Chennai vastu calendar

Chennai vastu calendar

13.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 13.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.26ந் தேதி .  வியாழக்கிழமை விடியற்காலை 3.10 வரை சதுர்த்தி பிறகு  தே.பஞ்சமி திதி. மாலை  6.26 வரை கிருத்திகை நட்சத்திரம். பிறகு ரோகிணி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு தனியநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து சார்ந்த விஷயத்தில் தூண்களை நிறுத்துவது என்பது மிக மிக முக்கியம். அப்படி நிறுத்துகின்ற வகையில் தூண்கள் எண்ணிக்கை என்பது வேண்டுமா? என்கிற கேள்வியில், இரட்டை படை எண்ணிக்கை வேண்டும் என்று சொல்வதில், ஒற்றைப்படையாக இருக்கிறது, 9த் தூண்கள் வருகிறது, 11தூண்கள், வருகிறது 13 தூண்கள் வருகிறது, 15 தூண்கள் வருகிறது என்று கேள்வி கேட்பார்கள். இந்த இடத்தில் எத்தனை தூண்கள் வேண்டுமானால் வரட்டும். வாஸ்துவிற்கும் தூணுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் சம்பந்தம் இருக்கிறது. எங்கு இருக்கிறது என்று சொன்னால் எண்ணிக்கையில் கிடையாது. எண்ணிக்கை  விஷயம் வாஸ்து கிடையாது. அது முழுக்க முழுக்க இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட விஷயம். ஆக  நிறுத்துவதற்கு அந்த காலத்தில் உத்திரங்களைத்தான் பயன்படுத்தி வந்தனர் அதற்கு இரட்டை எண்ணிக்கை தூண்கள் வேண்டும்.  டெக்னாலஜி இல்லாத காலத்தில்  ஒரு உத்திரத்தை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கு இரண்டு தூண்கள் வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கிற நவீன காலத்தில் தூண்கள் வைத்து நிறுத்துவது கிடையாது. இடத்துக்குத் தகுந்தார் போல தூண்கள் அமைத்துக் கொண்டும், தூண்களை இல்லாமல் கொண்டும் நிறுத்துகின்றோம். ஆக இந்த இடத்தில் வாஸ்துவிற்கும் தூணுக்கும் சம்பந்தம் கிடையாது.Vastu Dates in 2022 | வாஸ்து நாள் | Dailycalendar

ஆனால் இந்த தூண்கள் எங்கு எப்படி இருக்க வேண்டும் என்கிற விஷயத்தில் வாஸ்து இருக்கிறது. ஆக வாஸ்துவின்படி ஒரு கட்டிடத்தில் மையப் பாகத்தில், ஏன் பிரம்மஸ்தானத்தில் தூண்கள் வரக்கூடாது . இந்த விதி மிக மிக முக்கியம். அதற்கு அடுத்த நிலையில் வடக்கு சுவரிலும், கிழக்கு சுவரிலும் பெரிய தூண்களும், மேற்கு சுவரிலும் தெற்கு சுவரிலும் சிறிய துண்களும் வரக்கூடாது. அதே சமயம் அது சுவரோடு சுவராக இருந்தால் அது தூண்களாகவே சேராது. தனிப்பட்ட முறையில் தூண்கள் நிறுத்தும் பொழுது தூண்களின் எண்ணிக்கை வகையில் வடக்கில் தூண்கள் இருந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கில் தூண்கள் வரும்பொழுது வீட்டில் அமைப்பில் ஒரு சில இடங்களில் தவறுகளை கொடுத்து விடும். அப்படி கணக்கில் தூண்கள் வரவேண்டும் என்று முடிவு செய்தால், அதனை வேறு வகையில் ஒரு அமைப்பாக மாற்ற வேண்டும். அப்படியே மாற்றினாலும் கூட வாஸ்து ரீதியாக வடமேற்கு மூடப்பட்டதாகவும், தென்கிழக்கு திறந்து இருப்பதாகவும் வாஸ்துவின் விதிப்படி வந்து விடும். ஆகவே தூண்கள் அமைப்பதில் வாஸ்துவின் விதிகளின்படி சர்வ ஜாக்கிரதை கொண்டு அமைக்க வேண்டும். முடியவில்லை என்றால் தூண்கள் சார்ந்த விஷயத்தில் நல்ல ஒரு வாஸ்து நிபுணரை  ஆலோசனைக்கு வைத்துக் கொள்வது நல்லது.Vastu Dates in 2022 | வாஸ்து நாள் | Dailycalendar
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- புகழ்
கடகம்- தூக்கம்
சிம்மம்- விருத்தி
கன்னி- சினம்
துலாம் – ஆதரவு
விருச்சிகம்- நன்மை
தனசு- செலவு
மகரம்- சிந்தனை
கும்பம்-அச்சம்
மீனம் –    வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Vastu Dates in 2022 | வாஸ்து நாள் | Dailycalendar

Loading