கழிவறைகள்& குளியலறை வாஸ்து vastu bathroom

vastu bathroom
vastu bathroom

ஒரு வீடு என்று சொன்னாலே அந்தக் காலத்தில் கழிவறைகள், குளியலறைகள் என்கிற விஷயம் இருந்ததா? என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது . அதனை வெளிப்புறப் பகுதிகளில் தான் அமைத்திருந்தார்கள். எங்களுடைய கொங்கு நாட்டுப் பகுதிகளில் பொடக்காளி என்று சொல்வார்கள். அதே போல சோழநாடு பகுதிகளில் புழக்கடை என்றும் கொல்லைபுறம்  என்றும் அழைப்பார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கண்டிப்பாக அது சாத்தியம் கிடையாது. ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது சமையலறை என்று சொன்னாலும், அதே முக்கியத்துவம் குளியலறைக்கும்  கொடுப்பது சாலச் சிறந்தது. ஒரு சமையலறை என்பது காற்றோட்டமாக இருக்கவேண்டும் . உணவுப் பொருட்களின் சமையல் நேடி மற்றும்   வாசங்கள் ஒரு சிலருக்குப் பிடிக்கும். அது பிடிக்காமல் இருக்கும். அதனை மாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னால்  கண்டிப்பாக காற்றோட்டம் என்பது வேண்டும். மிக முக்கியமாக ஒரு நோய்களிலிருந்து நம்மை தாக்கக் கூடிய, காக்கக் கூடிய ஒரு ஆயுதமாக ஒரு இல்லத்தின் குளியலறையும், கழிவறையும்  இருக்கின்றன. அந்த வகையில் வாஸ்து விதிகளை உட்புகுத்தி குளியல் அறை அமைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் ஒரு குளியலறை என்பது ஒரு இடத்தில் வடமேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குளியலறை சூரிய வெளிச்சம் மற்றும், காற்று வரும் வகையில் வென்டிலேட்டர் அமைப்பு, வாஷ்பேசின், சவக்காரம் என்கிற சோப்பு வைக்கக் கூடிய அந்த ஸ்லாப் போன்ற விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். பெரிய குளியலறை ஆக இருந்தால் பாத்டப் விஷயத்தை நிறைய மக்கள் பொருத்துவார்கள். பாத் டப் இதனை என்னைப் பொறுத்த அளவில் எதிர்மறை செயலாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதன் குளிப்பதற்கு குறைந்தபட்சம் 20 லிட்டர்கள் தேவைப்படும்.அதுவும் நன்றாக சுத்தம் செய்து கொள்ள, அப்படி இருக்கின்ற பட்சத்தில் தண்ணீர் தொட்டியில் இறங்கி குளிக்கும் பொழுது ஒரு 150 லிட்டர் பிடிக்கக் கூடிய அந்த தண்ணீர் முழுவதுமாக ஒரு மனிதன் குளித்த பிறகு வெளியேற்றப்பட வேண்டும். இந்த விஷயம் தண்ணீர் சார்ந்த நிகழ்வுகளில் தவறாக பார்க்கப்படுகிறது. அதேபோல குளியலறையின் சுவர்களில் டைல்ஸ் என்கிற விஷயம் கட்டாயம் வேண்டும். அதனை ஒரு ஆறடி உயரத்திற்கு  ஒட்டிக் கொள்ளலாம். அல்லது வாசல் இருக்கும் உயரமான 7 அடி வரையிலும் தாராளமாக ஒட்டிக்கொள்ளலாம். டைல்ஸ் பொறுத்த அளவில் இலம் வெள்ளை நிறமாக இருப்பது சரியாக இருக்கும். ஏனெனில் சவர்க்காரம் நாளடைவில் அதே கலரில் அதே நிறத்தில் இருக்கும். அப்பொழுது தரையின் நிறம் என்பது பெரிய அளவில் நம்மை ஒரு மிகவும் சுத்தப்படுத்துவது எளிதாக இருக்கும்.  குளியலறையின் தரையில் ஒட்டுவதற்கு தனியாககிரிப் டைல்ஸ் ஒட்டப்பட வேண்டும கிரிப் என்கிற சொரசொரப்பு தன்மை இருக்க வேண்டும். ஏனெனில் நடந்தால் தண்ணீர் இருந்தாலும், நடக்கும்போது ஒரு வழுக்காமல் இருக்க கூடிய நிகழ்வு என்பது முக்கியம்.

குளியலறை அளவுகள் என்பது என்னைப் பொறுத்த அளவில் மிகமிகச் சிறிய அளவாக இருப்பது சாலச் சிறந்தது. ஏனென்று சொன்னால் அது ஒரு எதிர்மறை நிகழ்வுகளை சரிசெய்யக்கூடிய விட அதிகமாக எதிர்மறை சக்தி இருக்கக்கூடிய இடம் ஒரு அல்லது ஒரு இல்லத்தின் குளியலறையும் கழிவறையும் அப்படிப்பட்ட அறைகள் மிகக் குறைந்த அளவில் இருப்பது நல்லது. அந்த வகையில் மிகக் குறைந்த அளவான 4×6 அளவிலும், ஆறுக்கு ஆறு அளவிலும், ஆறுக்கு எட்டடி அளவிலும் இருக்கலாம். அதிகபட்சமாக என்னை பொறுத்த அளவில் ஒரு எட்டடி அளவிலும் பத்தடி எல்லோரும் அதிகபட்ச பெரிய அளவாக குளியல் அறை இருப்பது சிறப்பு. அதனை விட பெரியதாக அமைப்பது என்பது என்னைப் பொறுத்த அளவில் எதிர்மறை விளைவுகளை தான் கொடுக்கும் . குளியலறை என்பது வீட்டின் உள்புற பகுதியாக இருந்தாலும் சரி வீட்டின் வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி வடமேற்கு பகுதியில் தான் வரவேண்டும். மொத்த இல்லத்திற்கு முதன்மை தரமான குளியலறை கழிவறை என்பது என்னைப் பொறுத்த அளவில் தென்மேற்கு படுக்கையறைக்கு தவிர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் நம்முடைய மக்கள் கேட்பார்களா என்றால் கொஞ்சம் கடினமான பணியாக இருக்கிறது. தவிர்க்க முடியாவிட்டால் நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள் தவறு இல்லை. ஏனெனில் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதேபோல வடமேற்கில் கழிவறை இருக்கிறது என்று ஒரு கணக்கில் வைத்துக்கொண்டு வட மேற்கு மத்திய பாகம் வரையில், ஒரு கழிவறை இருந்து வடக்கு பாகத்தில் கழிவறையாக அது மாறிவிடக்கூடாது. அதனை சரியாக கையாளுவது சாலச்சிறந்தது. அதேபோல வெளிப்புற கழிவறைகள் என்றால், அந்த கழிவறைகள் இல்லத்தின் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். எக்காரணம் கொண்டும் இல்லத்தோடு ஒட்டியிருக்கிற  கழிவறையாக இருக்கக்கூடாது. இல்லத்திற்கும் இந்தக் கழிவறைக்கும்  இடையில் ஒரு இடைவெளி இருக்க  வேண்டும் . அதே போல வெளிப்புறப் தென்பகுதியில் கழிவறை நிறைய மக்கள் அமைப்பார்கள். அதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது . மேலும் கழிவறைகளை பொறுத்த அளவில் வீட்டுக்கும் சுற்றுச்சுவருக்கும் ஒரு பதினாறு அடி இருக்கிறது என்று சொன்னால், இல்லத்தில் இருந்து ஒரு மூன்று நான்கு அடிகள் தள்ளி பிறகு கழிவறை அமைக்க வேண்டும். வடமேற்குப் பகுதி மூடிய அமைப்பில் எக்காரணம் கொண்டும் கழிவறைகளை அமைக்கக்கூடாது. மீண்டும் ஒரு நல்ல கருத்தோடு சந்திப்போம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *