Tamil vastu chennai calendar

21.10.2022
#தமிழ்_காலண்டர்.

Tamil vastu chennai

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 21.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.4ந் தேதி .  வெள்ளிக்கிழமை மாலை 5.24 மணி வரை ஏகாதசி திதி பிறகு  தே.த்வாதசி திதி. இன்று மதியம் 12.14 வரை மகம் நட்சத்திரம்.பிறகு பூரம் நட்சத்திரம்.Tamil vastu chennai

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  பகல் 12.14 வரை யோகம் குறைவு. பிறகு நாள்  முழுவதும் நல்ல யோகநாள்.    .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திரங்கள் வரிசையில் இன்று புனர்பூசம் நட்சத்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம். ஜோதிட நூல்களில் இதன் உருவம் குயவன் சக்கரம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு. இது ஒரு காலற்ற, உடல் அற்ற, தலையற்ற நட்சத்திரம். இது மிதுன ராசியிலும், கடக ராசியிலும் இணைந்த நட்சத்திரம் .இந்த நட்சத்திரத்தில் எந்தவித சுப காரியம் செய்வது கிடையாது . ஆனால் பரிகார நட்சத்திரமாக இருக்கின்றது. பொதுவாக வீட்டை குறிக்கும் நான்காம் பாவம், வீட்டின் வெளிப்புறத்தை குறிக்கும் மூன்றாம் பாவம், கால புருஷ ராசியில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் நட்சத்திரம் இருப்பதால், இந்த நட்சத்திரத்தின் உருவம் வீடு என்பதாலும், கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நட்சத்திரம். உடல் உறுப்பில் கையை குறிக்கும் மிதுன ராசியில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் அதிபதி குரு என்பதால் மகான்களிடம் ஆசி பெற சிறப்பு.Tamil vastu chennai

மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரம் வரும் நாளில் ரங்கநாத பெருமாளை வழிபட்டு வந்தால் கைராசிக்காரர் என்கிற பெயரை பெற முடியும். ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் பெருமாள் ஆலயம் சென்று வணங்கி வர ஞாபக சக்தி கூடும் . மருத்துவம் படித்துவிட்டு மருத்துவம் பார்க்க ராசி இல்லாத மருத்துவர்கள் என்று பெயர் இருக்கின்ற மருத்துவர்கள், தொடர்ந்து ஆறு மாத காலம் புனர்பூசம் நட்சத்திரம் வரும் நாளில் கும்பகோணம் சென்று கும்பேஸ்வரரை வணங்கி வர விரைவில் கைராசிக்காரர் மருத்துவர் என்று பெயர் பெறுவார்கள்.
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  பொறுமை
ரிஷபம்- புகழ்
மிதுனம்- அன்பு
கடகம்- மகிழ்ச்சி
சிம்மம்- அச்சம்
கன்னி- இன்பம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- விவேகம்
தனசு- அன்பு
மகரம்- ஊக்கம்
கும்பம்- நிச்சயம்
மீனம் –    எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_21

பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)

ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)

கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)

Loading