துக் கொள்ளாது திருமண நிகழ்வை போல திருமணம் உறுதி ஆவதற்கு முன்பு கை நனைக்க மாட்டோமோ அதுபோல, அதே விதியை வாஸ்துவிலும் பின்பற்ற வேண்டும் . அதாவதுஒரு வாஸ்து நிபுணர் பின்பற்ற வேண்டும். ஒரு வாஸ்து நிபுணரை அழைக்கும் பொழுது அவரை வரவேற்கிறேன் என்று சொல்லி அவர்களாகவே தங்களுக்கு கஷ்டம் நீக்கும் செயலை தடுக்கும் நிகழ்வு வைத்துக் கொள்ளக் கூடாது.அப்படி உறவினர்கள் போல நட்பு உறவுகள் வைத்தால், அந்த வாஸ்து நிபுணர் சொல்வதை அவருடைய வாடிக்கையாளர் கேட்க மாட்டார்கள் . இது 100% நான் அறிந்து கொண்ட உண்மை.இது ஒரு விழிப்புணர்வு பதிவு.
154 total views, 1 views today