Vastu calendar chennai 19.12.2022 Northwest in human life

Northwest in human life

தினசரி நாள்காட்டி 19.12.2022 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 04 ந் தேதி . திங்கட்கிழமை விடியற்காலை 02.34  வரை ஏகாதசி பிறகு தே.த்வாதசி.  இன்று காலை 10.17 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம் .

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று காலை 10.34  வரை யோகம் குறைவு. பிறகு நாள்  முழுவதும் நல்ல யோகநாள்  .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today Northwest in human life

   மனித வாழ்க்கையில் எந்த நேரத்திலும், சந்தோசம், மகிழ்ச்சி என்கிற விஷயம் எந்த நேரத்திலும் கிடைக்குமா?.. என்று சொன்னால் கிடைக்காது என்று சொல்லலாம். அதே வகையில் ஒரு வம்பு வழக்கு பிரச்சனைகள், வாக்குவாதங்கள், விவாதங்கள், பகை சார்ந்த விஷயங்கள், ஒருவருக்கு ஏற்படுகிறது என்று சொன்னால், அது வாஸ்து குற்றமா?.. என்று பார்க்கும் பொழுது என்னைப்போல இருக்கிற வாஸ்து நிபுணர்களுக்கு அது தெரியும். இது நிச்சயமாக வாஸ்து சார்ந்த பிரச்சினை தான் என்று சொல்ல முடியும். அந்த வகையில் தீராத வழக்குகள், வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள், உறவினர்களின் பகை, குழந்தைகளின் ஆரோக்கியம் அற்ற நிலை, படிப்பு மந்தம், தீராத வியாதி, கணவன் மனைவி பிரிந்து போகுதல், குடிப்பழக்கம் இது போல  எதிர் மறை நிகழ்வுகள் ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது, இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது, இந்த எல்லா பிரச்சினைகளுமே, வம்பு வழக்கு என்கிற பிரச்சனைகளில் தான் முடியும் என்று சொல்வேன்.

இந்த இடத்தில் இல்லத்தில் வடமேற்கு திசை தான் ஒரு இல்லத்தில் அனைத்து இடங்களையும் நிர்வகிக்கிற, உறவுகளை பேணுகிற இடமாக இருக்கின்றது . அந்த இடத்தில் அதன் சர்க்யூட், அதன் தொடர்பு துண்டிக்கும் பொழுது, அதாவது அந்த இடத்தில் பள்ளமாவோ அல்லது, மேடாகவோ, கோணலாகவோ அல்லது, மாடியில் உயரமாகவோ அல்லது, மாடியில் பள்ளமாகவோ ,சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதோ, சுற்றுச்சுவர் இழுத்து இருக்கிற அமைப்புகள் இப்படி இருக்கும் பொழுது மேற்கூறிய பிரச்சினைகளை கொடுத்து விடும். மேற்கூறிய எந்த தொந்தரவும் ஒரு மனித வாழ்க்கையில் வரக்கூடாது என்று நினைத்தால், வடமேற்கு வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு வைத்துக் கொள்வது நலம்.
   ______________________

At any time in human life, happiness and joy can be found at any time? In the same way, if a fussy case causes problems, arguments, debates, enmity related things, if someone says, is it a Vastu crime?.. Vastu experts like me know it. It can be said that this is definitely a Vastu issue. In that way, unsolved cases, vain problems, quarrels, enmity between relatives, poor health of children, lack of study, chronic illness, separation of husband and wife, alcoholism, etc. I would say that all the problems can be solved in the problems of Vambu case. At this point, the northwest direction in the house is the place that governs all the places in a house and maintains relationships. When its circuit is disconnected at that place, i.e. there is a hole or a hill or an angle at that place or it is high in the floor or there is a hole in the floor or there is no surrounding wall, the systems that pull the surrounding wall will give the above problems. If one wishes to avoid any of the above disturbances in one’s life, it is good to follow the rules of Northwest Vastu.

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  குழப்பம்
ரிஷபம்- தனம்
மிதுனம்- புகழ்
கடகம்- அமைதி
சிம்மம்- பக்தி
கன்னி- திடம்
துலாம் – பயணம்
விருச்சிகம்- போட்டி
தனசு-  பொறுமை
மகரம்- தடங்கள்
கும்பம்- பாராட்டு
மீனம் –   சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Loading