திருஊரகப் பெருமாள் ஆலயம் Thiru Uraga Perumal Temple

Thiru Uraga Perumal Temple,

இன்றைய #ஆலய_தரிசனம்;

அருள்மிகு
ஶ்ரீ திருவிருந்தவல்லி தாயார் சமேத
ஶ்ரீ திருஊரகப்பெருமாள் திருக்கோயில்,
குன்றத்தூர் நகரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

(சுமார் 1000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான
இந்த வைணவ திருத்தலத்தில்
நம் வேங்கடவன்,
திருப்பதி (திருமலை) வெங்கடாஜலபதியைப்போன்றே அருட்காட்சியளிப்பது தலச்சிறப்பாகும்.

தாயார் ஶ்ரீதிருவிருந்தவல்லி (என்றால், செல்வம் மிகுந்த எனப்பொருள்படும்)
கிழக்கு நோக்கிய
தனிசன்னதியில் வீற்றிருக்கிறார்கள்.

சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்

இத்தலத்தின்,
ஶ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் பெருமாள் அழகு.
இந்த ஆலயத்தில், வடிக்கப்பட்டிருக்கும்
சிற்பங்கள் அனைத்தும் அருமை.

காஞ்சிபுரம் நகரில் இருப்பது,
திவ்ய தேசமான திருஊரகம் ஶ்ரீஉலகளந்தபெருமாள் ஆலயம், இந்த குன்றத்தூர் நகரில் உள்ளது, ஶ்ரீதிருஊரகப்பெருமாள் திருக்கோயில்

ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
குலோத்துங்க சோழர் தன் தோஷம் நீங்கப்பெற, காஞ்சிபுரத்தில் உள்ள
திவ்யதேச தலமான திருஊரகம் உலகளந்த பெருமாளை தரிசித்து
அத்தோஷம் நீங்கப்பெற்றதனால்,
பெருமாளுக்கு நன்றிசெலுத்தும்
விதமாக, ஒரு கோயில் கட்ட எண்ணியபோது, அவரது கனவில் தோன்றிய இறைவன், திருப்பதி வெங்கடாஜலபதியாக திருக்காட்சி தந்து,  (குன்றத்தூரில்) அவ்வாறே சிலை வடிக்க உணர்த்தியதால், மன்னரும் இத்தலத்தில்
திருமலை திருவேங்கடவனைப்போல விக்ரகம்
வடித்து, காஞ்சி, திருஊரகம் இறைவனின் நினைவாக திருஊரகப்பெருமாள் எனும் திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்து
ஆலயம் கட்டி வழிபட்டதாக தலவரலாறு கூறகிறது.Thiru Uraga Perumal Temple,

இத்தலத்தின் மேற்கு திசையில் காஞ்சிபுரம் இருக்கிறது. எனவே மன்னர் இக்கோயிலை கட்டியபோது, காஞ்சிபுரம் திருஊரகத்தை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கி (இத்தலத்தினை) கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் மட்டுமே நடைபெறும்
வைகுண்ட ஏகாதசிவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டாடும் பெரும்விழாவாகும்.

திருமலையில் நடைபெறும்
அத்தனை முக்கியமான விழாக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடும்
இத்தலத்தில்,
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையில் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி சேவை சாதிப்பதைக்காண, கண்கொள்ளா பரவச திருக்காட்சியாகும்.

கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்ததிற்குரிய நாட்களில் இங்கு வேண்டிக்கொள்வது விசேஷமாம்).

ஓம் நமோ நாராயணாய நமக:

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.

நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

#வாஸ்து_விழிப்புணர்வு  #திருச்சி #இறைவனுக்கே #வாஸ்து #chennaivastu #vastutips #வாஸ்து   #staircase_vastu #வாஸ்து_விழிப்புணர்வு #vastushastratips #vasturemedies #vastuconsultant #vastushastram  #coimbatore_vastu   #chennai_vasthu
#Tirupur_vastu
சென்னை_வாஸ்து
Chennai vastu
#vastuconsultantchennai,
#chennaiAndhra_people_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
#chennaivastuconsultant
vastushastram ,
#vastuchennai,
#Chennaivastutips ,
#erode_vastu,
#tiruppur_vastu

https://g.co/kgs/UsRy1a
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995 (whatsapp)
www.chennaivastu.com

Thiru Uraga Perumal Temple,

Loading