வாஸ்து அமைப்பில் ஒரு கடை வாடகைக்கு பிடிக்க

வாஸ்து அமைப்பில் ஒரு கடை வாடகைக்கு பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதனை மூன்று அல்லது நான்கு வகையாக பிரிக்கலாம். வடக்கு பார்த்த கடைகளுக்கு ஒரு விதமான பலன்களையும், கிழக்கு பார்த்த கடைகளுக்கு ஒரு விதமான பலன்களையும், மேற்கு பார்த்து கடைகளுக்கு ஒரு விதமான பலன்களையும், தெற்கு பார்த்த கடைகளுக்கு ஒரு விதமான பலன்களையும், அதேபோல் சாலைகள் என்று பார்க்கும் பொழுது கிழக்கும் வடக்கும் சாலைகள் இருந்தால் ஒரு விதமான பலன்களையும், கிழக்கும் தெற்கும் சாலைகள் இருந்தால் ஒரு விதமான பலன்களையும், மேற்கும் தெற்கும் சாலைகள் இருந்தால் ஒரு விதமான பலன்களையும், வடக்கும் மேற்கும் சாலைகள் இருந்தால் ஒரு விதமான பழலன்களையும் கொடுக்கும் .

இந்த இடத்தில் ஒரு வாஸ்து வகையில் முதல் தரமான கடைகள் என்று பார்க்கும் பொழுது திசைகாட்டிக்கு 360 டிகிரியில் இருந்து 90 டிகிரி வரை இருக்கக்கூடிய கடைகள் நல்ல பலன்களை கொடுக்கிற கடைகளாக இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் 270 டிகிரிகளில் இருந்து 320 டிகிரிகள் வரை திசையை பார்த்து கடைகள் வருவது பலன்களை கொடுக்கும். அடுத்த நிலையில் 150 டிகிரிகளில் இருந்து 135 டிகிரிகள் வரை தெற்கு திசையை பார்த்து இருக்கிற கடைகள் நல்ல பலன்களை கொடுக்கும். இதனைத் தவிர நான் குறிப்பிடப்படாத திசைகாட்டிக்கு திசையை பார்த்திருந்தால் அந்த கடைகளை தவிர்த்து விட வேண்டும். வாஸ்துவில் மிக மிக முக்கியமான விசயம் திசைகாட்டிகள் பொருந்தவில்லை என்று சொன்னால், அந்த இடத்திற்கு போகாமல் இருப்பது வாஸ்துரீதியாக நல்லது.

Loading