ஸ்டோர் ரூம் வாஸ்து Vastu Advice Store Room

வாஸ்து அமைப்பில் பொருள் வைக்கிற ஸ்டோர் ரூம்  என்கிற விஷயம் மிக மிக முக்கியமாக வாஸ்துவில்  பார்க்கப்படுகிறது. ஏனென்று சொன்னால் ஒரு வீடு இருக்கிற பட்சத்தில் உணவு சார்ந்த நிகழ்வு என்பதும், உடை சார்ந்த நிகழ்வு என்பதும் உறக்கம் சார்ந்த நிகழ்வு என்பது மனித வாழ்க்கைக்கு முக்கியம். இந்த மூன்றையும் இணைத்து கொடுக்கிற விஷயம்தான் வீடு என்கிற ஒரு இருப்பிடம். அந்த இருப்பிடத்திற்கு வாஸ்து சாஸ்திர விதிகளின்படி கட்டிடம் கட்டுவது, அந்த கட்டிட அமைப்பு இருப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் உணவுக்கு பிரதானமாக கருதப்படுகிறது சமையல் செய்யக்கூடிய பொருட்கள். குறிப்பாக அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், ஒரு சில இல்லங்களில் வருட கணக்கில் இருப்பு வைத்துக் கொள்வார்கள்.  ஏனெனில் ஒவ்வொரு தானியங்களும் ஒவ்வொரு கால கட்டங்களில் விளையக்கூடிய நிகழ்வாக இருக்கும். அப்பொழுது நாம் அதனை வாங்கி வைத்துக் கொண்டால், எந்த இடத்திலும் மருந்து வைத்து பாதுகாக்கிற சூழ்நிலையாக ஒரு பொருளுக்கு இருக்காது. எப்படி ஒரு பொருளை காற்றோட்டம் இல்லாத ஒரு டப்பாவில் அடைத்து வைக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. புழு, பூச்சிகள் பிடிப்பதில்லையோ அதுபோல, உணவுப் பொருட்களுக்கு என்று ஒரு காற்றோட்டம் குறைந்த அளவில் இருக்கிற ஒரு அறையை ஏற்படுத்தும் பொழுது, அந்த பொருட்களில் நெடுநாட்களுக்கு கெடாத அமைப்பில் இருக்கும். அந்த வகையில் அரிசி என்பது வருடத்தில் மூன்று முறை வரக்கூடிய நிகழ்வு. ஆக முப்போகம் விளைகின்ற அரிசியை எப்பொழுது நமக்கு தேவையோ, ஒரு ஆறு மாதங்களுக்கு கெடாத அமைப்பில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும். அதேபோல தானியங்களை பொறுத்தளவில் வருட விளைச்சலாக இருக்கும். எப்படி ஆடிப்பட்டம் தேடி விதைத்து, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடைக்கும், தை, மாசி மாதங்களில் சந்தைகளுக்கு வரும் பொழுது, அந்த பொருட்களை நீங்கள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் கெடாமல் இருப்பதற்கு ஒரு அறையை ஏற்படுத்தி காற்றுப்புகாத அமைப்பில் அந்த அறையை அதிகபட்ச மூடப்பட்ட அமைப்பாக வைத்துக்கொள்ளும் பொழுது, வருடத்திற்கான அனைத்து பொருட்களும் உங்களது இல்லத்தில் இருக்கும். அதுவே நீங்கள் மாதமாதம் வாங்கும் பொழுது விளைச்சல் இல்லாத காலகட்டங்களில்,  நீங்கள் வாங்கக்கூடிய பொருட்கள் உடலுக்கு கெடுதலான செல்பாஸ் என்கிற மருந்து வைத்து பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களே கடையில் இருந்து கிடைக்கும். அந்த வகையில் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி ஒரு இல்லத்திற்கு எப்படி படிக்கும் அறை முக்கியமோ அதேபோல , ஒரு பொருள் வைக்கக்கூடிய ஸ்டோர் ரூம் என்கிற ஒரு விஷயம் மிக மிக ஒரு வீட்டிற்கு முக்கியம்.  அந்த வகையில் ஸ்டோர்ரூம் சார்ந்த பொருள் வைக்கிற அறைகளை எங்கு அமைக்கலாம் என்று பார்க்கும் பொழுது, ஒரு இல்லத்தின் தெற்கு பகுதி மட்டுமே சாலச்சிறந்தது. ஒரு சில இடங்களில் பெரிய அளவில் ஸ்டோர் ரூம் சார்ந்த அமைப்பு ஏற்படுத்தும் பொழுது தென்மேற்கு பகுதி சாலச்சிறந்தது.

ஆனால் அந்த  இடத்தில் படுக்கையறை  என்று முடிவு செய்யும் பொழுது அதற்கு கிழக்கு இடம் பொருள் வைக்கும் அறையாக பயன் படுத்திக் கொள்ளலாம். அல்லது சமையலறைக்கு மேற்குப் புறத்தில் பொருள் வைக்கும் அறைகளை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைய இடங்களில் இந்த அமைப்பில்தான் எனது பயணங்களில் நான் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றேன். ஒரு சில இல்லங்களில் எதிர்மறையாக பொருள் வைக்கிற ஸ்டோரூம் அமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள் எடுத்துக்காட்டாக, சமையலறைக்கு வடக்கு புறத்திலும், சமையலறைக்கு தெற்குப் புறத்திலும் அமைப்பார்கள். அப்படி அமைக்கும் பொழுது சமையலறைக்கு வடக்குப் புறத்தில்  எடையுள்ள அமைப்பாக மாறி விடும். அதேபோல சமையல் அறைக்கு தெற்கு புறத்தில்  சமையல் அறைக்கு ஒரு தோஷமுள்ள  அமைப்பாக மாறிவிடும். எப்பொழுதுமே சமையலறை என்பது தென்கிழக்கு மூலைக்கு தான் வரவேண்டும். அதனை தெற்குப் பகுதிக்கு தென்கிழக்கு மூலைக்கு கொண்டு செல்லாது, கிழக்கு பாகத்தில் கொண்டு வரும்போது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். மேலும் ஸ்டோர் ரூம் என்கிற ஒரு விஷயம் உணவுப் பொருட்களை வைப்பதற்கு மட்டும் கிடையாது. கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆகட்டும் திருவிழா காலங்களில் மட்டும் பயன்படுத்துவதற்காக பெரிய பாத்திரங்களை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களை வீடு முழுக்க தெரிகின்ற அமைப்பில் வைக்கும் பொழுது வீட்டின்  அழகு நிலை என்பது சிறப்பாக இருக்காது. ஆக அந்த பொருட்களை வைப்பதற்கு கூட நாம்  ஸ்டோர் ரூம் பயன்படுத்துவது சிறப்பு. அந்த வகையில் எக்காரணம் கொண்டும் கிழக்கு சுவரை தொட்ட அமைப்பிலோ, வடக்கு சுவரில் தொட்ட அமைப்பிலோ பொருள் வைக்கும் அறை இருக்கக்கூடாது. மேற்கு மற்றும், தென்மேற்கு  மற்றும், தெற்கு சுவர் என்றால் தென்கிழக்கு தவிர்த்து அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.ஸ்டோர் ரூம் சார்ந்த அறைகளில் தடுப்புகள், ஸ்லாப் போன்ற விஷயங்களை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அரை அடி அகலத்திலும், ஒரு அடி அகலத்திலும், 2 அடி அகலத்திலும், பெரிய பெரிய பாத்திரங்களை வைக்கிற ஒரு கப்போர்டு அமைப்பாக நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். இந்த அறையின் நான்கு புறங்களிலும் கூட ஏழுஅடி லிண்டல் லெவல் செல்ப் அமைப்பை நீங்கள் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம் . எப்பொழுதுமே ஸ்டோர் ரூம்என்கிற வாஸ்து முறை என்பது மூடப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

underground water tank as per vastu

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *