வடமேற்கு திசை

மனித வாழ்க்கையில் எந்த நேரத்திலும், சந்தோசம், மகிழ்ச்சி என்கிற விஷயம் எந்த நேரத்திலும் கிடைக்குமா?.. என்று சொன்னால் கிடைக்காது என்று சொல்லலாம். அதே வகையில் ஒரு வம்பு வழக்கு பிரச்சனைகள், வாக்குவாதங்கள், விவாதங்கள், பகை சார்ந்த விஷயங்கள், ஒருவருக்கு ஏற்படுகிறது என்று சொன்னால், அது வாஸ்து குற்றமா?.. என்று பார்க்கும் பொழுது என்னைப்போல இருக்கிற வாஸ்து நிபுணர்களுக்கு அது தெரியும். இது நிச்சயமாக வாஸ்து சார்ந்த பிரச்சினை தான் என்று சொல்ல முடியும். அந்த வகையில் தீராத வழக்குகள், வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள், உறவினர்களின் பகை, குழந்தைகளின் ஆரோக்கியம் அற்ற நிலை, படிப்பு மந்தம், தீராத வியாதி, கணவன் மனைவி பிரிந்து போகுதல், குடிப்பழக்கம் இது போல  எதிர் மறை நிகழ்வுகள் ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது, இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது, இந்த எல்லா பிரச்சினைகளுமே, வம்பு வழக்கு என்கிற பிரச்சனைகளில் தான் முடியும் என்று சொல்வேன்.

இந்த இடத்தில் இல்லத்தில் வடமேற்கு திசை தான் ஒரு இல்லத்தில் அனைத்து இடங்களையும் நிர்வகிக்கிற, உறவுகளை பேணுகிற இடமாக இருக்கின்றது . அந்த இடத்தில் அதன் சர்க்யூட், அதன் தொடர்பு துண்டிக்கும் பொழுது, அதாவது அந்த இடத்தில் பள்ளமாவோ அல்லது, மேடாகவோ, கோணலாகவோ அல்லது, மாடியில் உயரமாகவோ அல்லது, மாடியில் பள்ளமாகவோ ,சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதோ, சுற்றுச்சுவர் இழுத்து இருக்கிற அமைப்புகள் இப்படி இருக்கும் பொழுது மேற்கூறிய பிரச்சினைகளை கொடுத்து விடும். மேற்கூறிய எந்த தொந்தரவும் ஒரு மனித வாழ்க்கையில் வரக்கூடாது என்று நினைத்தால், வடமேற்கு வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு வைத்துக் கொள்வது நலம்

Loading