தெற்கு பார்த்த வீடுகளில் வாஸ்து

தெற்கு பார்த்த வீடு வாஸ்து

தெற்கு பார்த்த வீடு வாஸ்து மற்றும் , தெற்கு பார்த்த வீடுகளுக்கான வரைபடம் என்பது வாஸ்துவின் ரீதியாக மிக மிக என்னால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெற்கு பார்த்த வீடு களை பொறுத்தளவில் மிகவும் சர்வ ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டும்.முழுக்க வாஸ்து விதிகளை கொடுத்து தெற்கு பார்த்து ஒரு கட்டடத்தை கட்டும் பொழுது அதி அற்புதமான கட்டிடமாக அக்கட்டிடம் இருக்கும். தெற்கு பார்த்த வீடுகளில் காலியிடம் எங்கெங்கு, எவ்வளவு? விட வேண்டும் என்கிற விஷயம் முதன்மை தரமாக என்னால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெற்கு எப்பொழுதும் குறைந்த இடமாகவும், அதனைவிட மேற்கும் அதிகமாகவும், கிழக்கும் வடக்கும் அதிக இடங்களாக இருக்கின்ற அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும். தெற்கில் ரோடு இருக்கின்ற பட்சத்தில், வடக்கில் எவ்வளவு அதிகமான இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு சிறப்பு என்று சொல்வேன்  அந்த வகையில் தெற்கு பார்த்த கட்டிடம் என்பது, தலைவாயில் என்பது தெற்குப் பகுதியில் வைப்பது சிறப்பா? உள்ளே நுழைந்து கிழக்கு பார்த்து வைப்பது சிறப்பா? என்றால் என்னைப் பொருத்தளவில் கிழக்கு பார்த்து வைப்பது தான் சரியானது என்பேன். எது எப்படி இருந்தாலும் தெற்கு பார்த்த வீடு களில் வாசல் வைக்கும் பொழுது, அதிகமான மக்கள் தெற்கு பார்த்து வைத்துக் கொடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி வைக்கும்போது சமையல் அறை என்பது வடமேற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் . ஆனாலும் ஒரு சிலர் தென்கிழக்கில் தான் சமையலறையும் வேண்டும் என்பார்கள். அப்பொழுது கிழமேல் நீளம் சாலை பார்த்த இடம் என்பது அதிகமாக இடம் இருந்தால் தான் முடியும். ஒரு 40 அடி இருக்கிறது என்கிற பட்சத்தில் அப்படி அமைப்பது என்பது கடினம். பெரிய அளவில் நிலம் என்பது அடிகள் இருக்கிறது என்று சொன்னால் தென் கிழக்கு வாசலும் வைத்து, தென்கிழக்கு சமையலறைக்கும் வைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் அப்படி அமைப்பது என்பது கடினமாக இருக்கும். தெற்கு பார்த்த வீடுகளை அமைக்கும் பொழுது நிறைய மக்கள் தெற்கு பகுதியில் சாலையை பார்ப்பதுபோல பால்கனி வேண்டும் என்பார்கள். ஆனால் அப்படி பால்கனி அமைப்பை ஏற்படுத்தும் பொழுது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். தெற்கு பகுதியில் எந்த அளவுக்கு திறப்புகளை வைக்கிறோமோ, அதே அளவிற்கு வடக்குப் பகுதியிலும் திறப்புகள் என்கிற ஒரு விஷயம் வேண்டும். இல்லை என்றால் வாஸ்து குற்றமாக அந்த மனை மாறிவிடும். என்னை பொருத்த அளவில் தெற்கு பார்த்து இருக்கும் என நாம் நினைத்து இருப்போம். ஆனால் திசை திரும்பிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில், அந்த மனை தென் மேற்கு பார்த்தோ,அல்லது தென் கிழக்கு பார்த்தோ இருக்கின்ற பொழுது எக்காரணம் கொண்டும் தெற்கு வாசல் வைத்து அந்த இல்லத்தில் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது என்பது எனது கருத்து.

அந்த வகையில் டிகிரி சுத்தம் என்கிற வகையில், தெற்கு பார்த்த வீடுகளுக்கும், மேற்கு பார்த்த வீடுகளுக்கும் தவறாக இருந்தாலும் எனது பயணத்தில் அறிந்து கொண்ட மிகப்பெரிய உண்மை என்னவென்றால், தெற்கு பார்த்த வீடு கட்டி இருப்பார்கள்  ஆனால் திசை காட்டி 180 டிகிரிகள் காட்டாது, 210 டிகிரிகள் காட்டும். அப்பொழுது முழுக்க முழுக்க அது தென்மேற்கு பார்க்கிற வீடாக மாறி குற்றத்தை கொடுக்கும். தென்மேற்கு திறந்து வைக்கிற வீடாக மாறி விடும்.   ஆக திசைகாட்டி  வழியாக ஒரு இல்லத்தை அமைப்பது சரியான முடிவு. அப்படி இருக்கக் கூடிய வீடுகளில் நிச்சயமாக கிழக்கு பார்த்த வாயிலை கூட தவிர்த்துக் கொண்டு பின்பு வடக்கு வாசலை பொறுத்த வேண்டும் என்பது எனது கருத்து. எது எப்படி இருந்தாலும் தெற்கு பார்த்த வீடுகளில் , தெற்கில் அதிக கட்டடங்களையும், வடக்கில் அதிக காலி இடங்களையும் அமைக்குமாறு கட்டுவது நலம் பயக்கும்.

ஆக வாகனம் நிறுத்த அது யாராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியில் வட மேற்கு சார்ந்து கிழக்கு பார்த்து ஒரு தாழ்ந்த கூரை அமைப்பில் ஒரு தனிப்பட்ட முறையில் கொட்டகை அமைத்து கார்களை தென்கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்று நிறுத்தும் அமைப்பு தான் சரியானது. அதனை விடுத்து தெற்கு பார்த்த வீடுகளில் தெற்கு மூலை வீட்டிலிருந்து பள்ளமாக அமைத்து, கார் நிறுத்துவதற்கு  வீட்டில் ஒரு மூலையை துண்டித்து வீடு கட்டுவது வாஸ்துவின் ரீதியாக மிகமிகத் தவறு. தெற்கு பார்த்த மனையை பொருத்தளவில் தெற்கில் எவ்வளவு காலியிடம் விடுகிறோமோ அந்த அளவிற்கு பல மடங்காக காலி இடம் விட வேண்டும். இல்லை என்று சொன்னால், கிழக்கிற்கு இணையாகவும் அதற்குக் கொஞ்சம் அதிகமாகவோ,இடம் விடுதல் தெற்கு பார்த்த வீடுகளில் நன்மையை கொடுக்கும்.  தெற்கு பார்த்த வீடுகளை மிகவும் சர்வ ஜாக்கிரதையாக கட்டமைப்பு செய்ய வேண்டும். ராசி அமைப்பு பொருத்தளவில் தெற்கு பார்த்த வீடு ரிஷபராசி மக்களுக்கும், கன்னிராசி மக்களுக்கும், மகரராசி மக்களுக்கும் , அதே ரிஷப லக்னகாரர்களுக்கு, கன்னி லக்னகாரர்களுக்கு, மகர லக்னகாரர்களுக்கு நன்மையே செய்யும் இல்லமாக இருக்கும். குடும்ப தலைவரோ அல்லது குடும்ப தலைவியோ, குடும்பத்தில் இருக்கிற மற்ற ஆண் வாரிசுகளுக்கு மேற்கூறிய ரிஷப ராசி, கன்னி ராசி, மகர ராசி சார்ந்த மக்கள் இருந்தால் தாராளமாக தெற்கு பார்த்த வீடு களை வாங்கி வீடு கட்டிக் கொள்ளலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *