
தினசரி நாள்காட்டி 3.1.2023 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 19ந் தேதி . செவ்வாய் . இரவு 10.03 வரை த்வாதசி பிறகு திரயோதசி மாலை 4.11 வரை கிருத்திகை நட்சத்திரம். பிறகு ரோகிணி நட்சத்திரம் .
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று நாள் முழுவதும் யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
ஒரு வீடு கட்டுவதற்கு முன்பு முதலில் பார்க்கிற விஷயம் என்னை பொறுத்த அளவில் இடத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம் இருந்தாலும் சரி அல்லது இடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் சரி, முதலில் சரியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுகிற இடத்திற்கு வாஸ்துவின் பலம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் முதல் தரமான ஒரு மனையாக என்னால் பார்க்கப்படுகிறது சதுரமாக இருக்கிற மனை. அதற்குப் பிறகு தெற்கு வடக்கு நீளமாகவோ, கிழக்கு மேற்கு நீளமாகவோ இருக்கலாம். அதே சமயம் சமமான மனையும் நல்ல பலனை கொடுக்கும். வடக்கு சரிவு உள்ள பூமியும் நல்ல பலனை கொடுக்கும். கிழக்கு சரிவு உள்ள பூமியும் சரி செய்து கட்டும் போது அதுவும் வடக்கு என்ன பலனை கொடுக்குமோ அதே அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் . தெற்கு சரிவுகளையும், மேற்கு சரிவுகளையும் தவிர்ப்பது நலம்.
எந்த ஒரு இடத்தின் மூலையும் 90 டிகிரி இருக்க வேண்டும். திசை காட்டிக்கு வடக்கு இடம் என்பது 360 டிகிரிக்கு உள்ளாகவும் 30 டிகிரிக்கு உள்ளாகும் இருக்கலாம். கிழக்கு இடம் என்பது 90 டிகிரிக்கு உள்ளாகவும் 60 டிகிரிக்கு உள்ளாகவும் இருக்கலாம். தெற்கு இடம் என்பது 180 டிகிரியில் இருந்து 160 டிகிரிக்கு உள்ளாக இருக்கலாம். மேற்கு இடம் என்பது 270° இல் இருந்து 250 டிகிரிக்கு உள்ளாக இருக்கலாம். இந்த மனைகள் எல்லாமே அற்புதமான மனைகள். தெற்கு மேற்கு சாலைகள் இருந்தால் அதனை பொருத்தும் விதமாக வடக்கு ஒரு பூங்கா அமைப்பு சார்ந்த சாலையை ஏற்படுத்திய பிறகு கட்டும் பொழுது மேற்கு சாலை இருந்தால் கிழக்கு பகுதியில் பூங்கா அமைப்பை ஏற்படுத்தி ஒரு இல்லத்தை கட்டும் போது அற்புதமான பலனை கொடுக்கிற வீடாக அமையும். முதலில் இடம் தேர்ந்தெடுப்பது என்பது தான் வாஸ்து வகையில் சரியான முடிவு.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – பொறுமை
ரிஷபம்- சுகம்
மிதுனம்- தோல்வி
கடகம்- லாபம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- ஆதாயம்
துலாம் – தெளிவு
விருச்சிகம்- வெற்றி
தனசு- நலம்
மகரம்- தேர்ச்சி
கும்பம்- பெருமை
மீனம் – நன்மை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
103 total views, 1 views today