மனைகள் பிரிப்பதில் வாஸ்து


மனைகள் பிரிப்பதில் வாஸ்து அதாவது, ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் எப்படி மனைகளை பிரிக்க வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வது நலம். எனது வாஸ்து வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய , ரியல் எஸ்டேட் ப்ரோமொட்டர்கள் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்றனர். அவர்களுக்கு நான் மனைகளைப் பிரித்துக் கொடுக்கிற நிகழ்வாக ஒரு சில விஷயங்களை உட்படுத்திக் கொடுக்கும் பொழுது , அந்த மனையில் வீடு கட்டு வசிக்கிற மக்களுக்கு நல்ல ஒரு யோக நிலை கொடுக்கிற  மனைகளாக இருக்கும். ஆக அதற்கு தகுந்தார் போல மனைகளை பிரிக்க வேண்டும். மனைகளின் தண்ணீர் டேங்க் சார்ந்த விஷயம் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி தென்மேற்கில் தனியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த நகருக்கு பார்க் என்கிற விஷயத்தை வடகிழக்குப் பகுதியில் அமைக்க வேண்டும் . அந்த பார்க் அமைக்கக்கூடிய இடத்தில் தண்ணீர் டேங்க் அமைக்க கூடாது.

சாலைகளை பொறுத்த அளவில் அதிக சாலைகள் கிழக்கு மேற்கு செல்லும் அமைப்பின் படி இருப்பது போலவும், குறைவான அமைப்பில் தெற்கு வடக்கு சாலைகள் இருப்பது போலவும் அமைத்துக் கொண்டால் அற்புதமான பலனை கொடுக்கிற மனையாக இருக்கும். அதே சமயம் தெற்கு பார்த்த மனைகளை வடக்கு பார்த்த மனை  அதிகமாக பிரிப்பது நலம் . மேற்கு கிழக்கு பார்த்த மனைகளை ஓரளவுக்கு பிரித்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் தெற்கு பார்த்த மனைகளை ஒரு சில வாஸ்து வகையில்  முன்பாகத்தை அமைக்கும் போது அந்த மனை வடக்கு பார்த்த மனையை போல நல்ல பலனை கொடுக்கிற மனையாக இருக்கும். ஆக இதுபோல ஒவ்வொரு மனைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கிழக்குப் பார்த்த மனை நல்லதென்று சொல்வோம். ஆனால் மேற்கு பார்த்த மனை நல்லது என்று சொல்ல மாட்டோம்.  அதனையும் கிழக்கு மனைக்கு பொருந்துவது போல அமைத்துக் கொள்வது, கிழக்கு பார்த்த மனை என்ன பலனை செய்யுமோ அது போல அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அதற்காக மனைகளை பிரிப்பது நலம்

Loading