Vastu consultant calendar
தினசரி நாள்காட்டி 16.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.29ந் தேதி . ஞாயிறு காலை7.05 வரை சஷ்டி திதி பிறகு தே.சப்தமி திதி. இரவு 1.58 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள். கரிநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
வாஸ்து சார்ந்த ஜோதிட ரகசியங்கள் சார்ந்த பதிவில் ஏற்கனவே அஸ்வினி நட்சத்திரத்தை பார்த்தோம். இன்று பரணி நட்சத்திரத்தை தெரிந்து கொள்வோம். பரணி நட்சத்திர உருவம் வானத்தில் அடுப்பு போன்றிருக்கும். முக்கோணம் போன்றும், பெண்ணின் யோனி போன்றும் காட்சி அளிக்கும். பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் இருக்கின்றது. பரணி நட்சத்திரத்திற்கு அதிபதி சுக்கிரன். பரணி நட்சத்திரத்தில் நீசம் அடைகிற கிரகம் சனி. பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமன். பரணி நட்சத்திர உருவம் அடுப்பு என்பதாலும், சுக்கிரன் வீட்டைக் குறிக்கும் கிரகம் என்பதாலும், புதியதாக கட்டிய வீட்டில் முதன்முதலாக அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு உந்த நட்சத்திரம் பரணி நட்சத்திரம். பரணி நட்சத்திரம் இருக்கின்ற ராசி மேஷ ராசி என்பதால் அதன் அதிபதி செவ்வாய் என்பதால் செங்கல் சூளை மண் பானைகள் சுடும் சாலைகளில் நெருப்பு ஏற்ற சிறப்பான நட்சத்திரம். பரணி நட்சத்திரத்தின் உருவம் மாந்திரச் சக்கரங்களில் இருக்கும் முக்கோணம் போல இருப்பதால், மாந்திரீக சக்கரம் வரைவதற்கு ஏற்ற நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் மூன்று முனைகளும் ஈட்டி போல் இருப்பதால் ஆயுத பிரயோகம் செய்ய, போர் புரிவதற்கும் ஏற்ற நட்சத்திரம் . அந்த காலத்தில் மன்னர்கள் பரணி நட்சத்திர நாளில் தான் போருக்கு சென்றார்கள். அதேசமயம் பெண்ணின் உறுப்பு போல இருப்பதால் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்ற நட்சத்திரம். கணவனை வசியப்படுத்த நினைக்கும் பெண்கள் பரணி நட்சத்திரத்தில் கணவனோடு சேர்ந்தால் வசியம் ஆவார். Vastu consultant calendar
பரணி நட்சத்திரத்தில் தொழில் காரகன் சனி நீச்சமடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் பொழுது பரணி அன்று குறைந்த வேலைக்கு ஆள் கிடைப்பார்கள். தொழிலாளர் பிரச்சினை வரும் போது தொழிலாளர் போராட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரம்பரணி. திருமணத்திற்கு மட்டுமே ஆகாது. ஆனால் திருமண தடைகள் நீங்க வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரம். பரணி நட்சத்திரம் அன்று காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். விரைவில் திருமண நடக்கும். அதே சமயம் புதிய வீடுகள் கட்ட தடைகள் இருக்கும் பொழுது பரணி நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மையை வழிபடும் பொழுது , புதிய வீடு கட்டும் யோகம் கிடைக்கும். புது வீடு கட்டும் கட்டுகிற விஷயத்தில் தடைகள் இருக்கும் போது, தடைகள் விளகும்.
_____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – அன்பு
ரிஷபம்- அமைதி
மிதுனம்- ஆக்கம்
கடகம்- லாபம்
சிம்மம்- முயற்சி
கன்னி- வெற்றி
துலாம் – உற்சாகம்
விருச்சிகம்- வருத்தம்
தனசு- புகழ்
மகரம்- நிம்மதி
கும்பம்- சுகம்
மீனம் – இன்பம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#October_16
சர்வதேச உணவு தினம்
சிலி ஆசிரியர் தினம்
பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)