Chennai vastu Can you buy a ready-made house? vastu

Can you buy a ready-made house? vastu

27.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 27.9.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.10ந் தேதி . செவ்வாய்கிழமை இரவு 2.30 வரை துதியை திதி . பிறகு  #திருதியை திதி. நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pmCan you buy a ready-made house? vastu

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

கட்டி முடித்த வீட்டை வாங்கலாமா?. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வருகிறது. தாராளமாக வாங்கலாம். ஆனால் வாஸ்து விதிகளை உட்பகுத்தி கட்டி இருக்கிறார்களா?. என்று சொன்னால் 100% அங்கு இருக்காது. இந்த இடத்தில் வாஸ்து விதிகளை யார் உட்புகுத்தி கட்டுவார்கள் என்று சொன்னால், என்னைப்போல வாஸ்து மட்டுமே தொழிலாக பத்து வருடங்கள் கடந்து  செய்கிற ஒரு மனிதர் கட்டடம் கட்டிக் கொடுக்கும் வேலையை தொழிலை செய்தால் கண்டிப்பாக அவர் செய்து கொடுப்பார். இல்லை என்றால் கிடைக்காது. இந்த இடத்தில் மனிதர்கள் இரண்டு வகை உண்டு. எப்படி கட்சிகளில் வலதுசாரி, இடதுசாரி என்கிற விஷயம் இருக்கிறதோ?. எப்படி இறைவழிபாட்டில் இறைவனை வணங்காதவர்கள். இறைவனை வணங்குபவர்கள் என்று இரு கூட்டங்கள் இருக்கிறதோ?. அதுபோல வாஸ்து சார்ந்த விஷயத்திலும், ஜோதிடம் சார்ந்த விஷயத்திலும், ஜோதிடத்தை நம்புகிற ஒரு கூட்டம் உண்டு. வாஸ்துவை நம்புகிற ஒரு கூட்டம் உண்டு.ஆக ஜோதிடம் மற்றும், வாஸ்துவை நம்பாத ஒரு கூட்டம் உண்டு. அந்த வகையில் ஒரு சிலர் வாஸ்து மட்டுமே வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒரு சிலரோ வீட்டின் அழகு தான் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த இடத்தில் பெரிய அளவிற்கு அழகுபடுத்தி கட்டுகிற வீடுகளில் வாஸ்து என்கிற விஷயம் இருக்காது. அந்த வகையில் ஒரு கட்டிடம் கட்டும் தொழிலை,  தொழிலாக செய்கிற ஒரு நிறுவனம் நிச்சயமாக அழகு என்கிற விஷயத்தை தான் பார்க்கும். வாஸ்து என்கிற விஷயத்தை பார்க்காது. ஓரளவுக்கு  சமையலறை,   படுக்கையறை,  விருந்தினர் அறை வடகிழக்கில் வரவேற்பு அறைகள் இதோடு நிறுத்திக் கொள்வார்கள். இதற்குப் பிறகு இருக்கிற விஷயங்களை கண்டிப்பாக பார்க்க மாட்டார்கள் . எனக்குத் தெரிந்த வாஸ்து ஞானத்தின் படி கட்டிக் கொடுக்கிற மனிதர்கள் வீட்டை தாராளமாக வாங்குங்கள். ஒரு வாஸ்து நபரை துணைக்கு வைத்துக்கொண்டு வாங்குங்கள். அல்லது எங்கள் வாஸ்து நபர் சொல்கிற முறையில் நீங்கள் கட்டிக் கொடுக்கிறீர்கள் என்றால் நாங்கள் வாங்கிக் கொள்ளுகிறோம் என்று கேளுங்கள். அப்போதுதான் வாஸ்து என்கிற விஷயம் உங்களுக்கு கிடைக்கும்.Can you buy a ready-made house? vastu

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தனம்
ரிஷபம்- கீர்த்தி
மிதுனம்- உபயம்
கடகம்- துணிவு
சிம்மம்- லாபம்
கன்னி- சோர்வு
துலாம் – வெற்றி
விருச்சிகம்- செலவு
தனசு- சாந்தம்
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- உயர்வு
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_27

Chennai vastu calendar

உலக சுற்றுலா தினம்

#கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)

உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)

மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)

Loading