அருணாசல வாஸ்து

.
பல பிரச்சனைகள்…..
வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்….
தூங்கமுடியவில்லை…. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்"

என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்….

அப்போது மாலை நேரம்,
முனிவர் அவனிடம் “தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா” என்றார்.

சென்றவன் திரும்பி வந்து , “100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன” என்றான்.

“நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா..” என்றார்.

“சரி அய்யா” என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து “அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை..” என்றான்..

“என்ன ஆச்சு?” என்றார் முனிவர்.

“சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன..
சில ஒட்டகங்களை நான் முயற்சி செய்து படுக்க வைத்தேன்.
ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை.
சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..
அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்கு போகவே இல்லை” என்றான்.

முனிவர் சிரித்தபடியே…
“இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது..

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும், சிலவற்றை நாம் முயற்சி செய்து முடித்துவிடலாம்.
ஆனால், சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்.அருணாசல வாஸ்து

அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது…..

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே….

தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்” என்றார்..

மகேஷ்வரன் அருளோடு ….

#அருணாசல_வாஸ்து

ரமணர்

திருவடிகளே
சரணம் சரணம் ….

Negative_energy_விலக, #youtube, #பில்லிசூனியம், #ஏவல், #பயம், #பெண்கள், #விதிவிலக்கு, #துர்மரணம், #எந்திரம் ,#கொழுசுசத்தம்,#abnormalsound,#energy, #கண்திருஷ்டி, #பரிகாரம், #குரு, #ஷீரடிசாய்பாபா, #காஞ்சிமகாபெரியவர், #பாம்பன்சுவாமிகள், #பட்டினத்தார், #ரமணர், #ராகவேந்திரர், #நெருரார் #கணக்கன்பட்டி, #மூட்டைசுவாமிகள், #ஜீவசமாதி #பெரியாழ்வார்திருவரசு, #சம்போடை, #கங்கைகொண்டசோழபுரம், #சொர்க்கபள்ளம் #நாதமுனி_திருவரசு,

Loading