மதில் சுவர் என்று சொன்னாலே ஒரு இல்லத்திற்கு அரணாக இருப்பதில் மற்றும் அழகாக இருப்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு இல்லத்தை அழகு படுத்துகிற விஷயத்திற்கு கூட சுற்றுச்சூவர் முதன்மையாக இருக்கின்றது. அந்தவகையில் மதில்சுவர் தான் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பையும், மிகப்பெரிய தோற்றப்பொழிவையும் கொடுக்கிற நிகழ்வாக இருக்கின்றன. ஒரு வீடு , தெரு அல்லது சாலையின் ஓரம் இருக்குமானால், அந்த சாலையில் இருந்து அந்த வீட்டை நேரடியாக பாதுகாக்கின்ற செயலை செய்வது ஒரு வீட்டின் மதில் சுவர்கள் என்று சொல்லக்கூடிய சுற்றுச்சுவர்களே. அந்த வகையில் ஒரு மதில் சுவர்களை மிகக் குறைந்த உயரம் கொண்டதாக அல்லது, மிகப் பெரிய உயரம் கொண்டதாக கட்டுவது மிகமிகத் தவறு. ஒரு காற்றோட்டம் தடைபடாத அளவிற்கு ஒரு மதில் சுவர் என்பது கட்டவேண்டும். மதில் சுவர்களில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலாக இரும்பு கிரில்கள் பொருத்தலாம். பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆனால் எந்த திசையில் கிரில் அமைப்பது, எந்த திசையில் சுற்றுச்சுவரை மட்டும் அதிகப்படுத்துவது என்கிற விளக்கங்களை தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். எப்பொழுதுமே மதில்சுவர் என்று சொன்னாலே, தந்தை சுவர் என்றும், வீட்டுச் சுவர் என்று சொன்னாலே தாய் சுவர் என்றும் பார்க்கப்படுகிறது. எந்த இடத்திலும் தாய் சுவரும் தந்தை சுவரும் எக்காரணம் கொண்டும் இணையக் கூடாது. ஆகவே மதில் சுவர்களையும் இல்லத்திற்கும் இடையில் இருக்கின்ற தூரமும் மிக மிக முக்கியம். மதில் சுவரின் முன் பகுதிகள் அதாவது காம்பவுண்ட் கேட் நுழையக் கூடிய இடத்தில் அலங்காரம் செய்து கொள்ளலாம். கண்ணை கவரக்கூடிய டைல்ஸ் அமைப்பு மற்றும், முன் முகப்பு அலங்காரங்கள் எலிவேஷன் டிசைன்களை தாராளமாக நீங்கள் செய்து கொள்ளலாம். சுவரை ஒட்டி சிறிது உயரத்தில் தடுப்பு சுவர் எழுப்பி அதனை மணலைப் பரப்பி அலங்காரச் செடிகளை மட்டும் அலங்கரிக்கலாம். ஆனால் அது எந்த திசையில் நீங்கள் செய்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியம்.. இந்த அலங்கார வேலைகளை ஒரு வீட்டின் மதில் சுவரில் வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் தவிர்த்துக்கொள்வது நல்லது. அல்லது வடக்கு பகுதியின் பாதிக்கும் மேற்பரப்பிலும் கிழக்குப் பகுதியின் பாதிக்கும் தெற்குப் புறத்திலும் தாராளமாக மேற்கூறிய அலங்கார வகைகளை தாராளமாக செய்து கொள்ளலாம்.

எப்பொழுதுமே ஒரு சுற்றுச் சுவர் என்பது நான்கு பக்கமும் நான்குவித அகலத்திலும் நான்குவித உயரத்திலும் இருப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் தெற்கு சுவர் எப்பொழுதுமே மிக உயரமாகவும் மிகவும் அகலமாகவும் ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அதற்குப் பிறகு மேற்கு சுவரில் அகலத்தையும், மேற்கு சுவரின் உயரத்தையும், தெற்கு சுவரை விட குறைத்து வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு கிழக்கு சுவரின் உயரம் என்பதும் அகலம் என்பதும் மேற்கு சுவரை விட குறைவாகவும் கணத்தில் அகலம் குறைவாகவும் இருப்பது நல்லது. அதற்கு பிறகு வடக்குச்சுவர் உயரம் என்பது கிழக்கு விட உயரம் குறைவாகவும், அகலத்தில் குறைவாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுச் சுவருக்கும் இல்லத்திற்கும் இடையிலான தூரம் என்பது ஒவ்வொரு திசைக்கும் மாறுபாடு இருக்கும். அப்பொழுதுதான் வாஸ்து விதிகள் என்கிற விஷயம் அந்த இல்லத்திற்கு வரும். அந்த வகையில் தெற்கு காம்பவுண்ட் சுவர் முதல் இல்லத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய இடைவெளி என்பது ஒரு மூன்று அடிகள் விடுகிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால், மேற்குப் புறத்தின் இல்லத்திற்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட பகுதி என்பது குறைந்தபட்சம் இரண்டு அடிகளுக்கு உள்ளாக இருப்பது நல்லது. அதற்குப் பிறகு கிழக்கில் நீங்கள் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் இடம் வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அதிக அளவில் கிழக்கு புறங்களில் வைத்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறு அடி விடும் பட்சத்தில்
8 அடி வடக்கு உட்பகுதி வைத்து கொள்ளலாம். இல்லையென்று சொன்னாலும் கூட அதிகபட்சமாக 16 அடிகளை நீங்கள் உட்பகுதியில் விடலாம். அதற்குப் பிறகு வடக்கில் எப்பொழுதும் அதிக இடங்களில் இருப்பதை போல நீங்கள் சுற்றுச்சுற்றுச்சுவக்கும் இல்லத்திற்குமான இடைப்பட்ட பகுதியை நீங்கள் கொண்டு வர வேண்டும் . அந்த வகையில் கிழக்கில் நீங்கள் ஆறடி விடுகிறீர்கள் என்று சொன்னால் அதிகபட்சம் வடக்கில் பதினொன்றாக வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் கிழக்கில் 11 விடுகிறீர்கள் என்று சொன்னால் அதிகபட்சம் 16 லிருந்து 20அடிகள் வடக்குப் புறத்தில் வைத்துக் கொள்ளலாம். கிழக்கில் பதினாறு அடிகள் விடுகிறீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக வடக்கில் 20 அடிக்கு மேலாக இருப்பது மிக மிக நல்லது. எக்காரணம் கொண்டும் காம்பவுண்ட் உயரம், வடக்கும் கிழக்கும் வீட்டின் ஜன்னல் உயரத்தை மறைப்பது போல எக்காரணம் கொண்டும் வைக்க வேண்டாம். இதே விஷயத்தை தெற்குப் பகுதிகளில் வேண்டுமானால் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். தெற்கில் ஜன்னல் உயரத்திற்கு, ஏன் வீட்டின் உயரத்திற்கும் கூட, பத்தடி இல்லம் உயரத்தில் இருப்பது என்று சொன்னால், அந்த 10 அடி உயரத்திற்கு கூட சுற்றுச்சுவர் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு பொறுத்தளவில் அதிலிருந்து ஒரு 16 அடி இருந்தால் கிழக்கு 26 அடி ஆக வைத்துக்கொள்ளுங்கள். இதனைத் தவிர வேறு எந்த பகுதியிலும் அதிகப்படுத்துவது என்பது தவறாகும்.
1,884 total views, 1 views today