அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து | apartment vastu chennai

வாஸ்து அமைப்பில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் என்று பார்க்கும்பொழுது, என்னை பொறுத்த அளவில் அனைத்து வீடுகளுமே ஒரு தற்காலிக தங்கும் இடங்களாக தான் இருக்கும் அமைப்பாக நான் பார்க்கப் படுகிறேன். ஒரு மனிதர் இருக்கிறார் அவருடைய மனைவி ,குழந்தைகள் அனைவரும் பெருநகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக பெரிய அளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பலனைக் கொடுக்காது. வாஸ்துவின் ரீதியாக அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும். இதற்கு ஒரு மாற்று விஷயமாக அவர்களின் பூர்வீக ஊரில் இருக்ககூடிய இல்லத்தை,நான் சொல்லுகிற முழு வாஸ்து விதிகளுக்கு கொண்டு வரும் பொழுது, பெரிய அளவில் தவறாக இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது . எனது வாஸ்து விதிகளின்படி, அடுக்குமாடி குடியிருப்பு என்பது மூன்று விஷயங்களை, மூன்று வகையில் வடிவமைக்க முடியும் . அந்தவகையில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தரமாக இருப்பது என்பது வடக்கும் கிழக்கும் திறந்து இருக்கும் அடுக்குமாடி மனையாகும். இரண்டாவது வகையில் வடக்கு மட்டும் திறந்து இருக்கிற அடுக்குமாடி குடியிருப்பு. மூன்றாவது வகையில் கிழக்கு மட்டும் திறந்திருக்கிற அடுக்குமாடி குடியிருப்பு. இதனை தவிர மற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாமே எதிர்மறை பலன்களை கொடுக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளாக இருக்கும். அப்படிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வசிக்கும் போது, வாஸ்து ரீதியாக எதிர்மறை பலன்களை கொடுக்கும். என்னை பொறுத்த அளவில் பெரிய அளவில் வடக்கும், கிழக்கும் மூடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகபட்சமாக பெற்றோர் மட்டும் வசிக்கக்கூடிய, அல்லது, கணவன் மனைவி  மட்டும் வசிக்கக்கூடிய அல்லது, கணவன் மனைவி அப்பா மட்டும்,அல்லது  கணவன் மனைவி மனைவியின் அம்மா அல்லது, மனைவியின் அப்பா மட்டும் இருக்கும் வீடுகளாக இருக்கின்றன.  இப்படித்தான் வாஸ்து பலனை கொடுக்கிற இல்லமாக 100 சதவீத அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இருக்கின்றன. அந்த வகையில் ஒருவர் வடக்கு முழுவதும் திறந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்,ஒருவர் கிழக்கு மட்டும் திறந்த அமைப்பில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.மற்றொரு மனிதர், வடக்கும், கிழக்கும் திறந்த அமைப்பில் இருக்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் அல்லது,மற்றொரு மனிதர் தெற்கு அல்லது, மேற்கு திறந்திருக்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் என்றால்,  அவர்களுடைய நேரம், காலம் சார்ந்த விஷயமாக இந்த இடத்தில் என்னால் பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் முதல் தரமான அடுக்குமாடி குடியிருப்பு என்பது என்னைப் பொறுத்த அளவில் வடக்கும் கிழக்கும் ஜன்னல் இருக்கிற வடக்கும் கிழக்கும் வானம் தெரிகிற, அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமே முதல்வகை அடுக்குமாடி குடியிருப்பாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட குடியிருப்புகளில் வாசல் என்பது தென்கிழக்கு தெற்கு அல்லது, தென் கிழக்கு மத்திய பாகத்தில் அல்லது, வடமேற்கு மேற்கு அல்லது, வடமேற்கு மத்திய பாகத்தில், மேற்கு மத்திய பாகத்தில் இருக்கிற வாசலாக இருக்கும்போது பெரிய எதிர்வினை, எதிர்மறை பலன்களை கொடுக்காது. ஆனால் தெற்கு பார்த்த, அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு பார்த்த அடுக்குமாடி குடியிருப்பில், தென்மேற்கு மேற்கு வாசல் வரும் பொழுது அது பெரிய பலன்களை கொடுக்காத அடுக்குமாடி குடியிருப்பாக தான் இருக்கும். என்னை பொருத்த அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே அவருடைய சொந்த கிராமம் சார்ந்த, சொந்த ஊர் சார்ந்த பகுதிகளில், ஒரு வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு ஒரு நல்ல வீட்டை கட்டி வைத்துக் கொள்வது நல்லது .அதில் பெற்றோர்களோ அல்லது, குறைந்த காலத்திற்கு வாடகைக்கோ மற்றவர்களை தங்கவைத்து, இவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்கிற ஒரு நிகழ்வை செய்துவிட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்த அளவில், பெரிய அளவில் வாஸ்து என்பது பார்க்கமுடியாது. சதுரம் செவ்வகம் இந்த விஷயத்தை கூட பெரிய அளவில் கொண்டு வர முடியாது. ஏதாவது ஒரு மூலை இல்லாத அமைப்பாகத்தான் இருக்கும். ஒன்று தென்மேற்கு இருக்காது அல்லது, தென்கிழக்கு இருக்காது அல்லது, வடகிழக்கு இருக்காது , அல்லது வடமேற்கு இருக்காது ,அல்லது தென்மேற்கு பல்லமாக இருக்கும். தென்கிழக்கு பல்லமாக இருக்கும் அல்லது, வடமேற்கு பல்லமாக இருக்கும். அதாவதுஅதிகபட்ச எதிரிடை வாஸ்து தவறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கப்படுகிறது. அடுக்குமாடி குடி பொருத்த அளவில் உச்ச வாசல் என்கிற ஒரு விஷயம் வேண்டும். தென் மேற்கு பகுதியில்  குடும்பத்தலைவர் மாஸ்டர் பெட்ரூம், வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் ஓர் சமையலறையும், வடக்கு சார்ந்த, வடமேற்கு சார்ந்த பகுதியில் குளியலறை அல்லது கழிவறையும், இருக்கவேண்டும். வடகிழக்கு அறையை குழந்தைகள் அறை அல்லது, வரவேற்பறையாக, உபயோகப்படுத்தும் பொழுது ஓரளவுக்கு பலன்களைக் கொடுக்கும் அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும்.

 485 total views,  3 views today

Leave a Comment

Your email address will not be published.