மருத்துவமனை வாஸ்து மருத்துவர் | vastu for hospital tamil

இன்று மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, பெரிய அளவில் தனி திறமையோடு தனிப்பட்ட முறையில் சிறப்பு புலமை பெற்ற மருத்துவர்களாக இருக்கின்றனர். ஒருசிலர் சிகிச்சைக்காக ஒரு மருத்துவரை, ஒரு நோயாளி நாடும் பொழுது அனைத்து விதமான பரிசோதனைகள் செய்த பிறகு அந்த நோய் சார்ந்த அறிகுறிகள் எதுவுமே இல்லை என்கிற விடை கிடைக்கும்.ஆனால் அந்த நோயிலிருந்து விடுபடாத நிலையிருக்கும் நிலை நோயாளிக்கு இருக்கும்.இந்த நிலைகள் எல்லாமே ஒரு மருத்துவருக்கு குழப்பத்தை கொடுக்கிற நிலையாக இருக்கும். அப்பொழுது என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்கிற குழப்பங்கள் கூட ஏற்படும். இந்த நிலையை கொடுப்பது எதுவென்று பார்த்தால் எனது அனுபவ அறிவின் படி ஒரு வாஸ்து விதிகளை உட்புகுத்தாது  இருக்கின்ற மருத்துவ மனையில் அமர்ந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தான் இந்த நிலை ஏற்படும் என்பேன். ஒரு  ஒரு நோயின் தீர்வுக்காக செல்லுகின்ற ஒரு நோயாளியின் இல்லம் மட்டும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்பொழுது ,என்ன நோய் , எதற்காக வந்திருக்கிறோம்,  எந்த இடத்திற்கு செல்ல இருக்கிறோம் என்கிற தீர்வுகளை கொடுத்து,நோயில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலையை கொடுக்கும். இது வாஸ்து பலம் பொருந்திய இல்லத்தில் இருந்தால் மட்டுமே நடக்கும். எதிர்மறையான இடங்களில் இருக்கும்போது பெரிய அளவில் அவர்களுக்கு துணை செய்யாது. மருத்துவம் சார்ந்த விஷயத்தில் அலைச்சலை கொடுக்கும் நிகழ்வில் கொண்டுபோய் விட்டுவிடும்.

vastu for hospital

அந்தவகையில் ஒரு மருத்துவம் பார்க்கிற மருத்துவர் தனது இல்லத்தை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அவரின் மருத்துவ மனையை, ஒரு வாஸ்து விதிகளுக்கு உட்புகுத்தி அமைக்கும் பொழுது அவர்களிடம் வந்த உடனே தீர்வினை பெற்றுச் செல்லும் நோயாளிகளாக தான் இருப்பார்கள். அப்படி இருக்கின்ற பொழுது எப்பொழுதுமே அந்த மருத்துவமனை கைராசியான எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கக்கூடிய மருத்துவமனையாக இருக்கும் . அதேபோல ஒரு  சில எதிர்மறை பலன்கள் ஒருசில மருத்துவமனைக்கு தீர்வினைக் கொடுக்கும். தென்கிழக்கு, தென்மேற்கு வடமேற்கு திசைகளில் ஏரி, குளம் , கிணறு இருக்கின்றபோது பெண்களுக்கு சார்ந்த நோய் குணமாக்கக்கூடிய மருத்துவ மனையாக இருக்கும் அல்லது, அந்த மருத்துவமனையில்  இருக்கும்  வாஸ்து தவறுகள் வயிறு சார்ந்த நோய்களுக்கு வைத்தியம் பார்க்க வருகின்ற மக்களாக இருப்பார்கள் .
ஒரு மருத்துவமனை தென்மேற்கு, மேற்கு திசையில் ஏரி குளம் கிணறு போன்ற விஷயங்கள் இருந்தால் ஆண்களுக்கு தீராத நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ மனைகளாக  மாற்றம் ஆகி இருக்கும். இந்த நோய் இருக்கிற மக்களின் இல்லங்களில் இந்த தவறு இருந்து பொறுந்தும் அமைப்பாக இந்த இடத்திற்கு வந்து செல்லக்கூடிய மக்களாக இருப்பார்கள். ஒரு மருத்துவமனையில் மருத்துவமனை கட்டிடம், தெற்கு பகுதி காலியிடம் அல்லது, வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பொழுது, அங்கு மருத்துவத்திற்காக பெண்கள் சிகிச்சைக்காக வரும் பொழுது அந்த இடத்தில் இருந்து குணமாக்கப்பட்டு வெளியேறி விடுவார்கள். கிழக்குப் பகுதிகளில் மருத்துவமனை கட்டிடம் இருந்து, மேற்கு பகுதிகளில் அதிக காலி இடம் இருக்கும் பொழுது, அந்த மருத்துவமனை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், எலும்பு முறிவு, கருப்பை சார்ந்த நோய்களை தீர்க்கும் குடல் சம்பந்தப்பட்ட வயிற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகளை மனநிலை பாதிப்பு போன்ற நோய்களை குணமாக்கும் இடமாக மாறிவிடும். அந்தவகையில் சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ச்சியாக தெற்கு பள்ளமும், தென்மேற்கில் ஏரிகளும் உள்ள அமைப்பாக உள்ளது. சென்னை ராஜாஜி மருத்துவமனை வட மேற்கு பகுதி, மேற்கு பகுதி, தெற்கு பகுதிகளில் கூவம் நதி ஓடுகிறது. இப்படி வாஸ்து ரீதியாக தவறாக இருக்கும் மருத்துவமனைகளில் ஆண்களுக்கு நோய் தீர்க்கும் நிலையமாக மாறி விடும். மற்றும் ஆண் நோயாளிகளே அதிகமாக இருக்கும் இடமாக இருக்கும்.

ஒரு நோயாளி தீர்வுக்காக ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர் இல்லத்தில் என்ன குறை இருக்கிறதோ அதுபோல இருக்கும் மருத்துவமனைக்கு தான் அவர் செல்வார் .ஒரு சில நோயாளிகள் ஒருசில மருத்துவரை சந்திக்கும் போது குணமடைந்து நன்றாக வாழ்வார்கள். அப்பொழுது இதுபோல் பலர் அவரிடம் செல்லும் பொழுது மருத்துவர் கைராசி மருத்துவர் என பெயர் பெறுவார். ஆனால் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவ தொழில் செய்யும் பொழுது அவர்களுக்கு எதிர்பாராவிதமாக நோய் தாக்கி பாதிக்கப்படுவார்கள். இந்த இடத்தில் ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு நோய் வரலாமா? என்றும், ஆசிரியர் பிள்ளை படிப்பறிவு இல்லாதவன் என்பதுபோல, போலீஸ்காரர் பிள்ளை சமூகவிரோத கடை நடத்துவது   போல, படிக்காதவர் பிள்ளை மேதை என்பது போல, வறுமைக்கு கீழ் இருக்கும் மனிதனின்ர மகன் கோடீஸ்வரன் ஆவது போல, மாற்றங்களை கொடுக்கும் . எது எப்படி இருந்தாலும் ஒரு மருத்துவமனை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் . மருத்துவர் அமரக்கூடிய இடம் என்பது தெற்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்தில் இருப்பது நலம். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய இடம் என்பது தாராளமாக தென்மேற்கு பகுதிக்கு கொண்டு செல்லலாம். ஏனென்றால் மொத்த மருத்துவமனையின் எடை உள்ள பகுதிகளை தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த பகுதியில் வைப்பது நலம். அந்த மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் தென்மேற்கு பகுதியில் அமர வேண்டிய அவசியம் கிடையாது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *