Arulmigu veera alagar Temple
இன்றைய #ஆலய_தரிசனம்;



அருள்மிகு ஶ்ரீ (மஹாலக்ஷ்மி) சவுந்தரவல்லி தாயார் சமேத
ஶ்ரீ (சுந்தரராஜப்பெருமாள்)
வீர அழகர் திருக்கோயில்,
(வானரவீர மதுரை)
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம்.
( மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாள் திருக்காட்சியளிப்பதைப்போலவே, மானாமதுரையிலும்
13-ஆம் நூற்றாண்டில்,
மாவலி வாணாதிராயர் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த வைணவ தலத்தின் கருவறையிலும் திருமால், சுந்தரராஜப்பெருமாளாக
திருமகள், நிலமகளுடன்
நின்ற திருக்கோலமாய் அழகு
அருட்காட்சியளிக்கிறார்.
தனி சன்னதியில் வீற்றிருக்கும், ஶ்ரீ சவுந்தரவல்லி எனும் மஹாலக்ஷ்மி தாயாருக்கு, வெள்ளிக்கிழமைகளில்
தாமரைத்திரியால் விளக்கேற்றி வேண்டிட,
தடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு நிச்சயம் நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம்.Arulmigu veera alagar Temple
(சிறப்புக்கள் பல பெற்ற, இத்திருத்தலத்தின்
பதிவுகள் சில மட்டும்)
மதுரை அழகர் பெருமாளின் மீது
அதீத பக்தி கொண்டிருந்த மன்னருக்கு, ஒருமுறை அத்தலம் செல்ல இயலமால் போகவே, மனம் வருந்திய அரசருக்கு கனவில் தோன்றிய இறைவன்,
ஒரு எழுமிச்சம்பழத்தினை இரண்டாக பிளந்து வைகை ஆற்றில் விடும்படியும் , அதன் ஒரு பாகம் கரை ஒதுங்கும் இடத்தில்,
தனக்கு ஆலயமும், மறுபாகம் கரை சேரும் இடத்தில் திருக்குளத்தையும் அமைக்கும்படி உணர்த்திட அதன்படியே மன்னர் கோவிலையும், எழுமிச்சையின் மறு பாகம் கரை ஒதுங்கிய
சற்று தூரத்தில் (4-k.m.தூரம்) குளத்தையும் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது.
(மருத்துவ குணம் நிறைந்த ‘நூபுர கங்கை’ எனும் இத்திருக்குளத்தின்
நீர், எழுமிச்சை சாறு போல அமிலத்தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது)
பெருமாளைப்போலவே
இத்தலத்தின் ஶ்ரீ அனுமன் சிறப்புமிக்கவராம்.
இந்த அனுமனுக்கு சாற்றப்படும் வடைமாலை ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போவதில்லை என்பது ஆச்சரியம்.
(இராமாயண காலத்தில்,
சீதாதேவியை தேடி வானர வீரர்கள் இங்குள்ள பிருந்தாவனம் எனும் இடத்திலிருந்த சுவைமிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டாகியதாம். பின்னர் ஶ்ரீராமர் அங்கு வந்து
அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வீரர்களாக்கிதாலேயே இத்தலம், ‘வானரவீர மதுரை’ என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி தற்போதைய ‘மானாமதுரை’ என்றானதாம்)
மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு போலவே,
இந்த வீர அழகரும்
ஆற்றில் இறங்கும் விழா,
சித்திரை மாதம் 10-நாட்கள் சிறப்பாக நடைபெறுவது இத்திருத்தலத்தின்
சிறப்புமிக்க பெரும் திருவிழாகாலமாகும்
மதுரையின் அரசி மீனாட்சி என்றால்,
இந்த மானாமதுரையில் அவள் பெயர்
ஆனந்த வல்லி.
நம் ஈசன்
அங்கு சொக்கநாதர், இங்கு சோமநாதர். அங்கு திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி தன் அன்பு சகோதரியின் திருமணத்தை காண வருகிறார் கள்ளழகர். அவருக்கு நிகராக மானாமதுரையில்
எழுந்தருளுபவர்
வீர அழகர். இப்படி மதுரைக்கு இணையாக சித்ராபவுர்ணமித் திருவிழா,
இந்த மானாமதுரையிலும் களைகட்டுவதைக்காண கண்கோடி வேண்டும்).
ஓம் நமோ நாராயணாய நமக: