ரிஷப ராசி குரு பெயர்ச்சி Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam

ரிஷப ராசி குருபெயர்ச்சி பலன்கள்.ரிஷப ராசி குரு பெயர்ச்சி 2023-2024 Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணில் நல்ல கதிக்கு வெற்றியே. எண்ணுகிற எண்ணங்களை சிந்தனைகளை, எழுத்துக்களாக, கவிதைகளாக, ஒளி வடிவங்களாக மாற்றுகிற சாதனைக்குரிய மனிதர்களாக இருக்கிற ரிஷப ராசி சேர்ந்த மக்களுக்கான வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்வோம். இந்த இடத்தில் இதுவரையில் லாப ஸ்தானத்தில் இயங்கிக் கொண்டிருந்த அதி அற்புதமான ஒரு நிலையை கொடுத்த குரு, லாபம் சார்ந்த11 ஆம் இடமாக இருந்து நல்ல யோகத்தை கொடுத்த பணம் சார்ந்த குருபகவான், ஒரு செல்வ நிலையில் ஒரு மித மிஞ்சிய நிலையை கொடுத்த குரு பகவான், தற்போது விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பன்னிரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்கள். இந்த பிரகஸ்பதி கடவுள் 12ஆம் இடத்திற்கு பெயர்ச்சி என்பது இதுவரையில் பணம் தண்ணீர் போல உங்களுக்கு வந்து கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு தண்ணீர் இல்லாத நிலையாக அந்த பணத்தின் நிலை என்பது மாறும். ஆக பணம் சார்ந்த நிகழ்வு வருகின்ற 2 வருடங்கள் அந்த விரயம் என்று சொல்லக்கூடிய 12ஆம் இடமும், ஜென்மம் என்று சொல்லக்கூடிய ஒன்றாம் இடமும் குரு அமர்ந்த பொழுது வருகின்ற இரண்டு வருடங்கள் ஒரு சோதனையான காலகட்டமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தன விரயங்களும், தன இழப்புகளும், பொருளாதார நிலையில் மந்த நிலை, வாழ்க்கை வெற்றியை கொடுக்காத ஒரு நிலையும் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலைகளை இந்த  குரு ஆனவர் ஏற்படுத்துவார்கள்.

இதனை தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இந்த விரைய  காலகட்டத்திலும் ஜென்ம குருவின் காலகட்டத்திலும் அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஆக 2023 2024 காலகட்டங்கள் மிகவும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எப்படி ஒரு ஆமை தன்னுடைய ஓட்டுக்குள்ளாக தன்னுடைய அனைத்து அங்கங்களையும் சுருக்கி வைத்துக் கொள்கிறதோ அதுபோல, உங்களுடைய நடவடிக்கைகள், பேச்சு செயல் திறன் எதுவாக இருந்தாலும் வருகின்ற இரண்டு வருடங்கள் அடக்கி வாசிக்கும் பொழுது நாம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

பயணங்களில் சர்வே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது இரவு நேரங்களில் செல்லும் பொழுது, மழைக்காலங்களில் செல்லும்போது ஒரு எச்சரிக்கை தேவை. நமக்கு என்ன நடந்து விடப்போகிறது என்கிற ஒரு எண்ணத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் என்ன ஆவது என்கிற ஒரு சிந்தனையை நீங்கள் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் குரு விரய ஸ்தானமாக 12ஆம் இடத்திற்கு வருகின்ற பொழுது ,Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam
அயன சயன போகம் என்று சொல்லக்கூடிய அந்த அது சார்ந்த நிகழ்வில் கூட, படுக்கையறை சார்ந்த விஷயத்துல ,  படுக்கை சார்ந்த விஷயத்துல சோதனைகளை கொடுக்கிற காலகட்டமாக இருக்கும். ஆக வருகின்ற ஒரிரு வருடங்கள் மனஸ்தாபங்கள், குடும்பத்தில் இருக்கக்கூடிய மனைவி மக்களோடு மனசுதாபங்கள், பழக்க வழக்கங்களில் குழப்பங்கள், தொழில் சார்ந்த நிறுவனங்களில் பங்குதாரர்கள் இருப்பார்கள். அவர்களோடு குழப்பங்கள் வீண் விவாதங்கள், வேலை செய்கிற இடத்தில் வாக்குவாதங்கள்,  எந்த வேலை செய்தாலும் மேலதிகாரிகள் உங்களை வந்து ஒரு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்காது. நீங்கள் நல்லது தான் செய்வீர்கள். ஆனால் அது அவருடைய பார்வைக்கு தவறுகளாக கெடுதலாக தெரியும் . நீங்கள் அதை தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு பொறுமை காக்க வேண்டும். உங்களிடத்தில் நன்மை, உங்களிடத்தில் நியாயம், இருந்தால் கூட அந்த நியாயம் என்பது எடுபடாத ஒரு சூழ்நிலையாக தான் இருக்கும். வருகின்ற காலகட்டங்களில் ஆக, இந்த காலகட்டங்களில் ஜென்மம் என்பது பாதிக் கிணறு, விரயம் என்பது பாதிக்கிணறு அப்ப வருகின்ற இந்த காலகட்டங்களில் வருகின்ற இரண்டு வருடங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறீர்களா? நீங்கள் முன்னாடி செல்ல வேண்டாம். நடுவுல சொல்லுங்கள். பின்னாடி செல்லுங்கள். உங்களுடைய முகம் தெரியக்கூடாது. எந்த நிகழ்வாக இருந்தாலும், அதே சமயம் இந்த கோச்சார பலன்கள் என்பது அதிகபட்சமாக 10 15 சதவிகிதங்கள் பேசும்.  நேரம் உங்களுடைய ஜாதகத்தில் நேரம், மாறி இருக்கும் பொழுது.  ஆக இந்த வருகின்ற இந்த குரு பெயிற்சியை நீங்கள் வருகின்ற 22 .4 2023 அன்று அதிலிருந்து இரண்டு வருடங்கள் சர்வ ஜாக்கிரதயாக இருக்க வேண்டும். இந்த நாள் வருவதற்கு, வீடியோ போடுவதற்கு முன்னாடியே இருக்கிறது.அதாவது நான்கு மாதங்கள் இருக்கிறது. ஆகவே தெரிந்துகொண்டு நீங்கள் வந்து எச்சரிக்கையாக இருக்க இந்த பதிவு.

Loading