Agni Deva Vastu

Agni Deva Vastu

ஆக்னேயம் என்று சொல்லக்கூடிய அக்னி தேவன் தென்கிழக்கு திசை அதிபதியாக இருக்கின்றார். இரண்டு தலைகளோடு, மூன்று கால்களோடு, நான்கு காதுகளோடு, இரண்டு கைகளோடு, ஏழு நாக்குகளோடு உடையவர். அக்கினி தேவர் ஸ்வாகா, ஸ்வேதா என்ற இரு தேவதைகளை தேவிகளாக உடலோடு இணைந்து இருக்கிற நிலையில் இருக்கின்றார் என்று நம்முடைய இந்து புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகத்தில் ஐந்தில் ஒரு பாகம் அக்கினியாக இருக்கின்றது  அக்னி  என்று சொன்னாலே கோணலாக நடக்கின்ற நிலை என்று பொருள். ஆக வாழ்க்கை கோணலாக மாறுவதற்கு, குழப்பம், கழகம், அலைச்சல், அழிவு அனைத்திற்கும் அக்னி மூலை தான் காரணம்.அக்னி மூலம் விளக்கும் ஏற்ற முடியும். அக்னி மூலம் மற்ற பொருட்களை  ஒன்றும் இல்லாத சாம்பலாகவும் மாற்ற முடியும். அக்னி மூலை சரியாக இருந்தால் மட்டுமே கடன் தொந்தரவுகள், துக்கம் மனக்கோணல்கள் ஏற்படாத நிலை இருக்கும் அக்னி வளர்வது குறைவதோ கண்டிப்பாக கூடவே கூடாது

Agni Deva, who can be called Agneyam, is the ruler of the south-east direction. He has two heads, three legs, four ears, two hands and seven tongues. Our Hindu Puranas say that Agni Devar Swaga and Sweda are two demigods who are conjoined with his body as goddesses. One-fifth of this world is fire. When we say fire, it means the state of walking crookedly. Agni corner is the reason for life becoming crooked, chaos, association, wandering and destruction. Agni can also light a lamp. Agni can turn other things into nothing but ashes. Only if Agni’s angle is correct, there will be no debt problems, sorrows, and Agni’s growth should not decrease or increase.

Loading