Vastu boomi puja | Tamil calendar vastu 30.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

30.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 30.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
14ந் தேதி சனிக்கிழமை . இரவு 3.02  வரை துதியை திதி. பிறகு வ.திருதியை திதி.மதியம் 11.58 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:
9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று மதியம் 11.58 மேல் நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

 இறைவன் படைத்தபோது நிலத்தையும், ஆகாயத்தையும் ஒருசேர வியாபித்துக்கொண்டு வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு  குப்புறக் கிடந்தபடி தோன்றினார்.  

ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டு பெரும்பூதமென உறங்கிக்கொண்டிருந்த வாஸ்து பகவானைக் கண்டு நடுநடுங்கிப் போன பிரம்மனும்,  தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி, அப்படியே குப்புறக் கிடந்த நிலையிலேயே அழுத்திக்கொண்டார்கள். வாஸ்து பகவான் அப்படியே  உறங்கத் தொடங்கிவிடுவார். அப்போது யார், யார் எந்தெந்தப் பகுதியைப் பிடித்து அழுத்திக்கொண்டார்களோ, அவரவர் அந்தந்தப் பகுதிகளுக்கு  அதிபதியானார்கள். பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாள்கள்தாம் கண் விழிப்பார். அந்த  நாள்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.

 அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும்.  ஆனால் அந்த நேரங்களில் தவறான நேரங்ஙள் இருந்து விட கூடாது என்பது முக்கியம்.அப்படி நேரம் சரியாக இல்லை என்றால் வாஸ்து நாளில் பூமி பூஜை போடுவதை தவிர்க்க வேண்டும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-சினம்
ரிசபம்- நிறைவு
மிதுனம்- தன்மை
கடகம்- பரிசு
சிம்மம்- சுயநிலை
கன்னி- மறைவு
துலாம் – பூர்த்தி
விருச்சிகம்- வெகுமதி
தனசு – பூரிப்பு
மகரம்-  மந்தநிலை
கும்பம்- உயர்வு
மீனம் –  நல்ல பலன்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#july_30

பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)

முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)

பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)

ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai vastu calendar

Loading