கொங்கு வேளாளர் அருமை சீர் எழுதிங்கள்

கொங்கு வேளாளர் அருமை சீர் எழுதிங்கள்

அருமைக்காரர்

எழுதிங்கள் செய்யும் சீர் முறைமைகள்.

  1. முகூர்த்த நாள் குறித்தல்
  2. அருமை பெரியவருக்கு வெற்றி
    பாக்கு வைத்து அழைத்தல்
  3. புடைச்சட்டிகார் மற்றும்
    குழவிக்காரிக்கு அழைப்பு.
  4. மண்டபம் பதிவு செய்தல் (வீடு
    வசதியாக இருந்தால் வீட்டில்
    வைக்கலாம்)
  5. சொந்தங்களுக்கு அழைப்பு.
  6. கட்டுகன்னிகளுக்கு அழைப்பு.
  7. சீர் செய்ய தேவையான பொருட்கள்
    வாங்குதல்.
  8. பட்டிபடல், மர உரல், நுகம்,
    கொழுவு,குழவி, பானை, புடச்சட்டி,
    பிரிக்கெடி, கோடாரி, கருப்பு அச்சு
    வெல்லம், தினை மாவு, தண்ணீர்
    வாக்க பானை சொப்பு,மிடாசோறு
    தோண்ட பொங்கல் பானை முதலான
    வற்றையும் செகரறித்தல்.
  9. பட்டி அமைத்தல்
  10. சீர்காரர் மற்றும் கட்டுக்கண்ணி
    களுக்கு வெற்றி பாக்கு கொடுத்தல்
  11. பட்டினி சாப்பாடு போடுதல்.
  12. முகூர்த்த கால் போடுதல்
  13. சீர் தண்ணீர் கொண்டு வருதல்.
  14. பானை புடைச்சட்டிக்கு பூசை செய்து
    கங்கனம் கட்டுதல்
  15. தினை மாவுக்கு பூசை செய்து
    மாவுக்கு தண்ணீர் தெளித்தல்
  16. எழுதிங்கள் செய்துகெள்ளும்
    பெண்,புடைச்சட்டிக்காரர், மற்றும்
    குழவிக்காரி முறையே வெற்றி
    பாக்கு மாற்றி ஆசி பெறுதல்.
  17. தினை மாவு பிசைந்து மாவின்
    நடுவில் கருப்பு அச்சு வெல்லம்
    வைத்தல்.
  18. பானையில் பாதி அளவு பருத்தி
    குச்சி அல்லது துவரை குச்சி வைத்து
    தண்ணீரை தேவையான அளவு
    ஊற்ற வேண்டும். அதன் மேல் அரசு
    இலை வைத்து அதன் மேல் தினை
    மாவை வைத்து புடைச்சட்டி
    கொண்டு பானையை மூட
    வேண்டும்.
  19. பொறந்தவன் புடைச்சட்டி எடுத்தல்
  20. கோதை மாவினை வேக வைத்தல்
  21. ஆக்கை போட்டு தண்ணீர் வார்த்தல்
  22. இலந்தை முள் குடை பிடித்தல்
  23. குழவி எடுத்தல்
    24.பொறந்தவன் புடைச்சட்டி பிடித்து
    ஒருசந்தி சாப்பாடு (விரதம் விடுதல்)
  24. கோதை மாவு வெந்தவுடன்
    சிவப்பிட்டு மங்கை நீராட்டுதல்
  25. கோதை மாவுக்கு பூசை செய்து
    கோதை மாவு பிளத்தல்
  26. அரசு இலையில் வெல்லம் வைத்து
    சொந்தங்களுக்கு காண்பித்து
    ஆசீர்வாதம் பெறுதல்.
  27. மிடாசோறு தோண்டுதல்
  28. சமாளி (செருப்பு) தொடுதல்
  29. அரசு வேம்பு விநாயகருக்கு தண்ணீர்
    விடுதல்.
  30. சீர் கொடுத்தல்.
  31. பொறந்தவன் வீடு சென்று வெல்லம்
    சீவிப்போட்டு பாணக்கம் அருந்துதல் இத்துடன் சீர் இனிதே நிறைவு.
  32. கொங்கு வேளாளர் அருமை சீர் எழுதிங்கள்,கொங்கு வேளாளர் ,எழுதிங்கள்சீர்,கொங்கு வேளாளர் சீர்கள்,கொங்கு வேளாளர் திருமண சீர்கள்,
  33. எழுதிங்கள் சீர் என்றால் ,
  34. இணைச்சீர்,

Loading