வாடகை வீடுகளுக்கு வாஸ்து | Vastu Rented House

Vastu Rented House

வாடகை வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, என்னை பொறுத்த அளவில் பெரிய அளவில் நிலை நிறுத்துவது என்பது கடினம். பெரிய நகரங்களில் ஒரு கட்டிடத்தில்  ஆறு வீடுகள் இருந்தால், அதில் அதில் இரண்டு வீடுகள் மட்டுமே வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு கொண்டுவர முடியும். மற்ற அனைத்து வீடுகளிலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு கொண்டுவருவது கடினம். அந்த வகையில் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாடகைக்கு வீடு பிடிப்பது கூட பெரிய அளவில் மனித வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்காது. அந்த வகையில் வாடகைக்கு வீடு பிடிப்பது என்பது கொஞ்சம் கடினமான பணியாக தான் இருக்கிறது.  ஓரளவுக்கு பாசிட்டிவாக இருக்கக்கூடிய வாஸ்து விதிகள் இருக்கக் கூடிய வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வது நலம். அந்த வகையில் வடக்கு பார்த்த வீடுகளில் நான்கைந்து வீடுகள் வரிசையாக இருக்கிறது என்று சொன்னால், ஒரே தளத்தில் கிழக்குப்புற வீட்டினை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதே போல மேற்கு பார்த்து இருக்கிற வீடுகளில் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால், தொடர்ந்து வரிசையாக இருக்கக்கூடிய லைன் வீடுகளில் மேற்கு பார்த்த வடக்கு கடைசியில் உள்ள வீட்டை எடுக்கும்பொழுது ஓரளவுக்கு வாஸ்து இருக்கும். அதேபோல தெற்கு பார்த்து இருக்கிற வீடுகளில், தென்கிழக்கு கிழக்கில் இருக்கிற வீடு ஓரளவுக்கு வாஸ்து விதிகளுக்கு பொருந்தி வரும். அதே போல கிழக்கு பார்த்து இருக்க வீடுகளில், பல வீடுகள் வரிசையாக இருக்கும் பொழுது வடக்கில் இருக்கிற வீடு வாஸ்து விதிகளுக்கு ஒத்துப் போகக்கூடிய நிலையாக இருக்கும்.

இதனைத் தவிர மற்ற அனைத்து வீடுகளுமே கிழக்குப் பார்த்த வீடுகளில் கிழக்கு மட்டும் திறந்திருக்க அமைப்பும், மேற்கு பார்த்த வீடுகளில் மேற்கு மட்டும் திறந்திருக்கும் அமைப்பும், வடக்கு பார்த்த வீடு களில் வடக்கு மற்றும் கிழக்கு,  தெற்கு பார்த்த வீடு களில் தெற்கு மட்டும் திறந்திருக்கும். அது ஒரு சில மக்களுக்கு திசைகளை பொறுத்து பலன்களை அளிக்கும் தவிர, முழுக்க முழுக்க பலன்களை கொடுக்கிற வீடாக இருக்காது. அந்த வகையில், வாடகைக்கு வீடு பிடிப்பது என்பது அறிந்து , ஆராய்ந்து பிடிப்பது நல்லது. ஒரு சில மக்கள் சொல்வார்கள். இந்த வீட்டிற்கு வந்த பிறகு புதிதாக இடம் வாங்கி வீடு கட்டி சென்றார்கள் என்று சொல்வார்கள். அது நல்லதாக கண்களுக்குத் தெரியும். ஆனால் அது ஒருவகையில் எதிர்மறைப் பலனாக கூட அவர்களுக்கு விட்டுவிடும்.வீடு தவறாக இருக்கிறது, வீடு தவறான அமைப்பில் வீடுகளை கட்ட வைத்து, அந்த வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற காலகட்டம் வரை எதிர்மறை பலன்களை கொடுக்கிற  வீடாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் முதல் தரமான வாடகை வீடு என்பது என்னைப் பொறுத்த அளவில் வடக்கும், கிழக்கும் திறந்திருக்கிற, வடக்கு கிழக்கு வாசல் இருக்கிற, வடக்கு ஜன்னல் இருக்கிற,கிழக்கு ஜன்னல் இருக்கும் வீடுதான் முதன்மை தரமான வீடு என்பேன். வாடகை வீடுகளை பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட முறையில் தான் எடுக்க வேண்டும். ஒரு மூன்று மாடிகள் இருக்கிறது என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் முதல் மாடியும், இரண்டாவது மாடியில் வாஸ்து விதிகளுக்கு உட்புகுத்தி கொண்டுவரமுடியும். தரைத்தளத்தில் வாடகைக்கு வீடு பிடித்து சென்றாலும்,  நான் சொல்கிற கிழக்கு பார்த்து வரிசையாக இருக்கிற வீடுகளில், வடக்கு ஒட்டி இருக்கும் வீடு கூட ஒரு சில எதிர் பலனை கொடுக்கிற வீடாக தான் இருக்கும்.ஆக தவறாக இருந்தாலும், வேறு வழியில்லை எனும் பொழுது அந்த வீட்டினை வாடகைக்கு பிடித்துக் கொள்ளலாம். வாடகை வீடுகள் என்கிற பட்சத்தில், படுக்கையறை என்பது தென்மேற்கில் வரவேண்டும். கழிவறைகள் என்பது வடமேற்கில் வரவேண்டும். இரண்டாவது படுக்கையறை என்பது வடமேற்கில், அல்லது தெற்கு சார்ந்த தென்கிழக்கில்  தாராளமாக வரலாம். அதற்குப் பிறகு உணவு அருந்தக் கூடிய டைனிங் டேபிள், டைனிங் ரூம் என்று சொல்லக்கூடிய அறையோ  அல்லது, சமையலறை தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் வரலாம். வரவேற்பறை என்பது கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு, வடக்கு பார்த்த வீடுகளுக்கும் வடகிழக்கு, மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு, தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு  அமைத்துக்கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற போது மேற்கு பார்த்த, வடக்கு பார்த்த வீடுகளுக்கு, வடக்கு மற்றும், தெற்கு பார்த்த வீடுகளுக்கு  தென்கிழக்கு ஒட்டியும் வரவேற்பறை வரும். ஆக எது எப்படி இருந்தாலும், ஒரு வாடகை வீடுகளை பிடிப்பதில் சுற்றுப்புற சூழ்நிலைகளையும் பார்க்க வேண்டும். வாடகை வீடு சார்ந்த வீடுகளுக்கு வெளிப்புறப் பகுதிகளில் தெற்கும், மேற்கும் பள்ளங்கள் என்கிற விஷயங்கள் இருக்கக் கூடாது. அதேபோல கிழக்கும், வடக்கும் குன்றுகள், கரடுகள், மலைகள் உயர்ந்திருப்பது வாடகைக்கு செல்லக்கூடிய கட்டிடத்திற்கு தோசமே.ஆக இப்படி பல விசயங்களை  கண்டிப்பாக உற்று நோக்க வேண்டும். வாடகை வீடுகளில் கிணறு எங்கே  இருக்கிறது, போர்வெல் எங்கு இருக்கிறது. எப்படியிருக்கிறது. என்கிற விஷயத்தை பார்க்க வேண்டும் .இதற்கு பிறகு அந்த வாடகை வீட்டுக்கு வெளிப்புறப் பகுதிகளில் வேறு கிணறுகள் ஏதாவது இருக்கிறதா?. வேறு பல்லங்கள் அதாவது இந்த வாடகை வீடு சார்ந்த இல்லத்திற்கு தீமையை கொடுக்கிளதா?. என்கிற விஷயத்தை ஆராய்ந்து வாடகை வீட்டில் குடி செல்ல வேண்டும். இந்த அளவுக்கு ஒரு விஷயத்தை நீங்கள் பார்த்து வாடகை வீட்டில் குடியேறிணிர்கள் என்றால்,  அந்த வாடகை வீடு பெரிய அளவில் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.


Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *