Chennai vastu tamil calendar

Tamil Vastu days 2022

20.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 20.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.3ந் தேதி .  வியாழக்கிழமை  மாலை 54.06 மணி வரை தசமி திதி பிறகு  தே.ஏகாதசி திதி. இன்று காலை 10.16 வரை ஆயில்யம் நட்சத்திரம்.பிறகு மகம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்.    .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

ஜோதிட நட்சத்திரங்கள் சார்ந்த வரிசையில் நேற்று வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தை பார்த்தோம். இன்று திருவாதிரை நட்சத்திரத்தை பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை . இதன் உருவம் பவளமணி ரசமணி என்று அழைக்கப்படுகின்றது .இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான் என்பதால் சிவ பூஜை செய்வதற்கு மிகச்சிறந்த நட்சத்திரம். குறிப்பாக காலபைரவர் வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பயிரவர் வழிபாட்டை தொடங்கினால் நிச்சயம் அருள் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தின் மிருகம் நாய். இந்த நட்சத்திரத்தில் அதிபதி ராகு . ஆக ராகு என்கின்ற காரணத்தால் மந்திரம் சபிப்பதற்கும் மந்திர பிரயோகம் செய்வதற்கும் உகந்த நட்சத்திரம். பாம்பு கடி விஷக்கடி மந்திரங்களை ஜெபித்து சித்தி வர ஏற்ற நட்சத்திரம். பேய் பிசாசுகள் தொல்லை ஆவிகள் தொல்லையிலிருந்து விடுபட இந்த நட்சத்திரத்த நாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவலங்காடு போன்ற சிவபெருமான் தலங்களுக்கு சென்று சிவபெருமானின் வழிபட நன்று. இந்த நட்சத்திரத்திற்கு யாழ் என்கிற பெயரும் உண்டு. ஆகவே வீனை வாசிக்க கற்றுக் கொள்கிற மக்கள் இந்த நட்சத்திரத்தில் தொடங்கினால் சிறப்பு.Tamil Vastu days 2022

திருவாதிரை என்று சொன்னாலே சிவபெருமான் நடராஜ பெருமான் தான் நினைவில் வருவார்கள். ஆக நடன அரங்கேற்றம் செய்ய இந்த நட்சத்திரம் சிறப்பு. எள் கடுகு கம்பு ராகி போன்ற தானிய வகைகளை விதைக்க ஏற்ற நட்சத்திரம். கால புருஷ வரிசையில் மேசத்திற்கு மூன்றாம் வீடாக இருக்கக்கூடிய மிதுனத்தில் திருவாதிரை இருக்கின்றது. மூன்றாம் பாவம் என்பது ஆராய்ச்சி, குறுகிய பயணங்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ராகு என்பது ஒரு மர்ம கிரகம் என்பதால் மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் சாஸ்திர ஆராய்ச்சிக்கு உகந்த நட்சத்திரம். சிதம்பர ரகசியத்திற்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஆகவே திருவாதிரையில் சிவ பூஜை செய்தால் சிதம்பர ரகசியத்தை அறிய முடியும். திருவாதிரையில் நோய்வாய் பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ எளிதில் குணமடையாது. ஆகவே ருத்ர ஜபம் செய்தால் மட்டுமே குணம் கிடைக்கும். எந்த நோயாக இருந்தாலும் சரி அந்த நோய் விலகவில்லை என்று சொன்னால் , திருவாதிரை நட்சத்திர நாள் என்று சிவபெருமானை வழிபட்டு சிகிச்சையை தொடங்க நிச்சயமாக குணமாகும்.Tamil Vastu days 2022

Till yesterday we saw the star in Mrigasir in the order of the astrological stars. Today we will look at Tiruvadhirai Nakshatra. Thiruvadhirai is the sixth star among the 27 stars. Its image is called Pavalmani Rasamani. The deity of this star is Lord Shiva. Rahu is the lord of this star. As the deity of this star is Lord Shiva, it is the best star for worshiping Shiva. Especially Kalabhairava is an auspicious star to worship. If you start Bhairavar worship in this Nakshatra, you will surely get grace. The animal of this star is the dog. Rahu is the lord of this star. As Rahu is the best star for cursing mantras and performing mantras. A suitable star for praying snakebite poison mantras. It is good to go to Lord Shiva places like Thirunageswaram, Chidambaram, Thiruvalangadu and worship Lord Shiva on this Nakshatra day to get rid of the trouble of ghosts and devils. This Nakshatra also has the name Yaffa. So people who are learning to play veen should start with this star. Tamil Vastu days 2022.

When you say Tiruvadhirai, Lord Shiva and Lord Nataraja come to mind. So this star is special for performing dance. Sesame Mustard Rye Ragi is a suitable star for sowing grains. Thiruvadhirai is in Gemini, which is the third house for Aries in the Kala Purusha line. The third sin is research, which can even be taken as short trips. As Rahu is a mysterious planet and the lord of Gemini is Mercury, it is a favorable star for Shastra research. Chidambara Secret has close links with Tiruvadhirai Nakshatra. So if you do Shiva Puja in Tiruvadhirai you can know the secret of Chidambara. If you fall ill or have an accident in Tiruvadhirai, you will not recover easily. So only by doing Rudra Japa will you get cure. If any disease is said to have not gone away, worship Lord Shiva on Thiruvadhirai Nakshatra day and start treatment for sure.Tamil Vastu days 2022
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  எதிர்ப்பு
ரிஷபம்- தடங்கல்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- லாபம்
சிம்மம்- வெற்றி
கன்னி- சுகம்
துலாம் – புகழ்
விருச்சிகம்- நற்செயல்
தனசு- அன்பு
மகரம்- வரவு
கும்பம்- போட்டி
மீனம் –   மேன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Tamil Vastu days 2022

________________________

#வரலாற்றில்_இன்று
#October_20

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)

சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)

இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)

Tamil Vastu days 2022,Chennai vastu tamil calendar,Live chennai:Vastu-Dates,

Loading