சுவாதி நட்சத்திரம் Swathi Star Life Prediction

Swathi Star Life Prediction

29.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 04 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி

தினசரி நாள்காட்டி 29.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.12ந் தேதி .  சனிக்கிழமை காலை 8.15 மணி வரை சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி. இன்று காலை 8.53 வரை கேட்டை நட்சத்திரம்.பிறகு மூலம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

  இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

  27 நட்சத்திரங்களில் 15 வது ஆக இருக்கக்கூடிய சுவாதி நட்சத்திரம் சார்ந்த பதிவுவோடு சந்திப்போம். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் இருக்கின்றது. இதன் அதிபதி சுக்கிரன். ஸ்வாதியின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரத்தில் உச்சமடைகிற கிரகம் சனி. இந்த நட்சத்திரத்தில் நீசம் அடைகிற கிரகம் சூரியன். இந்த நட்சத்திரத்தின் வடிவம் தீபம். இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் பருத்திக்காடு. கால புருஷ ராசியில்  ஏழாம் வீடாக இருக்கக் கூடிய ராசி துலாம் ராசி. ஆக கல்யாணம் செய்ய சிறப்பு. சுவாதியில் உச்சமடையும் கிரகம் சனி என்ற காரணத்தால் தொழில் தொடங்க, வேலைக்கு விண்ணப்பம் செய்ய தொழில் சார்ந்த உத்தியோகம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் உகந்த நட்சத்திரம். தொழிலாளர்கள் தொழிற்சாலை முதலாளியுடன் பேச்சுவார்த்தை நடத்த, தொழிலாளர்களின் உரிமைக்கு போராட உகந்த நட்சத்திரம் சுவாதி. நட்சத்திரத்தில் நீச்சமடையும் கிரகம் சூரியன். ஆக அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது .;அரசியல் துறை சார்ந்த மக்கள் இந்த நட்சத்திரத்தில் வரும் நாளில் எந்தவித புதிய முயற்சிகளிலும் எடுக்க வேண்டாம். அதாவது புதிய பதவி புதிய பொறுப்பு போன்ற விஷயங்களை எடுக்கக் கூடாது.. இந்த நாளில் யாருக்கும் ஜாமீன் நடவடிக்கைகளை கொடுக்கக் கூடாது.Swathi Star Life Prediction

திருமணம் ஆகியும் பல வருடங்களாக குழந்தை இல்லாத இருக்கிற மக்கள் சுவாதி வரும் நாளில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதாவது முத்து சிற்பிகள் மழை நீரை வாங்கி அதன் வயிற்றில் முத்து உருவாவது போல , ராகுவின் அம்சத்தில் உள்ள பெண்ணின் யோனிக்குள் விந்து சிந்தினால் நிச்சயமாக பெண் வயிற்று குழந்தை எனும் முத்து உருவாகும் என்பது ஐதீகம். ஆக சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன் கொடுக்கக் கூடாது. கடன் கொடுத்தால் அந்த கடன் தொகை திரும்பி வராது. வசூல் ஆகாது. கடனாளி அந்த தொகையை விளுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள். ஆகவே சுவாதி வரும் நாளில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பொருள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜோதிட நிலையின் வழியாக ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை விளங்கும். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு. பொய் பித்தலாட்டம் வஞ்சகம் சூது ஆகிய நிலைக்கு ராகு காரகம். ஆக சுவாதி நட்சத்திர உச்சமடையும் கிரகம் சனி. சனி வறுமையை குறிக்கும் கிரகம் . ஆக சனி ராகு சேர்க்கை ஏற்பட்டால் அதற்கு தரித்திர யோகம் என்று நமது ஜோதிட விதி கூறுகிறது. ஆக சனிக்கிழமையும் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் எந்த விஷயத்திலும் கவனம் என்பது முக்கியம். ஆக சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் திருவாலங்காடு சென்று அங்கிருக்கும் சிவபெருமானை வணங்கினால் களத்திர தோஷம் புத்திர தோஷம் ஆகியன விலகும்.Swathi Star Life Prediction
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   நன்மை
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- சினம்
கடகம்- கவனம்
சிம்மம்- பரிசு
கன்னி- பாசம்
துலாம் – நலம்
விருச்சிகம்- நிம்மதி
தனசு- வரவு
மகரம்- லாபம்
கும்பம்- பக்தி
மீனம் –  மறதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Swathi Star Life Prediction

________________________

#வரலாற்றில்_இன்று
#October_29

துருக்கி குடியரசு தினம்(1923)

தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)

சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)

Loading