30.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 04 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி
தினசரி நாள்காட்டி 30.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.13ந் தேதி . ஞாயிறு. விடியற்காலை 3.29 மணி வரை சஷ்டி திதி பிறகு சப்தமி திதி. இன்று காலை 7.13 வரை மூலம் நட்சத்திரம்.பிறகு பூராடம் நட்சத்திரம்.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
நட்சத்திரங்கள் சார்ந்த வரிசையில் 27 நட்சத்திரங்களில் இன்று பார்க்கிற நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை தெரிந்து கொள்வோம். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு . இந்த நட்சத்திரத்தில் நீசம் அடையும் கிரகம் சந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். இந்த நட்சத்திரத்தின் வடிவம் முறம். குயவன் சக்கரம். அல்லது தோரணம். இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் முற்றம் . இந்த நட்சத்திரத்தில் நான்கில் மூன்று பகுதி துலாம் ராசி. ஒரு பகுதி விருச்சிக ராசியில் இருக்கின்றது.
விசாக நட்சத்திரத்தில் நீச்சமடைகிற கிரகம் சந்திரன் என்கின்ற காரணத்தால் கிணறு குளம் ஆகியன சீர்திருத்த அல்லது, சுத்தப்படுத்த அல்லது, கிணறுகளை மூட உகந்த நட்சத்திரம். வாஸ்துரீதியாக கிணறுகளை மூட உகந்த நட்சத்திரம். உணவு தானியங்களை குறிக்கும் நட்சத்திரம் சந்திரன் என்பதால் இந்த நட்சத்திரம் வரும் நாளில் கதிர் அறுக்கவும் தானியம் வாங்குதல் கூடாது. சுக்கிரனுடைய ராசியும் செவ்வாயினுடைய ராசியும் இணைந்து இருக்கிற நட்சத்திரம் விசாகம் என்ற காரணத்தால், விசாகம் நட்சத்திரம் வருகின்ற நாளில் விரதம் இருந்து மாலை நேரத்தில் முருகப்பெருமானை வழி விட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பார்கள்.
_____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஆர்வம்
ரிஷபம்- இசைவு
மிதுனம்- உதவி
கடகம்- பயணம்
சிம்மம்- குழப்பம்
கன்னி- வெற்றி
துலாம் – அன்பு
விருச்சிகம்- புகழ்
தனசு- நன்மை
மகரம்- பிரிவு
கும்பம்- சினம்
மீனம் – நட்பு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.