rasi palan 17.10.2022

rasi palan

17.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 17.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.30ந் தேதி .  திங்கட்கிழமை  காலை 9.32 வரை சப்தமி திதி பிறகு  தே.அஸ்டமி திதி. விடியற்காலை 4.58 வரை புனர்பூசம் நட்சத்திரம். பிறகு பூசம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்.    .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திர ரகசியங்கள் வரிசையில் ஒவ்வொரு நட்சத்திரமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்கள் உங்களுடைய பார்வைக்கு. கிருத்திகை நட்சத்திரம் வானத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவத்தில் இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன்.rasi palan இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சந்திரன் . 27 நட்சத்திரங்களில் இது மூன்றாவது நட்சத்திரம். பொதுவாக உடைபட்ட நட்சத்திரத்தில் அதாவது காலற்ற, தலையற்ற, உடலற்ற நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்வது கிடையாது. ஆனால் அந்த நட்சத்திரங்கள் பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற நட்சத்திரங்கள் அதாவது இரண்டு ராசியில் இணைந்து இருக்கும் இந்த நட்சத்திரம், ரிஷப ராசியையும், மேஷ ராசியையும் இணைத்து வைத்த நட்சத்திரம். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். பணத்திற்கு சுக்கிரனும், கடன் தொல்லைக்கு செவ்வாயும் அங்கம் வகிக்கின்றன. ஆக கடன் தொல்லைகள் இருந்து நிவாரணம் பெற நினைக்கிற மக்கள் ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால், கடன் தொல்லை விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பெண்கள் ஜாதகத்தில் கணவனுக்கு செவ்வாயும், மனைவிக்கு சுக்கிரனும் குறியீடுகளாக இருக்கின்றன. ஆண்கள் ஜாதகத்தில் மனைவிக்கு கிரகம் சுக்கிரன். திருமணம் ஆக வேண்டும் என்று சொன்னால் அல்லது தள்ளிக் கொண்டே போனால், திருமணம் ஆன தம்பதிகள் இடையே சண்டை சச்சரவுகள் இருந்தால் மாதா மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட மேற்கண்ட தொல்லைகள் விலகும்.

ஆக செவ்வாய்க்கிழமையும், கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அல்லது, வெள்ளிக்கிழமையும் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் ஆண் பெண்  கணவன் மனைவி அந்நியோன்யம் கூடும். ஒரு சில இல்லங்களில் மனைவி கணவனை கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு சில இல்லங்களில் கணவன் மனைவியை கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த நிலை மாற வெள்ளிக்கிழமை கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில், செவ்வாய்க்கிழமை கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில், விரதம் இருந்து முருகனை வழிபட்டால் இந்த பீடைகள் விளகும்.கலைத்துறை சார்ந்த மக்கள் கிருத்திகை விரதம் இருந்தால், புகழ் உச்சிக்குச் செல்ல முடியும். கலைத்துறையில் பிரபலமடைய நினைக்கின்ற மக்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து சென்னையில் இருக்கின்ற கபாலீஸ்வர பெருமானை அல்லது திருபோருர் கந்தசாமி பெருமானை வழிபட்டால் அவர்களுடைய எண்ணங்கள் வெற்றி பெறும்.
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –    பொறுமை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- ஆசை
கடகம்- விவேகம்
சிம்மம்- ஆக்கம்
கன்னி- பாராட்டு
துலாம் – அன்பு
விருச்சிகம்- செலவு
தனசு- நற்செயல்
மகரம்- வரவு
கும்பம்- புகழ்
மீனம் –    சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_17

Chennai vastu chennai surrounding

உலக வறுமை ஒழிப்பு தினம்

கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)

அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)

போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)

Loading