Chennaivastu calendar How to call Vastu consultant

How to call Vastu consultant

28.9.2022
#தமிழ்_காலண்டர்.

How to call Vastu consultant

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

தினசரி நாள்காட்டி 28.9.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.11ந் தேதி . புதன்கிழமை இரவு 1.29 வரை திருதியை திதி . பிறகு  வ.சதுர்த்தி திதி.விடியற்காலை 5.39 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு விசாகம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

ஒரு வாஸ்து நிபுனரை அழைத்து எப்படி பார்க்க வேண்டும் என்கிற விஷயம் நிறைய மக்களுக்கு தெரிந்திருக்காது. இது எதற்காக தெரிய வேண்டும்,?. என்பதற்கான இந்த பதிவு. இந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திற்காக என்னை ஒருவர் அழைக்கும் பொழுது நான் அனைத்து விஷயங்களையும் குறிப்பிடுகி விசயம், இப்படி வர வேண்டும்  கழிவறை அமைப்பு இப்படி வரவேண்டும், சமைக்கும் அறை  அமைப்பு இப்படி வர வேண்டும், படுக்கை அறைகள் இப்படி வர வேண்டும் என்று சொல்வேன். இந்த இடத்தில் நீங்கள் சொல்கிற விஷயத்தை என்னால் செய்ய முடியாது. இதனை மட்டும் நான் மாற்றி அமைத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பொழுது, அது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் செய்ய முடியும். இல்லை என்றால் அதனை செய்ய முடியாது. எடுத்துக்காட்டாக படிகள் என்பது தொங்கும் படிகளாக வரவேண்டும். இல்லை என்றால் வீட்டில் உட்புறத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும். தொங்குபடிகள் என்பது சுவர் இல்லாது, ஜன்னல் லாப்ட் எப்படி அமைப்போ? அதனைப் போல இந்த இடத்தில் அமைக்க வேண்டும்.

அதனை சரி செய்ய முடியாது என்று சொன்னால் எனது ஆலோசனையின் படி வீட்டிற்கு உள்ப்படியாக மாற்றிவிடலாம். இல்லை எனக்கு வெளிப்படி தான் வேண்டும் ஆனால் நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடியாது  நான் சொல்கிற படி தான் செய்வேன் என்று சொல்லும் பொழுது அந்த இடத்திலிருந்து நான் நகர்ந்து விடுவேன். ஏன் என்று சொன்னால்?. நான் சொல்வதைக் கேட்காத போது அங்கு எனக்கு வேலை கிடையாது . அதே சமயம் ஒரு வாஸ்து  என்கிற விஷயத்தில் வாஸ்து நிபுணர்  சொல்வதை முழுவதுமாக ஆமோதிக்க வேண்டும். ஒரு வாஸ்து என்பவர் தவறாக சொல்வது கிடையாது. அதே சமயம் பெரிய அளவில் தவறுகள் இல்லை, ஓரளவுக்கு அது பெரிய தவறுகளை கொடுக்காது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மிகப்பெரிய தவறுகளை சொல்லும்போது கேட்க வேண்டும். இல்லை நான் இப்படித்தான் செய்வேன் என்று சொன்னால் அவர்கள் விருப்பத்திற்கு கட்டிக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட வேண்டும். ஆக அப்படி இருக்கும் மக்கள் வாஸ்து  நிபுணரை அழைக்கக்கூடாது. அவர்கள் நேரத்தின் அடிப்படையில் அது வேலை செய்யும். நல்ல நேரம் இருக்கும்போது நன்றாக இருக்கும். தவறான நேரங்கள் ஜாதகத்தில் வாழ்க்கையில் வருகின்றபோது தவறுகளை கொடுத்து விடும். அது அவர்களுடைய கர்மா என்று தான் விட்டுவிட வேண்டும்.   ஆக வாஸ்து நிபுணரை அழைக்கும் போது அவர் வாஸ்து  சொல்வதைக் கேட்கிற நிலையில் இருந்தால், நீங்கள் அழையுங்கள். இல்லையென்றால் உங்கள் மனம் போன கட்டிக் கொள்ளுங்கள். என்றுதான் நான் நினைப்பேன். ஆக இந்த பதிவு என்பது என்னை அழைக்க நினைக்க அவர்கள் நான் சொல்வதை கொஞ்சமாவது கேட்க வேண்டும். நான் சொல்வது என்பது உங்களின் நன்மைக்காக மட்டுமே. எனக்கான நன்மைக்காக கிடையாது. இதை புரிந்து கொண்டால் போதும். ஒரு சில இடங்களில் நான் சொல்வதைக் கேட்காத நிலையில் ஏற்பட்ட மன சங்கடத்தில் காரணமாக இந்த பதிவு. யாரையும் தவறாக குறிப்பிடுவதற்காக  கிடையாது.How to call Vastu consultant

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- வெற்றி
கடகம்- சுகவீனம்
சிம்மம்- மேன்மை
கன்னி- நேர்மை
துலாம் – முயற்சி
விருச்சிகம்- வெற்றி
தனசு- அசதி
மகரம்- துணிவு
கும்பம்- குழப்பம்
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_28

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)Contact Details of chennai vastu,

உலக ரேபிஸ் நோய் தினம்

பசுமை நுகர்வோர் தினம்

தாய்வான் ஆசிரியர் தினம்

சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)

அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)

டொரண்டோ, ஒண்டாரியோவின் தலைநகரமானது(1867)

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)

Loading