Chennai vastu live calendar 30.11.2022

Chennai vastu consultant

தினசரி நாள்காட்டி 30.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.14ந் தேதி .புதன்கிழமை காலை 9.00  வரை வ.சப்தமி திதி பிறகு அஸ்டமி திதி. காலை 6.59 வரை அவிட்டம் நட்சத்திரம் பிறகு சதயம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று காலை 7 மணிக்கு மேல்  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today

வாஸ்துவில் சனி மூலை. வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சில மக்கள் சொல்லுகிற விஷயம் சனி மூலை எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்கின்றனர். சனிமூலை என்பது ஈசானிய மூலையை தான் சனிமூலை என்று சொல்கிறோம்.இதனை ஒரு சனியின் மூலையோ என்றும் கேட்கின்றனர். இந்த இந்த ஈசானிய மூலை 90 டிகிரி இருக்க வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் குறுகிய அமைப்பில் இருக்கலாம். ஆனாலும் அது தவறுதான். ஆனால் அந்த மூலை விரிந்த அமைப்பில் எப்பொழுதும் இருக்கக் கூடாது. மடங்கிய அமைப்பாகவோ, முனை சிதறிய அமைப்பாகவோ இருக்கக் கூடாது. ஈசானிய மூலை எக்காரணம் கொண்டும் வெட்டுப்படக்கூடாது . ஒரு சில நகர்ப்புற நகர அமைப்பு விதிகளின்படி அந்த மூலையை மடக்கி வைத்து விடுகின்றனர். அப்படி மடக்கி வைப்பதும் மிகப் பெரிய தவறு. அந்த ஈசானிய மூலையில் எப்பொழுதுமே மரங்கள் மற்றும், உயர்ந்த படிகள், உயர்ந்த அமைப்பில் சுவர்கள், மாடிக்கு ஏறுகிற லிப்ட் சார்ந்த விஷயங்களை  வைக்கக் கூடாது. இது வீடுகள் மட்டும் இன்றி எந்த கட்டிடமாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   உதவி
ரிஷபம்- சுகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- ஆர்வம்
சிம்மம்- நன்மை
கன்னி- பாராட்டு
துலாம் – சிந்தனை
விருச்சிகம்- அமைதி
தனசு- பாசம்
மகரம்- விருத்தி
கும்பம்- தேர்ச்சி
மீனம் – பரிவு

Loading