#Chennai_vastu calendar

#Chennai_vastu calendar

தினசரி நாள்காட்டி 19.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.2ந் தேதி .  புதன்கிழமை  மதியம் 2.15 மணி வரை நவமி திதி பிறகு  தே.தசமி திதி. இன்று காலை 7.47 வரை பூசம் நட்சத்திரம்.பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்.    .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திரங்கள் சார்ந்த பொது விஷயங்கள் வகையில் ஒவ்வொரு நட்சத்திரமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் மிருஹஷிரிஷம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவில் வழியாக தெரிந்து கொள்ளலாம். மிருகசீரிஷம் என்று சொன்னாலே இதில் தனியாக பிரித்து பார்க்கும் பொழுது மிருகம் என்றால் விலங்கு.  சீரிடம் என்று சொன்னால் சிரசு அல்லது தலை என்று கூறலாம். இந்த நட்சத்திரத்தில் உருவம் மானின் தலையை போன்று இருக்கும். ஆகவே மிருகசீரிஷம் என்று அழைக்கப்படுகிறது. சில நூல்களில் இதன் உருவ அமைப்பு தேங்காய் கண் என்று சொல்கின்றனர். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இது ஒரு கால் அற்ற உடல் அற்ற, தலையற்ற நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் உருவம் மான் தலை போல் இருக்கின்ற காரணத்தால், ஆடு மாடுகள் குதிரைகள் வாங்க உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாயாக இருக்கின்ற காரணத்தால் ஆயுதப் பயிற்சி மற்றும், விவசாய வேலை செய்வதற்கு உகந்த நட்சத்திரம்..

இந்த நட்சத்திரம் கால புருஷ தத்துவத்தின் படி மூன்றாவது ராசியான மிதுனத்தில் இருக்கின்றது. தலையில் காதை குறிக்கும்.மற்றும் செவ்வாய் கூர்மையான ஆயுதத்தை குறிக்கின்றது. ஆக இது போன்ற காரியங்களுக்கு உகந்த நட்சத்திரம். காது கேளாத மக்கள், நோய்க்கு சிகிச்சை பெறுகின்ற மக்கள் இந்த நட்சத்திரத்தில் தொடங்க சிறப்பு. மூன்றாம் இடம் என்பது உடலில் கையைக் குறிக்கும். எனவே கைநீட்டி உதவி கேட்க நினைப்பவர்கள் இந்த நட்சத்திரத்தில் உதவி கேட்கலாம். மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று வண்டி வாகனங்கள் வாங்க, அது விருத்தி அடையும். பெண்கள் காதில் கம்மல் அணியும் போது இந்த நட்சத்திரம் உகந்தது. புதிய நகைகள் வாங்க உகந்தது. வண்டி வாகனம் , கால்நடை வாங்க வாகனம் ஏற,காதணிஅணிய இந்த நட்சத்திரம் சிறப்பு.#Chennai_vastu calendar
_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   லாபம்
ரிஷபம்- தாமதம்
மிதுனம்-அன்பு
கடகம்- புகழ்
சிம்மம்- ஏமாற்றம்
கன்னி- நற்செய்தி
துலாம் – பயம்
விருச்சிகம்- நிறைவு
தனசு- பரிசு
மகரம்- நன்மை
கும்பம்- ஆக்கம்
மீனம் –    செலவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#chennai_vastu_consultant

Loading