வாஸ்து டிப்ஸ்.. கண்ணில் படும் இடமெல்லாம் நாட்காட்டி

வாஸ்து டிப்ஸ்.. கண்ணில் படும் இடமெல்லாம் நாட்காட்டி   மாட்டாதீங்க..

உங்கள் இல்லத்தில்  பயன்படுத்தும் பொருளை கூட சரியான இடத்தில் சரியான திசையில் வைத்து பயன்படுத்த வேண்டும். புத்தாண்டு பிறந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. கடைக்கு போனாலே விளம்பரத்திற்காக தினசரி காலண்டரை  கொடுக்கிறார்கள். நீங்களும் அதை கொண்டு வந்து வீட்டில் மாட்டி வைத்து விடுகிறோம். வீட்டில் இருக்கும் நான்கு திசைகளிலும் காலண்டர் மாட்டக்கூடாது. வாஸ்து படி காலண்டரை எந்த திசையில் வைக்கலாம் எந்த திசையில் வைக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வது நலம்.

நாம் வாங்கிக் கொண்டு வரும் விளம்பர காலண்டரை வீட்டில் மாட்டும் முன்பாக சில கருத்துக்களை கவனிக்க வேண்டும். காலண்டர் என்பது நாட்களை,திதி நட்சத்திர யோக கரண நிகழ்வு தெரிந்து அன்றாடம் காரியம் செய்யக்கூடியவை, உடல் ஆரோக்கியத்தில் கூட மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.காரணம் நல்ல நேரம் பார்த்து முடிவு எடுப்பது போன்ற விசயங்களை தெரிந்து கொள்ள காலண்டர் அவசியம்

முதலில் நாம் நாட்காட்டி வைக்கும் திசை முக்கியம். அதற்கு முன்பாக பழைய நாட்காட்டி காலண்டர் நாம் வீட்டில் இருந்து அப்புற படுத்த வேண்டும்.

பழைய நாட்காட்டி மேல் புது காலண்டரை மாட்டி வைப்பது முன்னேற்றத்திற்கு தடையாகும். எனவே பழைய காலண்டரை நாம் எடுத்து விட வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் காலண்டர்களை மாட்ட வேண்டாம். கிழக்கு பக்கம் மாட்டினால் நாட்காட்டி, மேற்கு பார்த்தவாறு இருக்கும். காலண்டர்களை மேற்கு நோக்கியவாறு மாட்டுவது சரியான முறை கிடையாது. மேற்கு திசையில் உள்ள சுவற்றில் காலண்டரை வைப்பது சிறப்பு. ஏனெனில் காலண்டர் இறை உருவம் கிழக்கு பார்த்து இருக்கும்.

காலண்டரை எப்போதும் கிழக்கு சுவற்றில் மேற்கு திசையில் நோக்கி மாட்டி வைக்க வேண்டும், அது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலைக் அதிகரிக்கும். மேற்கு திசை சுவற்றை தவிர, நாட்காட்டியை வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் தெற்கு நோக்கி வைக்கலாம். ஏனெனில் குபேரர் இந்த திசையின் அதிபதியாக கருதப்படுகிறார்.

தினசரியம் காலண்டரில் நாள் அல்லது தேதியைப் பார்க்கும்போது, ​​உங்கள் முகம் எப்போதும் வடக்கு, கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். வாஸ்து படி தெற்கு நோக்கி இருக்கக் கூடாது. காலண்டரை தவறான திசையில் வைப்பது நிதி இழப்புக்கு வழிவகுக்கும். காலண்டரை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் இது காலத்தின் குறிகாட்டியாகவும் கருதப்படுகிறது. தெற்கு திசையில் காலண்டரை வைப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் கதவுக்கு பின்னால் ஒருபோதும் காலண்டரை மாட்டி வைக்க கூடாது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் காலண்டரை வைக்கக் கூடாது. இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தை மோசமாக பாதிக்கிறது. கதவுக்கு அருகில் இருக்கும்போது காற்றில் காலண்டர் பறக்க வாய்ப்புள்ளது இது அபசகுணமாகும்.

சுவாமி படங்கள் போட்ட காலண்டரைப் பூஜை அறையில் மாட்டி வைத்து, வீட்டு பூஜை படங்கள் போல் பாவித்து, பூஜை செய்யக்கூடாது. காலண்டர்களை நாம் அந்த குறிப்பிட்ட வருடம் முடிந்ததும் அகற்றி விடுவோம். பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பொருட்களை குப்பையில் போடுவது தவறாகி விடும்.

காலண்டரை ஒருபோதும் வீட்டின் வாசலிலோ அல்லது கதவுக்கு பின்னாலோ தொங்கவிடக்கூடாது. அது எதிர்மறை ஆற்றாலை அதிகரிக்கும். தினசரி சண்டையையும் பதற்றமான சூழ்நிலையையும் உருவாக்கும்.

காலண்டரில் அகோரமான படங்கள், சோகமானவர்களின் படங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அத்தகைய காலண்டர் வீட்டில் வாஸ்துதோஷத்தை உருவாக்குகிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் மாட்டும் நாள்காட்டியில் ரத்தக்கறை படிந்த போர்க் காட்சிகள், பாழடைந்த கட்டிடங்கள், காய்ந்த மரங்கள் அல்லது ஆவேசமான விலங்குகளின் படங்கள் இருக்கக் கூடாது. இதுவும் அபசகுணமாகும்.

புது காலண்டரை பழைய காலண்டரின் மீது மாட்டிவைக்கக் கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இதை செய்யவே கூடாது. இவ்வாறு செய்வதால், வாஸ்து தோஷம் அதிகரித்து, அந்த வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களின் ஆரோக்கியமும், முன்னேற்றமும் தடைபடும்.

வீட்டில் உள்ள பழைய காலண்டர் அட்டைகளை வீட்டிலேயே வைத்துக் கொள்வது, வீட்டில் பணக்கஷ்டத்தையும், எதிர்மறை ஆற்றலையும் ஏற்படுத்தும். கிழிந்த நாட்காட்டியை வீட்டில் வைக்கவே கூடாது. இது வீட்டில் வாஸ்து தோஷத்தை உருவாக்குகிறது. பழைய காலண்டரை குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். வாஸ்து டிப்ஸ்.. கண்ணில் படும் இடமெல்லாம் நாட்காட்டி,புது வருட காலண்டர்,வீடுகளில் காலண்டர் மாட்டுவதற்கும் வாஸ்து,வாஸ்து குறிப்புகள்: செழிப்பிற்காக புத்தாண்டு,

Loading