கடைகளுக்கு வாஸ்து | Vasthu for shops tamil

கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, கடைகளை பொருத்த அளவில் திசைகளை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு சில இடங்களில் மேற்கு பார்த்து இருக்கும் என்று நினைப்போம் . ஆனால் அது தென் மேற்கு பார்த்து இருக்கும். தெற்கு பார்த்து கடைகள் இருக்கும். ஆனா அது தென் மேற்கு பார்த்து இருப்பது போல் திசைகாட்டி காட்டிக்கொடுக்கும். இந்த மாதிரி இருக்கும் கடைகளை நாம் ஒரு சர்வ ஜாக்கிரதையாக வாடகை மற்றும் சொந்தமான கடையாக இருந்தாலும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். வடக்கு பார்த்த கடைகளுக்கோ, கிழக்கு பார்த்து கடைகளுக்கோ பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. அது திசைகள் திரும்பி இருந்தாலும் கூட, பெரிய அளவில் பாதிப்பு என்பது இருக்காது. ஆக கடைகளை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக முக்கியம். கடைகளில் எங்கு கல்லாப்பெட்டி இருக்க வேண்டும் ? எங்கு கதவுகள் திறந்து இருக்க வேண்டும்?  என்கிற ஒரு விஷயம் மிக மிக முக்கியம். அதனை  ஒரு கடையில் உட்புகுத்தித்தான் கடைகள் கட்ட வேண்டும். கிழக்கு பார்த்த கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, கிழக்கு பார்த்த கடைகள் கதவு என்பது வடகிழக்கில் வைத்திருக்க வேண்டும். அதன் தென்கிழக்கு பாகத்தில் வடக்கு பார்த்து அமர்ந்து பணம் வாங்குகிற மற்றும் வரவு-செலவு விஷயங்களை பார்க்க வேண்டும். பொருள்கள் அனைத்துமே தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த,மற்றும் வடமேற்கு சார்ந்த பகுதிகளில் அடிக்கி வைக்க வேண்டும். வடக்கு பார்த்த கடை வாஸ்து என்று பார்க்கும் பொழுது, பணம் வாங்குகிற நிகழ்வு என்பது வடமேற்கு பகுதியில், கிழக்கு பார்த்து அந்த கடையின் உரிமையாளர் அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும். வடக்கு பார்த்த கடைகளில் பொருட்களை அடுக்கி வைப்பது என்பதும், பொருள்களை வைப்பது என்பதும், மேற்கு சார்ந்து, தென்கிழக்கு சார்ந்து அடுக்கி வைப்பது நல்லது. கடையின் மத்திய பாகங்களில் ரேக் அமைப்பை ஏற்படுத்தி தெற்கு சார்ந்த பகுதிகளில் உயரமாக பொருட்களை வைத்துக் கொள்ளலாம். வடக்கின் முக்கிய பாகத்தில் தரையோடு தரையாக பொருட்களை வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. தெற்கு பார்த்த கடை வாஸ்து பார்க்கும் பொழுது, தெற்கு பார்த்த கடைகளில் கதவு என்பது தென்கிழக்கில் இருக்க வேண்டும். வரவு செலவு கவனிக்கிற அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கிழக்கு பார்த்துஅமர இருக்கவேண்டும். பொருள்கள் அனைத்துமே அவருக்கு பின்னாலும், அவருக்கு மேற்குப் பகுதியிலும், தெற்கு பகுதியிலும், செல்ப் அமைப்பில் அடுக்கி வைப்பது சாலச்சிறந்தது. மேற்கு பார்த்த கடைகளுக்கு வாஸ்து என்கிற விஷயத்தில், பணம் வாங்குகிற, பணம் வரவு செலவு பார்க்கிற இடமாக, வடமேற்கு பகுதியில் கதவு நுழைகிற பகுதியில் அமர்ந்து, வடக்கு பார்த்து வியாபாரம் செய்ய வேண்டும். அவரின் மேற்புறத்திலும், தெற்குப் புறத்திலும் அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்து வியாபாரத்திற்காக எடுத்துக்கொடுக்கும் நிகழ்வாக வைத்திருக்க வேண்டும் . அந்த வகையில் நான்கு திசை சார்ந்த கடைகள் என்பது இருக்க வேண்டும்.

ஒரு பொருளை வாங்க வருகிற மக்கள் ஒரு சில கடைகளை கண்டும் காணாதது போல செல்வார்கள். இதற்கு காரணம் அந்த கடைகளில் இருக்கும் வாஸ்து சார்ந்த விஷயங்கள் என கவனத்தில் கொள்ள வேண்டும்.  என்ன மாயம்! என்ன மந்திரம்!.. ஒரு சில  கடைகள் மட்டும் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. நமது கடையில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கவில்லையே என்று ஒருசிலர் எண்ணுவார்கள். இதற்கு காரணம் முழுக்க முழுக்க அந்த கடையின் அமைப்பு, மற்றும் வாஸ்து சார்ந்த  சாலை பார்வை என்றுதான் சொல்லுவேன்.  மேற்கு பார்த்த கடைகள் சாலைக்கு மேற்குபுறத்தில் மற்ற கடைக்கு முன்னால்  கொஞ்சம் முதன்மையாக வரும் பொழுது நன்றாக வாரம் நடக்கும். சாலைக்கு கிழக்கு புறத்தில் இருக்கிற கடைகளும் சாலைக்கு வடக்குப் தெற்கு கடைகளுக்கு  முன் நோக்கி வரும் பொழுது பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. இந்த விதிகளை தெரிந்து கொண்டு கடைகளை அமைக்கும் பொழுது நல்ல பலன்களைக் கொடுக்கிற கடைகளாக இருக்கும். எந்த திசை பார்த்த கடையாக இருந்தாலும், அந்த கடையின் வடகிழக்கு பகுதி என்பது, அதிக உயரமில்லாத, ஒரு பள்ளம் சார்ந்த நிகழ்வாக இருக்க வேண்டும். கடைகளில் மிக மிக முக்கியமான விஷயம், மேற்கு பார்த்த கடைகளுக்கும், தெற்கு பார்த்த கடைகளுக்கும் ஒரு பதினாறு அடிகள் திறப்பு இருக்கிறது என்று சொன்னால் அல்லது ஒரு இருபது அடி  இருக்கிறது என்று சொன்னால்,அல்லது ஒரு முப்பது அடி இருக்கிற கடைகளில், தெற்கு சார்ந்த மூன்றில் ஒரு பங்காக தென்மேற்கு பத்து அடிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். சட்டர் இருந்தால் கூட அந்த சட்டரை எப்பொழுதுமே மூடப்பட்ட அமைப்பாக மாற்றம் செய்து கடையின் விளம்பர பலகைகளை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது எப்பொழுதும் மூடப்பட்ட அமைப்பாக வைத்து பொருள்களின் டிஸ்பிளே அமைப்பை கூட தாராளமாக வைத்துக்கொள்ளலாம். உள்ளே நுழைவது என்பது மேற்கு பார்த்த கடைகளுக்கு வடக்குப் பகுதியிலும், தெற்கு பார்த்த கடைகளுக்கு கிழக்குப் பகுதியிலும், வடக்கு பார்த்த கடைகளுக்கு கடைக்கு முக்கால்வாசி கிழக்குப் பகுதியிலும் ,கிழக்கு பார்த்த கடைக்கு கடைக்கு முக்கால்வாசி பகுதி கிழக்குப் பகுதியிலும், உள்ளே நுழைவது போல அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *