விருச்சிக ராசியில் சனிப்பெயர்ச்சி2023-2025

உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிற்கு சனி பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு நான்காம் வீடு அம்மா, நிலம், வீடு மற்றும் சுக போகங்களை குறிக்கின்றது. சொந்த வீட்டில் பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேற்குறிப்பிட்ட அந்த வீடுகளின் தன்மைகேற்ற பலன்களை உங்களுக்கு அளிப்பார்.தொழில் ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டை சனி ஏழாம் பார்வை பார்க்கிகறார். எனவே பணிகள் அதிகமாக காணப்படும். வளர்ச்சியில் தாமதங்கள் இந்த காலக்கட்டத்தில் இருப்பது சகஜமே. உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் சில தொல்லைகளை அளிப்பார்கள்.  உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். உங்களால் முடிக்க முடியும் என்று கருதும் பணிகளை மட்டும் ஒத்துக் கொள்ளுங்கள். பணியில் சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.குடும்ப உறவு வகையில்
உங்கள் தந்தையுடனான உறவு சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. உடன்பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.  திருமண வாழ்வில் அமைதி இருக்கும்.
திருமணமான தம்பதிகளின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இந்தக்காலகட்டத்தில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தொழில் மூலம் லாபங்கள் மற்றும் ஆதாயங்கள் கிட்டும். ஒரு சிலர் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து வெற்றி காண்பார்கள்.  நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்வீர்கள். நிலம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும்.  மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள்.  தங்கள் இலக்குகளை நோக்கி ஈடுபாட்டுடன் பயணிப்பார்கள்.  தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். ஆரய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த பலனைக் காண்பார்கள். ஒரு சிலர் மேற்கல்வி  பயில உதவித் தொகை பெறுவார்கள். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அர்தாஷ்டம பெயர்ச்சி என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் பேணுங்கள்.


 Tags: Viruchigam rasi sani peyarchi 2023 in tamil sani peyarchi 2023 to 2026 Viruchigam rasi Viruchigam rasi sani peyarchi 2023 to 2026 in tamil Viruchigam rasi sani peyarchi 2023 Viruchigam rasi sani peyarchi 2023 in tamil sani peyarchi 2023 Viruchigam Viruchigam rasi sani peyarchi palan 2023 sani peyarchi 2023 to 2026 palangal in tamil விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026

Loading