Calendars chennai vastu

Calendars chennai vastu ,

12.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 12.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.25ந் தேதி .  புதன் விடியற்காலை 2.01 வரை திருதியை பிறகு  தே.சதுர்த்தி திதி. மாலை  4.56 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 12-1.30pm,
எமகண்டம்.7.30-9am,
குளிகை 10.30-12noon,

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

அக்னி மூலையில்வாஸ்து இல்லாமல்  உயர்வான ஒரு கட்டிடம் எல்லா கெட்ட பழக்கங்களையும் சேர்க்கும் வாசலாக இருக்கும். எச்சரிக்கை அவசியம். இடுப்புகள் கூட உடைந்து விடும் அந்த அளவுக்கு எதிர்மறை பலங்களை கொடுக்கும் இடமாக இருக்கும். பெரிய தோட்டத்தில் தென்மேற்கு மூலையில் கட்டிடம் கட்டும்பொழுது அந்த கட்டிட உரிமையாளரின் புகழ் ஓங்கி ஒலிக்கும். பெரிய தோட்டத்தில் வாயு மூலை கட்டிடம் கட்டுவது வரவு செலவு சார்ந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு ஒரு காலத்தில் தோட்டமே உங்கள் கையில் இருக்காது. ஈசானியத்தில் பெரிய தோட்டத்தில் ஒரு கட்டிடம் உங்களை அந்த இடத்தில் இருந்து ஒரு காலத்தில் விரட்டி அடித்து விடும். இது ஒரு வகை வாஸ்து பலன் என்று எடுத்து கொள்ள வேண்டும்.

அதேபோல ஒரு வீட்டில் தோட்டங்கள் எந்த இடத்தில் வைக்கலாம் என்று பார்க்கும் பொழுது தென்மேற்கு வீட்டைக் கட்டி வடகிழக்கில், வடக்கில் கிழக்கில் பெரிய தோட்டங்களை அமைக்கும் போது வாஸ்து ரீதியாக மிகப்பெரிய பலனை கொடுக்கும். கட்டிடம் ஒரு மனைக்கு வடமேற்கு காலியிடம் அதிகமாக இருப்பது, வடகிழக்கில் இல்லாமல் இருப்பது தென்கிழக்கு இல்லாமல் இருப்பது வாஸ்து ரீதியாக தவறு . தென்கிழக்கில் ஒரு கட்டிடத்தை கட்டி தென்மேற்கிக்கில் காலியிடமாகவும், வடகிழக்கில் காலியிடமாக வைக்கிற மனை, ஒரு காலத்தில் உங்களை அந்த இடத்தில் இருந்து நிற்கதியாக்கி விரட்டி விடும். ஆக இது தெரிந்து கொண்டு தோட்டங்களில் கட்டிடங்கள், கட்டிடங்களில் தோட்டங்கள் என்கிற விஷயத்தில் வாஸ்துரீதியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஏமாற்றம்
ரிஷபம்- அசதி
மிதுனம்- செலவு
கடகம்- நற்சொல்
சிம்மம்- தூக்கம்
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – தடங்கல்
விருச்சிகம்- பாராட்டு
தனசு- நலம்
மகரம்- சாதனை
கும்பம்- லாபம்
மீனம் –    வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_12

இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)Calendars chennai vastu

ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)

கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)

சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.Calendars chennai vastu

Calendars chennai vastu

Loading